Mistakes to Avoid in Temple in Tamil
நாம் அனைவருக்குமே கடவுள் நம்பிக்கை என்பது அதிக அளவு இல்லை என்றாலும் சிறிதளவேனும் காணப்படும். அதனால் அனைவருமே நாம் நமது மனதிற்கு நெருக்கமான கடவுளை மிக மிக மனமார வணங்குவோம். அதேபோல் நமது மனதிற்கு மிகவும் பிடித்த கடவுள்களை நாம் மனமார வணங்க வேண்டும் என்றால் நாம் முதலில் செல்லுவது கோவில் தான். அப்படி நாம் நமது மனநிம்மதியை தேடி செல்லும் கோவிலுக்கு செல்லும் பொழுது அல்லது சென்று வரும் பொழுது ஒரு சில தவறுகளை செய்வதால் நாம் மிகப்பெரிய பாவத்தை செய்கின்றோம் என்று கூறப்படுகிறது.
அவை என்னென்ன தவறுகள் என்று இன்றைய பதிவில் பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அவை என்னென்ன தவறுகள் என்று அறிந்து கொண்டு அவற்றை மறுபடியும் செய்யாமல் பார்த்து கொள்ளுங்கள்.
கோவிலில் செய்ய கூடாதவை:
பொதுவாக கோவில் என்பது ஒரு புனித தன்மை மிக்கவை என்று நமக்கு தெரியும் அப்படிப்பட்ட கோவிலுக்கு செல்லும் பொது அல்லது சென்று வரும்பொழுது ஒரு சில தவறுகளை செய்வதன் மூலம் நாம் பெற்ற அனைத்து புனியங்களையும் தொலைத்துவிடுகிறோம் என்பது தான் உண்மை.
அதனால் கோவிலுக்கு செல்லும் பொது செய்யக்கூடாத சில தவறுகளை பற்றி இங்கு விரிவாக காணலாம் வாங்க..
- முதலாவதாக கோவிலுக்கு சென்றவுடன் அங்கு உள்ள கொடிமரம், நந்தி மற்றும் பலிபீடம் ஆகியவற்றின் நிழல்களை நாம் நமது கால்களினால் மிதிக்கக்கூடாது.
- அதேபோல் அபிஷிகம் நடக்கும் பொழுது கோவிலை சுற்றிவரக்கூடாது.
- கோவிலுக்குள் இருக்கும் பொழுது எந்த ஒரு மனிதனின் காலிலும் விழுந்து ஆசீர்வாதம் பெற்று கொள்ளக்கூடாது.
- கோவில் படிகளில் உட்கரக்கூடாது. அதேபோல் கோவிலில் தூங்கக்கூடாது.
- கோவிலுக்குள் செல்லும்பொழுது தர்மம் செய்யலாம் மாறாக கோவிலில் இருந்து திரும்பி வரும் பொழுது தர்மம் செய்யக்கூடாது.
- மேலும் கருபகிரகத்தில் விளக்கு எரியாமல் இருந்தால் அப்பொழுது சுவாமியை வணங்கக்கூடாது.
- அதேபோல் மற்றவர்கள் ஏற்றிய விளக்கில் நாம் நமது விளக்கினை ஏற்றக்கூடாது.
- நாம் ஏற்றிய விளக்கினை கையில் ஏந்தி ஆராதனை செய்யக்கூடாது.
- கிரகணம் உள்ள பொழுது கோவிலின் வழியாக சென்றாலும் வணங்க கூடாது.
- புனிய திருத்தங்களுக்கு சென்ற உடனே நமது கால்களை வைக்காமல் தலையில் தண்ணீரை தெளிக்க வேண்டும்.
- கோவிலுக்கு சென்று வந்தவுடன் கை கால்களை கழுவ கூடாது.
கோவிலை எத்தனை முறை சுற்றினால் நல்லது
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |