2023-ஆம் ஆண்டு மிதுன ராசிக்கு எப்படி அமையும் என்று உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

Mithunam Rasi Palan 2023 in Tamil

பொதுவாக நாம் அனைவரின் மனதிலேயும் நமது எதிர்க்காலம் எப்படி இருக்கும் என்று தெரிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதேபோல் பிறந்திருக்கும் புத்தாண்டில் அனைவரின் வாழ்விலும் என்னவெல்லாம் நடக்க போகின்றது என்று தெரிந்துக் கொள்ளவேண்டும் என்ற ஆசையும் நாம் ஒவ்வொருவர் மனதிலும் இருக்கும்.

அந்தவகையில் மிதுன ராசிக்கார்களுக்கு பிறந்திருக்கும் இந்த 2023-ஆம் ஆண்டு எவ்வாறு அமைய போகின்றது என்று தான் இன்றைய பதிவில் காண இருக்கின்றோம். அதனால் மிதுன ராசிக்காரர்கள் இன்றைய பதிவை முழுதாக படித்து இந்த 2023-ஆம் ஆண்டு வாழ்வில் என்னவெல்லாம் மாற்றங்கள் ஏற்படப்போகின்றது என்று முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

2023 ஆம் ஆண்டு கும்ப ராசிக்காரர்களுக்கு இப்படி தான் இருக்கும்

Mithuna Rasi Palan in Tamil: 

Mithunam rasi palan 2023 in tamil

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு மிகவும் சிறந்த பலன்களை அளிக்கக்கூடிய ஆண்டாக அமையும். குறிப்பாக சனியின் ஏழரை முடிவடைவதால் உங்களுக்கு இருந்த அனைத்து மன அழுத்தங்களும் தீர்ந்துபோகும்.

அதனால் உங்களின் ஆரோக்கியத்திலும் எந்தவித பிரச்சனைகளும் இருக்காது. மேலும் உங்களின் தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும்.

மிதுன ராசி தொழில் எப்படி இருக்கும்:

மிதுன ராசிக்காரர்களின் தொழில் ஆண்டின் தொடக்கத்தில் பத்தாம் வீட்டிற்கு அதிபதியான குரு நல்லநிலையில் இருப்பதால் உங்களின் தொழில் நிலைமை நன்றாக இருக்கும். ஆனால் எட்டாம் வீட்டில் அமர்ந்திருக்கும் சனியின் பார்வையால் உங்களுக்கு ஏற்ற தாழ்வுகள் இருக்கும்.

அதிலும் குறிப்பாக ஜனவரி 17 ஆம் தேதி சனி உங்கள் ஒன்பதாம் வீட்டிற்குள் நுழைகிறார். அதன் பிறகு உங்களுக்கு நல்ல காலம் ஆரம்பமாகும். ஆனால் இந்த நேரமும் ஒரு சில மாற்றத்தைக் அளிக்கும்.

மேலும் உங்கள் பணியிடத்தில் உங்களின் அந்தஸ்து அதிகரிக்கும். உங்களுக்கு பதவி உயர்வும் கிட்டும். அதனால் பணிசுமையும் அதிகரிக்கும்.

2023 ஆம் ஆண்டு மீன ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்று உங்களுக்கு தெரியுமா

மிதுன ராசி பொருளாதார நிலை எப்படி இருக்கும்:

Mithunam rasi palan in tamil

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டின் தொடக்கத்தில் சனிப்பெயர்ச்சியின் காரணமாக உங்களின் பொருளாதாரம் சற்று நலிவடைந்தே காணப்படும். மேலும் ஜனவரி மாதம் சூரியபகவான் மகர ராசியில் இருந்து உங்கள் எட்டாவது வீட்டிற்குச் வருகிறார். அதன் பிறகு தான் பிரச்சனைகள் மேலும் அதிகரிக்கும்.

ஜூலையில் சூரியபகவான் உங்களின் ராசியை விட்டு சென்றுவிடுவார். அதனால்  ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரை நீங்கள் செய்கின்ற தொழில் நல்ல லாபம் கிடைக்கும். அக்டோபர் 30-ல் ராகு பகவான் பதினொன்றாம்  வீட்டை விட்டு வெளியேறி பத்தாம் வீட்டிற்கு செல்கிறார்.

அந்நேரத்தில் குரு பகவான் பதினொன்றாம் வீட்டில் இருப்பதால் நீங்கள் மிகவும் செல்வ செழிப்புடன் கண்படுவீர்கள்.

மிதுன ராசி காதல் மற்றும் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்: 

இந்த ஆண்டின் தொடக்கத்தில் உங்களின் காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் சில சண்டை சச்சரவுகள் இருக்கும். அதிலும் குறிப்பாக ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் காதல் உறவுகளில் பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.

ஏப்ரல் 22 ஆம் தேதி குரு பதினொன்றாம் வீட்டில் நுழைந்து உங்கள் ஐந்தாம் வீட்டையும் ஏழாவது வீட்டையும் முழு பார்வையில் பார்க்கும்போது உங்களின் காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் சந்தோசங்களை அவர் அளிப்பார்.

திருமணமாகாத மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு கண்டிப்பாக திருமணம் நடைபெறும்.

 2023 ஆம் ஆண்டு மேஷ ராசிக்கு இப்படி தான் இருக்கும்

மிதுன ராசி குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும்:

Mithuna rasi palan 2023 in tamil

இந்த ஆண்டு மிதுன ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கையில் கலவையான பலனே காணப்படும். அதாவது ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் நான்காவது வீட்டையும் இரண்டாவது வீட்டையும் கண்காணிப்பார் இதன் காரணமாக குடும்ப வாழ்க்கையில் இருந்த மன அழுத்தம் குறையும்.

ஆகஸ்ட் முதல் அக்டோபர் மாதம் வரை குடும்ப உறவுகளில் பதற்றம் அதிகரிக்கும். அதற்கு முன்பு மே 10 முதல் ஜூலை 1 வரை செவ்வாய் உங்கள் இரண்டாவது வீட்டில் இருப்பதால் ​​குடும்ப வாழ்க்கையில் சொத்து தகராறுகள் ஏற்படலாம்.

அக்டோபர் மாதத்தில் புதன் உங்கள் நான்காம் வீட்டில் பெயர்ச்சிக்கும் போது ​​உங்களின் பல பிரச்சனைகள் குறைந்து குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

மிதுன  ராசிகாரர்களின் ஆரோக்கியம் எப்படி இருக்கும்:

இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிதுன ராசிக்காரர்களின் ஆரோக்கியம் சற்று பலவீனமாகத் தான் காணப்படும். இந்த வருடம் முழுவதும் ராகு-கேதுவின் நிலைப்படி உங்களுக்கு வயிற்றில் நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

மேலும் உங்களுக்கு விபத்து ஏற்பட்டு அறுவை சிகிச்சைகள் நடைபெறவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அதனால் உங்களின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.

ஆண்டின் நடுப்பகுதியில் பதினொன்றாம் வீட்டில் குரு மற்றும் ஒன்பதாம் வீட்டில் சனி பெயர்ச்சிப்பது நல்ல ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும்.

வரவிருக்கும் 2023 ஆம் ஆண்டு சிம்ம ராசிக்காரர்களுக்கு எப்படி அமையப்போகின்றது என்று உங்களுக்கு தெரியுமா

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement