Mithunam Rasi Palan 2024
பொதுவாக ஆன்மிகத்தில் நம்பிக்கை இருப்பவர்களுக்கு ஒவ்வொரு நாள் பொழுதும் எப்படி இருக்கிறது என்று அறிந்து கொள்வதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். இதற்காக ராசி பலன், காலண்டர் போன்றவற்றை தினமும் பார்ப்பார்கள். அன்றைய நாளுக்கான பலனை பார்ப்பதால் அன்றைய நாள் ஜாக்கிரதையாக இருப்பார்கள்.
அந்த வகையில் புது ஆண்டு பிறக்க போகிறது என்றால் அந்த ஆண்டு எப்படி இருக்க போகிறது என்ற ஆர்வம் அதிகமாக காணப்படும். உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் 2024-ம் ஆண்டு மிதுன ராசிக்கு எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்வோம்.
தொழில்:
நீங்கள் பணியிடத்தில் வேலை செய்பவராக இருந்தால் உங்களின் புத்திசாலித்தனத்தை செயல்படுத்த வேண்டும். நீங்கள் வெற்றியை அடைவதற்கு கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். 2024-ம் ஆண்டு ஆரம்பத்தில் நன்றாக இருக்கும். பணியிடத்தில் வேயத்ரியை அடைவீர்கள். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு சிறப்பான காலமாக இருக்கும். தனியாரில் வேலை இருப்பவர்களுக்கு வேலைகள் அதிகமாக இருக்கும், இருந்தாலும் குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.
காதல் மற்றும் திருமண வாழ்க்கை:
மிதுன ராசிக்காரர்கள் காதல் செய்பவராக இருந்தால் உங்களின் காதலன் அல்லது காதலியுடன் கருத்து வேறுபாடு ஏற்படும், அவ்வப்போது விட்டு கொடுத்து செல்ல வேண்டும். புதிதாக திருமணம் ஆனவர்களின் வாழ்க்கையானது மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரன் கிடைக்கும். உங்களின் துணையுடன் நேரத்தை கழிப்பீர்கள். மேலும் துணையிடம் வெளிப்டையாகவும், பாசமாகவும் பேசுவீர்கள்.
கன்னி ராசி 2024 எப்படி இருக்கும்
நிதிநிலைமை:
நீங்கள் ஏதும் முதலீடு செய்திருந்தால் அவற்றிலுருந்து நல்ல வருமானம் கிடைக்கும். நீங்கள் ஆசைப்பட்ட பொருட்களை வாங்குவீர்கள். உங்களுடைய வருமானம் அதிகரிக்கும். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அக்டோபர் மாதம் குடும்பத்தில் யாரும் பெரியவர்கள் இருந்தால் அவர்களுக்கு மருத்துவ செலவு செய்ய நேரிடும்.
ஆரோக்கியம்:
உங்களுக்கு கழுத்து வலி அல்லது நரம்பு பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் வேலைகள் அதிகமாக இருப்பதால் மன அழுத்தம் அதிகரிக்கும். குறிப்பாக அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மன அழுத்தம் அதிகமாக இருக்கும். டிசம்பர் மாதத்தில் செரிமான பிரச்சனை ஏற்பட கூடும். அவ்வப்போது நீங்கள் எண்ணெய் பலகாரம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஈசியாக செரிமானம் ஆக கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும்.
எதில் கவனம் வேண்டும்:
அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் .
சொத்து விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
குடும்பத்தில் முக்கியயமான முடிவுகள் எடுப்பதாக இருந்தால் யோசித்து எடுக்க வேண்டும்.
வீடு மற்றும் சொத்து வாங்குவதாக இருந்தால் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஆலோசனை கேட்பது நல்லது.
2024 ஆம் ஆண்டு சனி பகவானின் அருளால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை சும்மா தாறுமாறாக மாற போகுது
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |