புதன், சூரியன், சுக்கிரன் சேர்க்கை எப்போது.?
இந்த மாதத்தில் 3 ராஜயோகங்கள் உருவாகி உள்ளது. புதன் பகவான் மிதுன் ராசிக்குள் பயணித்து வருகிறார். இந்த நேரத்தில் ஜூன் 15-ம் தேதி சூரிய பகவான் சூரிய பகவானிடம் பெயர்ச்சி அடைகிறார். இவர்கள் இருவரும் இணைவதால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனை தொடர்ந்து ஜூன் 29-ம் தேதி சுக்கிர பகவான் ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதனால் மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த மூன்று யோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்க போகிறது. அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு புதன், சுக்கிரன், சூரியன் போன்ற பெயர்ச்சியால் வெற்றியை அடைய போகிறீர்கள். புதிய வீடு அல்லது வாகனம் வாங்குவீர்கள். இந்த நேரத்தில் உங்களுக்கு தைரியமானது அதிகமாக காணப்படும். பணியிடத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்துவீர்கள். இதன் மூலம் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். தாய் உங்களின் எல்லா செயல்களுக்கும் பக்க பலமாக இருப்பார்கள்.
ரிஷபம்:
புதன், சுக்கிரன், சூரியன் போன்ற பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்மானதாக இருக்கும். உங்களுடைய வருமானம் ஆனது இந்த நேரத்தில் அதிகமாக இருக்கும். ஏதேனும் சொத்துக்கள் இருந்தால் அவற்றின் மூலம் சிறந்த பலனை அடைவீர்கள். அலுவலகத்தில் வெளி பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். இதன் மூலம் சம்பளமும் அதிகமாக காணப்படும். சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு இந்த கால கட்டத்தில் லாபம் அனைத்து அதிகரிக்கும். படிக்கும் மாணவர்களாக இருந்தால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு புதன், சுக்கிரன், சூரியன்போன்ற பெயர்ச்சியால் இவர்களுக்கு தொட்ட காரியங்கள் அனைத்திலும் சாதகமான பலனை காண்பீர்கள். இந்த நேரத்தில் உங்களுக்கு பணத்திற்கு எந்த பிரச்சனையும் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி ஆனது அதிகரிக்கும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் கைக்கு சேரும். வியாபாரம் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். இந்த நேரத்தில் நீங்கள் பணத்தை அதிகமாக சேமிப்பீர்கள். தொழில் செய்பவர்களுக்கு வளர்ச்சி காணப்படும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |