கன்னியில் நுழையும் புதன்
ஆன்மிகத்தில் கிரகங்கள் தங்களில் ராசிகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மாற்றி கொண்டே இருக்கின்றன. இதனுடைய தாக்கமானது எல்லா ராசிகளிலும் காணப்பட்டாலும் சில ராசிகளுக்கு மட்டும் தான் அதிர்ஷ்டத்தை வழங்குகிறது. அக்டோபர் 1, 2023 அன்று, கிரகங்களின் ஆட்சியாளரான புதன் தனது சொந்த ராசியான கன்னியில் நுழைகிறார். இதனால் மூன்று ராசிகளுக்கு நன்மைகளை அள்ளி தர போகிறது. ஜோதிடத்தில், புதன் கிரகம், பொருளாதாரம், கணிதம், வணிகம் மற்றும் நுண்ணறிவு ஆகியவற்றின் நன்மையாகக் கருதப்படுகிறது. மேலும், கன்னி மற்றும் மிதுன ராசிக்கு அதிபதி புதன். தனது ராசி அடையாளத்தை மாற்றுகிறது. இதனால் எந்தெந்த ராசிகளுக்கு நன்மை என்று தெரிந்து கொள்வோம்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியானது சாதகமாக இருக்கும். நீங்கள் இந்த நேரத்தில் வருமானம் அதிகரிக்கும். இதனால் எதிர்காலத்தில் உதவும் வகையில் பணத்தை முதலீடு செய்வீர்கள். மேலும் நீங்கள் இதுவரை ஏதும் முதலீடு செய்திருந்தால் அவற்றிலிருந்து நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும், மேலும் வாடிக்கையாளர்களும் அதிகரிப்பார்கள்.
வாரி வழங்கும் சுக்கிரன் பெயர்ச்சியினால் வாழ்க்கையில் பண வரவு அதிகரிக்கப்போகும் ராசிக்காரர்கள்…!
மிதுனம்:
மிதுன ராசிக்கு புதனின் மாற்றம் நன்மைகளை வழங்குகிறது. மிதுன ராசிக்கு அதிபதியான புதன் நான்காம் பாகையில் சஞ்சரிப்பதால் வீட்டில் பொருள் வசதிகளை அதிகப்படுத்துவீர்கள். தந்தையின் சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். புதிதாக வாகனம் வாங்குவீர்கள். மேலும் இதுவரை வேலை இல்லையென்று கவலைப்படுபவர்களுக்கு இந்த நேரத்தில் வாகனம் வாங்குவதற்கான யோகம் இருக்கிறது. நிலம் மற்றும் சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சியானது மிகுந்த நன்மைகளை வழங்க போகிறது. நீங்கள் மாணவர்களாக இருந்தால் இந்த நேரம் உங்களுக்கு உகந்ததாக இருக்கும். திடீரென்று பணவரவு அதிகரிக்கும். இதனால் மகிழ்ச்சி அடைவீர்கள். மேலும் எதிர்கால பயன்பாட்டிற்காக பணத்தை சேமிப்பீர்கள். இதுவரை வேலை இல்லை என்று கவலைப்படுபவர்களுக்கு விருப்பமான வேலை கிடைக்கும்.
ராகு பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை தான் மிகவும் பிரகாசிக்க போகின்றது
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |