வீட்டில் பணம் வரவு அதிகரிக்க.. மணி பிளான்ட் இருக்கும் மண் தொட்டியில் இந்த ஒரு பொருளை புதைத்து வையுங்கள்..!

Advertisement

Money Plant for Astrology in Tamil

இப்போதேல்லாம் பணம் தேவை என்பது அனைவருக்குமே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காரணம் பணம் என்பதை கஷ்டபட்டுத்தான் சம்பாதிக்க வேண்டியதாக இருக்கிறது. இருப்பினும் நமக்கு தடையில்லா பணம் வரவும், வீண் செலவுகள் ஏற்படாமல் தடுக்கவும், மற்றவர்களிடம் கடனாக வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்கவும், வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கவும் மணி பிளான்ட் செடி இருக்கும் மண் தொட்டியில் இந்த ஒரு பொருளை புதைத்து வைத்தால் போதும். பிறகு நீங்களே செல்வ செழிப்பை உணரமுடியும். சரி வாங்க அது என்ன பொருள் என்று இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்வோம்.

மணி பிளான்ட்:

பெரும்பாலான வீடுகளில் பணம் வரவை அதிகரிக்க வளர்க்கப்படும் செடிகளில் ஒன்று தான் மணி பிளான்ட். இதனை பணம் ஈர்ப்பு செடி என்றும் சொல்லலாம். மணி பிளான்ட் செடியை வீட்டில் வளர்பதினால் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். செல்வ வளம் அதிகமாகும், எதிர்மறை எண்ணங்கள் மறையும், மனதிற்கு ஒரு அமைதியை கொடுக்கும்.

மணி பிளான்ட் இருக்கும் மண் தொட்டியில் வைக்க வேண்டிய பொருள்:5 rupee coin

வீட்டில் பணம் வரவு அதிகரிக்க மணி பிளான்ட் மண் தொட்டியில் வைக்க வேண்டிய பொருள் என்னவென்றால் ஒரு ஐந்து ரூபாய் நாணயம் தான்.

ஐந்து ரூபாய் நாணயம் என்பது குபேரனுக்கு உகந்த நாணயம் ஆகும். ஆக இந்த ஐந்து ரூபாய் நாணயத்தை மணி பிளான்ட் இருக்கும் மண் தொட்டியில், புதைத்து வைக்க வேண்டும். இதனை நீங்கள் சூரியன் மறைந்த பிறகு செய்யக்கூடாது. ஆக பகல் நேரங்களில் செய்வது மிகவும் சிறந்தது. இவ்வாறு வைப்பதன் மூலம் நீங்கள் செல்வ செழிப்பை உணரலாம்.

செய்யக்கூடாத தவறுகள்:

உங்கள் வீட்டில் மணி பிளான்ட் செடி இருக்கிறது என்றால் அதனை கீழே படர விடாமல் மேல் நோக்கி படர்ந்து வளரும்படி செய்ய வேண்டும்.

மேலும் மணி பிளான்ட் செடியில் இலைகள் காய்ந்து அல்லது பட்டு போயிருந்தால் அதனை அகற்றிவிடவும்.

இந்த மணி பிளான்ட் செடியை மேல் நோக்கி வளர்க்காமலோ அல்லது இலைகள் காய்ந்து, மஞ்சள் நிறத்தில் பட்டு போயிருந்தாலோ நமக்கு தான் நிதிநிலை பற்றாக்குறை ஏற்படும்.

மணி பிளான்ட் செடியை சிலர் தண்ணீரில் வளர்ப்பார்கள் இருப்பினும் மண்ணில் வளர்ப்பது தான் மிகவும் சிறந்தது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
குபேர விளக்கு ஏற்றும் முறை..!

மணி பிளான்ட் செடி எந்த திசையில் வைக்கலாம்?

பொதுவாக இந்த மணி பிளான்ட் செடியை தென் கிழக்கு திசையில் வைத்து வளர்க்கலாம்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement