Budhan Peyarchi Palangal
நவகிரகங்களில் ஒன்றான புதன் பேச்சு, வியாபாரம், படிப்பு, புத்திசாலித்தனம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றின் தலைவனாக கருதப்படுபவர். புதன் பகவான் வரும் ஜூலை 08 -ஆம் தேதி சந்திரன் ஆளும் ராசியான கடக ராசிக்குள் பெயர்ச்சியடைய உள்ளார். புதனின் பெயர்ச்சியால் 12 ராசிகளிலும் தாக்கம் ஏற்படும். இருப்பினும், 3 ராசிகளுக்கு மட்டும் அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும் என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. குறிப்பாக வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும் வருமானத்தையும் பெறப்போகிறார்கள். எனவே புதனின் பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிக்காரார்கள் யாரென்று இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
புதன் ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைவதால் சில ராசிகளுக்கு பலன்களை அள்ளி தர போகிறது..
Mercury Transit July 2023 in Tamil:
கன்னி ராசி:
புதன் பகவான், கன்னி ராசியின் 11 -வது வீட்டில் நுழைகிறார். இதனால் கன்னி ராசிக்காரர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். மேலும், பரம்பரை தொழில் செய்து வருபவர்களுக்கு தொழிலில் நல்ல லாபமும் வெற்றியும் கிடைக்கும். எனவே புதனின் பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு இக்காலத்தில் பணவரவு ஏற்படும்.
மகர ராசி:
புதன் பகவான், மகர ராசியின் 7 -வது வீட்டிற்குள் செல்கிறார். இதனால் மகர ராசிக்காரர்கள் செய்யும் அனைத்து செயல்களிலும் வெற்றி பெறுவார்கள். மேலும், புதனின் பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களுக்கு இக்காலம் அதிர்ஷ்டம் அளிக்கக்கூடியதாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் இதுவரை முடியாமல் இருந்த நீதிமன்ற வழக்குகள் நல்ல முறையில் முடிவுக்கு வரும்.
சனியின் வக்ர பெயர்ச்சியினால் நவம்பர் மாதம் வரைக்கும் இந்த ராசிகளுக்கு பண மழை பொழிய போகிறது..
மிதுன ராசி:
மிதுன ராசியின் அதிபதியாக விளங்கும் புதன் மிதுன ராசியின் 2 -வது வீட்டிற்குள் செல்கிறார். இதனால் மிதுன ராசிக்காரர்களுக்கு இக்காலம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். குறிப்பாக தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றதியும் வெற்றியையும் பெறுவார்கள். அதுமட்டுமில்லாமல் எதிர்பாராத வகையில் பணவரவு வரும். மிதுன ராசிக்காரர்கள் இக்காலத்தில் உங்களின் பேச்சு திறமையால் பல காரியங்களை செய்து முடிப்பீர்கள். மேலும் சொத்து மற்றும் வாகனம் போன்றவை வாங்கும் வாய்ப்பும் வரும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |