மூன்றாம் பிறை அன்று என்ன வழிபாடு செய்யவேண்டும்..?
வணக்கம் பொதுநலம்.காம் நேயர்களே..! இன்றைய பதிவில் நாம் பார்க்க இருப்பது நாம் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள ஒரு ஆன்மிக தகவல்தான். அது என்னவென்றால் மூன்றாம் பிறை அன்று என்ன வழிபாடு செய்ய வேண்டும்..?. அப்படி வழிபாடு செய்வதால் என்னென்ன பயன்கள் எல்லாம் நம்மை வந்து சேரும் என்பதை பற்றித்தான் பார்க்க இருக்கின்றோம். இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
மூன்றாம் பிறை அன்று என்ன வழிபாடு செய்தால் வீட்டில் பணவரவு அதிகமாகும்:
அமாவாசை முடிந்து மூன்றாவது நாள் வரக்கூடிய இந்த மூன்றாம் பிறை தரிசனத்தின் அன்று எந்த மாதிரியான முக்கியமான வழிபாடுகள் செய்ய வேண்டும். அப்படி செய்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் பார்க்கலாம்.
பொதுவாக மூன்றாம் பிறை தரிசனம் செய்வதால் பல நன்மைகளும் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அப்படிப்பட்ட மூன்றாம் பிறை தரிசனத்தை குழந்தைகள் மேற்கொண்டால் அவர்களின் திறமைகள் அதிகமாகும். மேலும் அவர்களின் கற்கும் திறனும் அதிகமாகும்.
மூன்றாம் பிறை தரிசனத்தின் பொழுது உங்களுடைய உள்ளங்கைகளின் நடுவில் 1 நாணயம் அல்லது ஏதோ ஒரு நாணயம் அல்லது பணத்தை வைத்து சந்திரனை நோக்கி கைகளை நன்றாக விரித்து வைத்து சந்திரபகவானை நோக்கி வழிபாடு செய்ய வேண்டும்.
அப்படி வழிபாடு செய்யும் பொழுது ஓம் சந்திர பகவானே போற்றி என்ற மந்திரத்தை 9 முறை அல்லது 108 முறை கூறி மனமுருகி சந்திரனை நோக்கி நன்கு வேண்டிக்கொள்ளுங்கள். அப்படி வேண்டிய பிறகு நீங்கள் கைகளில் வைத்திருந்த நாணயத்தையோ அல்லது பணத்தையோ உங்களுடைய பீரோவில் அல்லது உங்கள் வீட்டில் பணம் வைக்கின்ற இடத்தில் வையுங்கள்.
இப்படி மூன்றாம்பிறை வழிபாடு செய்வதால் மிகுந்த நன்மைகள் நம்மை வந்து சேரும். மேலும் மூன்றாம் பிறை தரிசனம் செய்வதால் உங்களுடைய முற்பிறவி பாவங்கள் எல்லாம் நீங்கும் என்று கூறப்படுகிறது.
மூன்றாம்பிறை தரிசனத்தை முக்கியமாக மேற்கொள்ளவேண்டிய நட்சத்திரக்காரர்கள் யார்.?
பொதுவாக சிவன்,பார்வதி மற்றும் விநாயகர் இவர்கள் மூவரும் சந்திரனின் மூன்றாம் பிறையை தங்களின் தலையில் வைத்துள்ளார்கள் அதனால் இந்த மூன்றாம் பிறையை தரிசிப்பதால் இவர்கள் மூவரின் அருளையும் பெறமுடியும்.
மேலும் சந்திரபகவானின் நட்சத்திரங்கள் என கூறப்படும் ரோகினி, அஸ்தம், திருவோணம் இந்த மூன்று நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த மூன்றாம்பிறை தரிசனத்தை மேற்கொள்வதால் உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் நீங்கி இன்பங்கள் வந்து சேரும்.
பொதுவாக ஆயுளுக்கு சொந்தக்காரர் சந்திரன் என்பதால் ஆயுளை நீட்டி கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் மூன்றாம் பிறை வழிபாடு செய்யலாம்.
மேலும் இந்த மூன்றாம் பிறை தரிசனத்தை மாலை 06.30 மணிக்கு மேற்கொள்வது மிகவும் நன்று.
இதையும் படியுங்கள் => (Oct 2022) சந்திர தரிசனம் நேரம் 2022..! Chandra Darshan Time..!
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |