மேஷ ராசி கடவுள், அவர்கள் செல்ல வேண்டிய கோவில்கள் | Mesha Rasi Kadavul
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களும் தங்கள் ராசிக்கு அதிபதி யார் என்பதைத் தெரிந்துகொண்டு, அவர்களின் ராசிக்குரிய கோயில்களில் சென்று வழிபட்டால் நல்ல பலன்கள் கிட்டும் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. ஒவ்வொருவரும் பிறக்கும்போதே நட்சத்திரமும் ராசியும் உடன் வந்துவிடும். நமது ராசியைத் தெரிந்துகொண்டு அதன் பலன்களுக்கேற்ப நம் வாழ்க்கையைத் திட்டமிட்டுக் கொண்டு இறைவனை சரணடைவது வாழ்வில் எல்லா நற்பேறுகளையும் பெற உதவும் என்கிறார்கள் ஜோதிட சாஸ்திர வல்லுநர்கள். உங்களுடைய வாழ்க்கையில் கஷ்டம் ஏற்படும் போதுராசிக்குரிய கடவுளை வணங்கும் போது கஷ்டங்கள் நீங்கும். இன்றைய பதிவில் மேஷ ராசிக்காரர்கள் செல்ல வேண்டிய கோவிலை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
மேஷ ராசிக்காரர்கள் குணங்கள்:
மேஷ ராசிக்காரர்கள் நினைத்த காரியத்தை முடிக்க வேண்டும் என்று குணம் உடையவர்களாக இருப்பார்கள். எந்த செயலையும் வேகமாக செய்து முடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இந்த ராசியில் செவ்வாயின் ஆதிக்கம் பெற்றிருப்பதால் வீடு மற்றும் நிலம் வாங்கும் யோகம் கிடைக்கும்.
மேஷ ராசிக்காரர்கள் செல்ல வேண்டிய கோவில்:
மலையும், மலை சார்ந்த இடம் என்பது மேஷ ராசியை குறிக்கிறது. அதனால் இவர்கள் தங்களின் ராசிக்கான கடவுளை வணங்கும் போது அவர்களின் வாழ்க்கையில் உயர்ந்து கொண்டே இருக்கும். அதனால் மேஷ ராசிக்காரர்கள் முருகனை வழிபடலாம். முக்கியமாக பழனி தண்டாயுதபாணியை வணங்கலாம். இவரை நீங்கள் ஒவ்வொரு முறை வழிபாடு செய்வதன் மூலம் உங்களின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படுவதை காணலாம்.
அடுத்து திருவிடைக்கழி முருகரையும் வணங்கலாம். இவரை வணங்கினால் இதுவரை உங்களின் வாழ்க்கையில் முடிவில்லாத செயல் ஆனது முடிவுக்கு வரும். மேலும் மேஷ ராசி பெண்கள் இந்த கோவிலுக்கு செல்வதால் செவ்வாயால் ஏற்படும் கஸ்டங்களிலிருந்து விடுபடலாம்.
நட்சித்திர படி செல்ல வேண்டிய கோவில்:
அஸ்வினி நட்சத்திரகாரர்கள் திருச்செந்தூர் முருகனை வழிபடலாம்.
பரணி நட்சத்திரகாரர்கள் அழகர் மலை கள்ளழகரை வணங்கினால் உங்களின் வாழ்க்கையில் எல்லா வளமும் கிடைக்கும்.
கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் நாகப்பட்டினம், சிக்கல் சிங்காரவேலனை வணங்க வேண்டும்.
மேஷ ராசிக்காரர்கள் இந்த கோவிலுக்கு மட்டும் தான் செல்ல வேண்டும் என்று அர்த்தம் கிடையாது. மற்ற கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். இந்த கோவிலுக்கு சென்று வழிபடுவதால் கூடுதல் பலன்களை பெறலாம்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |