Meshathil Guru
ஒவ்வொரு வருடமும் கிரங்களின் அடிப்படையில் தவறாமல் சனி பெயர்ச்சி மற்றும் குரு பெயர்ச்சி ஆனது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இத்தகைய பெயர்ச்சிகள் அனைத்தும் ஆன்மீகத்தின் படி 12 ராசிகளுக்கும் அதனுடைய ராசி மற்றும் நட்சத்திரத்தின் கீழ் பலன்களை அளித்து வருகிறது. இதன்படி பார்க்கும் போது 2023-ஆம் ஆண்டிற்கான குரு பெயர்ச்சியின் போது குரு பகவான் ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி அன்று மேஷ ராசியில் பெயர்ச்சி அடைந்து உள்ளார். அதோடுமட்டும் இல்லாமல் அடுத்த 16 மாதங்களுக்கு மேஷ ராசியிலேயே சஞ்சரிக்கவும் உள்ளார். இதன் காரணமாக குரு பகவான் 3 ராசிகளுக்கு மட்டும் அதிர்ஷ்டமான யோகத்தை அளிக்கும் விதமாக பலன்களை அளிக்கிறார். அத்தகைய பலன்களை பெறப்போகும் ராசிக்காரர்கள் யாரென்று பார்க்கலாம் வாருங்கள்..!
ஜூன் 7 முதல் தலைகீழாக மாறப்போகும் ராசிகள் எது தெரியுமா
குரு பெயர்ச்சி 2023 பலன்:
மேஷ ராசியில் குரு பகவான் சஞ்சரித்து உள்ளதால் அடுத்த 16 மாதங்களுக்கு மூன்றே மூன்று ராசிகளுக்கு மட்டும் எதிர்பாராத வகையில் இருக்கக்கூடிய நல்ல பலன்களை அளிக்கிறார்.
தனுசு ராசி:
ராசியில் வில் போன்ற அமைப்பினை கொண்டிருப்பது தான் தனுசு ராசி. இத்தகைய தனுசு ராசியில் குரு பகவான் 5-வது வீட்டில் சஞ்சரித்து இருக்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அளிக்கும் வகையில் பலன்கள் காணப்படும்.
அதுமட்டும் இல்லாமல் குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். மேலும் நீண்ட நாட்களாக பிரச்சனையில் இருந்த முதலீடுகள் இனி வரும் காலங்களில் சுமுகமாக முடியும்.
கடக ராசி:
ராசியில் 4-வது ராசிக்காரர்கள் ஆகிய கடக ராசிக்காரர்களுக்கு இத்தகைய காலங்கள் அனைத்தும் பொன்னான காலங்கள் என்று தான் ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. கடக ராசியில் குரு பகவான் 10-வது வீட்டில் சஞ்சரிப்பதால் வியாபாரம் செய்வோருக்கு நல்ல லாபம் மற்றும் வருமானம் கிடைக்கும்.
மேலும் அலுவலகத்தில் பணிபுரிவோருக்கு பதவி உயர்வு மற்றும் புகழ் உண்டாகும். நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நல்ல முடிவுக்கு வரும். ஆனால் உடல் நலத்தில் மட்டும் சிறிய குறைபாடுகள் வந்து நீங்கும்.
மேஷ ராசி:
மேஷ ராசியில் குரு பகவான் நுழைந்தாலும் கூட அந்த ராசிக்காரர்களுக்கு யோகமான பலன்களை தான் தருகிறார். இந்த பலன்கள் காரணமாக எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.
அதுமட்டும் இல்லாமல் இதுநாள் வரையிலும் காணாத பண வரவு, பணியிடத்தில் புகழ் மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றி என இவை அனைத்தும் நிறைந்த வாழ்க்கையாக இருக்கும். ஆனால் என்ன தான் நல்ல பலன்கள் கிடைத்தாலும் கூட எந்த விஷயத்திலும் பொறுமை மற்றும் கவனமாக இருத்தல் அவசியம்.
புதன், சூரியன் சேர்க்கையால் இந்த ராசிகாரர்களுக்கு யோகம் தான்
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |