ரிஷபத்தில் புதன்
புதன் பகவான் செல்வம், புத்திசாலித்தனம், தொழில் போன்றவற்றில் மாற்றத்தை ஏற்படுத்துவார். அதனால் புதன் பகவான் நாளை ஜூன் 7ஆம் தேதி அன்று, மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இவர் ஜூன் 24-ம் தேதி வரை ரிஷப ராசியில் தான் இருப்பார். இதனால் எந்தெந்த ராசிகளுக்கு நல்ல பலன்களை அள்ளி தர போகிறார், என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க..
புதன் பெயர்ச்சி யாருக்கும் நல்ல பலன்களை அள்ளி தர போகிறார்:
மீன ராசி:
மீன ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சியால் சில கஷ்டமான சூழ்நிலையையும் எளிதில் கையாளுவார்கள். புதிய நபர்களை சந்திப்பீர்கள், இதனால் நன்மைகள் தான் கிடைக்கும். உங்களுடைய பேச்சில் தைரியம் இருக்கும். சமூக வேலைகளில் முழு ஈடுபாட்டுடனும், சுறுசுறுப்பாகவும் நடந்து கொள்வீர்கள். இதனால் வெளிவட்டாரத்தில் உங்களை மதிப்பார்கள்.
கடன் தொல்லை தீர இதை மட்டும் செவ்வாய்கிழமை செய்திடுங்கள்
மகர ராசி:
புதன் பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்கள் எந்த வேலை செய்தாலும் அதில் வெற்றி தான் கிடைக்கும். பொருளாதாரத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி குடும்பத்தில் வருமானம் அதிகரிக்கும். புதிய வேலைவாய்ப்புகள் தேடி வரும். உங்களின் துணையுடன் அன்பு அதிகரிக்கும், இதனால் நல்லுறவை பராமரிப்பீர்கள்.
விருச்சிக ராசி:
விருச்சிக ராசிக்காரர்கள் எந்த வேலையாக இருந்தாலும், அதனை திட்டமிட்டு செயல்படுவீர்கள். இதனால் பணியில் வெற்றி கண்டு மகிழ்ச்சியாக இருப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் முன்னேற்றம் அடைவீர்கள். திருமண வயதில் இருப்பவர்களுக்கு வரன்கள் அமையும்.
உப்பு ஜாடியில் இந்த ஒரு பொருளை வைத்தால் மட்டும் போது கடன் பிரச்சனை தீர்ந்து பணவவரவு அதிகரிக்கும்
கன்னி ராசி:
புதன் பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு சிறந்த நேரமாக இருக்கும். நீங்கள் கடினமான சூழ்நிலையையும் உங்களின் புத்தி கூர்மையால் சமாளித்து விடுவீர்கள். உங்களின் பணிகளை உயரதிகாரர்கள் பாராட்டுவார்கள்.
கடகம் ராசி:
கடக ராசிகாரர்களுக்கு புதன் பெயர்ச்சி நன்மை வாய்ந்ததாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் நீங்கள் செய்கின்ற செயலுக்கு ஆதரவாக இருப்பார்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.
ரிஷப ராசி:
ரிஷப ராசிக்காரர்கள் மன வலிமையோடு முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். உங்களின் நலனுக்காக சில முடிவுகளை எடுப்பீர்கள். உங்களின் காதலில் வெற்றியை அடைவீர்கள்.
பணக்காரனைக் கீழ் தள்ளும் இந்த காரியத்தை செய்யாதீர்கள்
மேஷ ராசி:
மேஷ ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி நல்ல பலனை தரும். வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் பணவரவு அதிகரிக்கும். கஷ்டமான வேலையையும் எளிதாக முடித்து காட்டுவீர்கள்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |