யப்பப்பா தொழில் ரீதியாக இந்த ராசிக்காரவங்க எல்லாம் டாப் லெவல்ல தான் இருப்பாங்களாம்..!

mercury transit astrology in tamil

Mercury Transit Astrology  

பொதுவாக நாம் பேசும் போது சில அர்த்தங்களை சுட்டி காண்பிப்பதற்காக பழமொழிகளை கூறுவோம். அத்தகைய பழமொழிகளில் புதன் கிடைத்தாலும் பொன் கிடைக்காது என்று வார்த்தையினை நாம் அதிகமாக உபயோகப்படுத்துவோம். இதில் புதன் கிழமையினை பெருமிதமாக கூறும்படியான அர்த்தத்தை குறிக்கிறது. அதேபோல் ஆன்மீகத்திலும் புதன் கிரகத்திற்கு என்று ஒரு தனி இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதன் ஆனது கிரங்களின் அரசன் என்று அழைக்கப்படுகிறது. இப்படிப்பட்ட புதன் கிரகம் ஆனது இந்த மாதம் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு செல்கிறது. ஆகையால் ஜூன் 1 முதல் ஜூன் 7-ஆம் தேதி வரை மேஷ ராசியில் தான் புதன் சஞ்சரிப்பார். இதன் படி பார்க்கும் போது இந்த ஜூன் 7-ஆம் தேதிக்குள் தொழில் ரீதியாக அதிர்ஷ்டமான பலன்களை பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்று தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!

மேஷத்தில் புதன்:

தற்போது ஜோதிடத்தின் படி மேஷ ராசியில் புதன் சஞ்சரித்து இருப்பது குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மட்டும் தொழில் மற்றும் வியாபாரம் ரீதியாக பணம், புகழ் என நிறையவற்றினை அளிக்கும் விதமாக காணப்படுகிறது.

ஆகவே இத்தகைய பலன்களை பெறப்போகும் ராசிகள் எதுவென்று விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கும்பம் ராசி:

கும்ப ராசிமேஷத்தில் புதன் சஞ்சரித்து இருக்கும் இத்தகைய காலம் ஆனது கும்ப ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக எதிர்பார்த்த மாதிரியான பலன்களை அளிக்கிறது. இதுநாள் வரையிலும் வேலை இல்லமால் கஷ்டப்பட்டவர்களுக்கு கூடிய விரைவில் வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

 

மேலும் முன்பே தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் நேரமாக உள்ளது. அதுமட்டும் இல்லாமல் குடும்பத்திலும் மகிழ்ச்சிகள் நிறைந்து இருக்கும்.

சிம்மம் ராசி:

சிம்ம ராசி

ஜூன் 7-ஆம் தேதி வரை சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை மட்டுமே புதன் கிரகம் ஆனது அளிக்கிறது. உங்களின் திறமைக்கு ஏற்ற மாதிரியே தொழில் பாராட்டுகள் முதல் மற்ற அனைத்தும் கிடைக்கும்.

இத்தகைய பலன்கள் மூலம் நீங்கள் அதிகமாக வெற்றியினை பெறலாம். மேலும் ஆசைகளும் நிறைவேறும்.

இந்த ராசிக்கார நண்பர்கள் ஜூன் 15 வரை பொறுத்துக்கொள்ளுங்கள் நல்ல காலம் தேடி வருகிறது 

மிதுனம் ராசி:

மிதுன ராசி

மிதுன ராசிக்காரர்களுக்கு காணப்பட்ட நிதிநிலை பிரச்சனைகள் பெரும்பாலும் குறைந்துவிடும் நிலைமை உண்டாகும். அதேபோல் அன்றாட செலவிற்கு போக மீதம் இருக்கும் பணத்தினை நல்ல முறையில் சேமிக்கும் வாய்ப்பும் கிட்டும்.

குடும்பத்தில் சந்தோசமான சூழ்நிலை ஏற்பட்டு ஒருவருக்கு ஒருவரிடம் புரிதல் உணர்வு அதிகரித்து காணப்படும்.

தனுசு ராசி:

தனுசு ராசி

காலசக்கரத்தில் 9-வது ராசியாக இருப்பது தனுசு ராசி தான். இந்த தனுசு ராசிக்காரர்களுக்கு ஜூன் 7 வரை லாபம் பெரும் காலமாக இருக்க போகிறது. இதன் படி பார்க்கும் போது புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும் காலகமாகவும், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைக்கூடி வரும் சூழல் ஏற்படும் என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது.

கடக ராசி:

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு என்று பார்க்கும் போது முதல் படியாக வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு கூடிய விரைவில் வேலை கிடைத்து விடும் என்று ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது.

மேலும் தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு போட்டியாக இருப்பவர்களை விட அதிகமாக நீங்கள் பண வரவினை பெரும் யோகம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இதன் மூலம் உங்களுக்கான ஒரு தனி அங்கீகாரம் கிடைக்கும்.

புதன் ரிஷபத்தில் அமர்வதால் ஜூன் 7 முதல் கொட்டோகொட்டுனு கொட்டப்போகிறது  யாருக்கு தெரியுமா 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்