மிதுன ராசிக்காரர்கள் செல்ல வேண்டிய கோவில்

Advertisement

மிதுன ராசி கடவுள்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களும் தங்கள் ராசிக்கு அதிபதி யார் என்பதைத் தெரிந்துகொண்டு, அவர்களின் ராசிக்குரிய கோயில்களில் சென்று வழிபட்டால் நல்ல பலன்கள் கிட்டும் என்பது ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. ஒவ்வொருவரும் பிறக்கும்போதே நட்சத்திரமும் ராசியும் உடன் வந்துவிடும். நமது ராசியைத் தெரிந்துகொண்டு அதன் பலன்களுக்கேற்ப நம் வாழ்க்கையைத் திட்டமிட்டுக் கொண்டு கடவுளை வழிபட்டால் நன்மைகள் கிடைக்கும். அது போல நமக்கு கஷ்டம் ஏற்படும் காலத்தில் நமது ராசிக்குரிய கடவுளை வழிபடும் போது சிக்கலிருந்து விடுபடலாம்.

மிதுன ராசிகளுக்கு உரிய கோவில்:

மிதுன ராசி கடவுள்

மிருகசீரிஷம் 3, 4-ம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ம் பாதங்கள் வரை உள்ளவர்கள் மிதுன ராசிக்காரர்களாவர். மிதுன ராசிக்கு அதிபதி புதன். புதனின் அம்சமான பெருமாளை வணங்கினால் வாழ்க்கையில் செல்வ செழிப்போடு இருப்பீர்கள்.  மிதுன ராசிக்காரர்கள் திருநெல்வேலி அருகே அமைந்துள்ள இரட்டை திருப்பதி எனப்படும் திருத்தொலைவில்லி மங்கலம் ஆலயம் சென்று வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்களுடைய வாழ்க்கையில் எல்லா வளமும் பெற்று சீரும் சிறப்புமாக இருப்பீர்கள்.

திருநெல்வேலி அருகே உள்ள ஆழ்வார் திருநகரியில் இருந்து வடகிழக்கு திசையில் திருத்தொலைவில்லி மங்கலம் அமைந்திருக்கிறது. பாண்டிய நாட்டு நவதிருப்பதி தலங்களில் இது கேது தலமாகக் கருதப்படுகிறது. இரட்டை திருப்பதி ஆலயங்களில் மற்றொன்று செந்தாமரைக் கண்ணன் திருக்கோயில். மூலவர் செந்தாமரைக் கண்ணன் ஆதிசேஷன் மீது வீற்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.

மேஷ ராசிக்காரர்கள் செல்ல வேண்டிய கோவில்

இந்த கோவிலில் உள்ள பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர். தாமரை, துளசி மாலை அல்லது முத்துமாலை சாற்றி ஏகாதசி திதி அல்லது புதன், சனிக்கிழமைகள் பெருமாளை வணங்கி வர எல்லா வளமும் கிடைக்கும். முக்கியமாக பஞ்சமி, அஷ்டமி தினங்களில் வழிபட்டால் பலன்கள் பலமடங்கு அதிகரிக்கும்.

கோவிலுக்கு எப்படி செல்லலாம்:

தூத்துக்குடி மாவட்டத்தில் தென் திருப்பேரை அருகே இந்த ஆலயம் இருக்கிறது. இரண்டு கோயில்கள் இருந்தாலும் ஒரு ஆலயமாகவே கருதப்படுகிறது. காலை 8 மணி முதல் 12 மணி வரை, மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருநெல்வேலிக்குப் பேருந்து, ரயில் போக்குவரத்து இருக்கிறது. அங்கிருந்து ஆழ்வார் திருநகரி சென்று, தென் திருப்பேரை வழியாக திருத்தொலைவில்லி மங்கலத்தை சென்றடையலாம்.

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement