பெண்கள் மெட்டி அணிவது எதற்காக அதனை பற்றிய ரகசியம் தெரியுமா?

Advertisement

பெண்கள் காலில் மெட்டி அணிவது ஏன்?

நண்பர்களே வணக்கம் இன்று நாம் முக்கியமான விஷயத்தை பற்றி தான் பார்க்கப்போகிறோம். பொதுவாக பெண்கள் மெட்டி அணிவது தமிழ் கலாசாரமாக உள்ளது. அதனை அனைத்து கல்யாணத்தில் பார்த்திருப்போம். சில கல்யாணத்தில் ஆண்களுக்கும் மெட்டி அணிந்திருப்பார்கள். இதற்கு பலவிதமான காரணங்கள் உள்ளது. முக்கியமாக பெண்கள் மெட்டி அணிவதற்கு நிறைய விதமான காரணங்கள் உள்ளது அதனை பற்றி தெளிவாக காண்போம் வாங்க..!

மெட்டி அணிவது ஏன்:

பொதுவாக திருமணம் என்றால் முதலில் பெண்களுக்கு அணிகலனாக தருவது குங்குமம், தாலி, மெட்டி இதனை தான் அணிகலனாக தருகிறார்கள். இன்றையவரை இதனை போற்றி பாதுகாக்காது வருகிறார்கள்.

இதையும் படியுங்கள் ⇒ ஆடி மாதம் ஏன் பிரிக்கிறார்கள் தெரியுமா?

பெண்கள் காலில் மெட்டி அணிவது ஏன்:

ஒரு பெண் பெரியமனுசியாக வந்துவிட்டால் என்றால் அவளுக்கு தடை என்னும் ஒரு கம்பியை வளையமாக செய்து அவளுடைய மெட்டி அணியும் விரலில்  போட்டுவிடுவார்கள். அதற்கு காரணம் அவளுடைய உடலில் கர்ப்பப்பையில் ஏற்படக்கூடிய மாற்றம் எந்த விதத்திலும் அவளை பாதிக்கக்கூடாது அது நல்ல படியாக இருக்க அதனை போட்டுவிடுவார்கள். அதனை ஒரு வருடம் அல்லது மறுசடங்கு ஆகும் வரை போட்டுவிடுவார்கள்.

திருமணத்தில் மெட்டி எதற்காக போட வேண்டும்:

திருமணத்தில் கணவனால் அந்த பெண்ணுடைய கால்களை தொட்டு அம்மிமேல் வைத்து உன்னுடைய கற்பு இந்த கல் போல் உறுதியாக இருக்கவேண்டும் என்று சொல்லிவிட்டு அங்கு அணிகலனாக போடுவது மெட்டியாகும்.

இந்த மெட்டி போட்டுக்கொள்வது கல்யாணம் ஆகியவரா என்று தெரிந்துகொள்ள போடவேண்டுமா என்று கேட்டால் இல்லை.  மெட்டிக்குள் நிறைய ரகசியங்களை ஒளித்து வைத்திருக்கிறார்கள்.

முக்கியமாக பெண்கள் திருமணத்திற்கு முன்பும் திருமணத்திற்கு பின்பும் நிறைய உடல்ரீதியாக மாற்றத்தை அடைவார்கள் அதில் முக்கியானது கர்ப்பப்பை. நம் உடலில் தலை முதல் பாதம் வரை எல்லாவிதமான நரம்புகளும் கால் பாதங்களில் படுகிறது என்பது அதிகளவு யாருக்கும் தெரியாது.

கால் விரலில் முக்கியமாக மெட்டி அணியும் விரலில் ஒரு நரம்பு இருக்கும் அது கர்ப்பப்பைக்கு செல்லக்கூடிய நரம்பு ஆகும். அதில் இரும்பினால் அல்லது வெள்ளியினால் செய்த மெட்டியை அந்த விரலில் போடுவதால் நன்மை கிடைக்கும்.

அந்த மெட்டியை போட்டுகொண்டு நடக்கும் போது அந்த மெட்டியுடைய அதிர்வானது  நரம்பில்படும் அது கர்ப்பப்பைக்கு செல்லக்கூடிய நரம்பில்படுவதால் அவளுக்கு உடல் ரீதியாக பிரச்சனை வராது.

அதுமட்டுமில்லாமல் ஒரு பெண் கர்ப்பமாக இருந்தால் அவளுக்கு தலை வலி, வாந்தி, மயக்கம போன்ற பிரச்சனை வருகிறது. அப்போது அவளுடைய பாதத்தை தூக்கி விரலை நீவிவிட்டால் அவளுக்கு நல்ல தூக்கம் வரம், அவள் நன்றாக தூங்கி விடுவார்கள். ஆகையால் மெட்டி அணிவது முழுக்க முழுக்க பெண்களின் ஆரோக்கியதிற்காக போடக்கூடியது ஆகும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement