Mottai Adika Kudatha Naal
அனைவருக்கும் வணக்கம்..! பொதுவாக புதிதாக பிறக்கும் குழந்தைக்கு மொட்டை அடிப்பது என்பது ஒரு வழக்கம். இது தவிர குழந்தைகள் வளரும் வரை ஒரு குறிப்பிட்ட நிலை வரை அவர்களுக்கு மொட்டை அடித்துவிடுவார்கள். இது போக பெரியவர்களும் மொட்டை அடிப்பார்கள், சிலர் வேண்டுதல்களுக்காக மொட்டை அடிப்பார்கள்.
ஆக மொட்டை என்பதை யார் வேண்டுமானாலும் அடிக்கின்றன. இருப்பினும் இந்த மொட்டை அடிக்கும் போது குறிப்பிட்ட காலங்கள் மட்டும் அடிக்க கூடாது அது என்ன காலங்கள் என்பது குறித்த தகவல்களை இப்பொழுது நாம் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.
பிறந்த கிழமையில் மொட்டை போடலாமா:
- அதேபோல் நீங்கள் பிறந்த கிழமை அன்றும் மொட்டை அடிக்க கூடாது.
- உங்களுடைய பிறந்த நாள் அன்று மொட்டை அடிக்க கூடாது.
- பிறந்த நட்சத்திரம் அன்றும் மொட்டை அடிக்க கூடாது.
- இதுபோக நாள் காடியில் உங்களுக்கு எப்பொழுது எல்லாம் சந்திராஷ்டமம் வருகிறதோ அப்போது எல்லாம் நீங்கள் கண்டிப்பாக மொட்டை அடிக்க கூடாது. உதாரணத்திற்கு நீங்கள் மகம் நட்சத்திரம் என்றால் இந்த மகம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் இருக்கிறது என்றால் கண்டிப்பாக அன்றைய தினம் நீங்கள் மொட்டை அடிக்க கூடாது.
மாலை நேரங்களில் மொட்டை அடிக்கலாமா:
- மாலை அல்லது இரவு நேரங்களில் மொட்டை அடிக்க கூடாது.
- உங்கள் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது மொட்டை அடிக்க கூடாது.
- ஒருவருடைய வீட்டில் யாருக்காவது இப்பொழுது தான் திருமணம் ஆகியுள்ளது என்றால் அவர்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்களும் சரி அவர்கள் வீட்டில் இருக்கும் சிறியவர்களும் சரி கண்டிப்பாக மொட்டை அடிக்க கூடாது. இதனால் சில பிரச்சனைகள் உருவாகும். ஆக கொஞ்சம் நாட்கள் கழித்த பிறகு மொட்டை அடிப்பது மிகவும் சிறந்து.
பௌர்ணமி அன்று மொட்டை போடலாமா | அமாவாசை அன்று மொட்டை போடலாமா:
- அமாவாசை தினம் அன்று மொட்டை அடிக்க கூடாது. ஆனால் பௌர்ணமி தினம் அன்று மொட்டை அடிக்கலாம்.
- பெண் குழந்தைக்கு மொட்டை அடிக்கலாம். ஆனால் ஒரு பெண் வயதிற்கு வந்த பிறகு அவர்களுக்கு மொட்டை என்பது அடிக்கவே கூடாது.
- வேண்டுதலாக இருந்தாலும் சரி மொட்டை அடிக்க கூடாது. அதற்கு பதிலாக பூமுடி வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம்.
- இது போக நாளை திருமணம் என்றால் இன்றைய தினம் பெண்ணாக இருந்தாலும் சரி ஆணாக இருந்தாலும் சரி இருவருமே ஹேர் கட்டிங் செய்ய கூடாது.
ஞாயிற்றுக்கிழமை மொட்டை போடலாமா:
- ஆடி , புரட்டாசி , ஐப்பசி , மார்கழி போன்ற மாதங்களில் ஞாயிறு, சனி, செவ்வாய் போன்ற கிழமைகளில் முடி எடுக்க கூடாது. ஏனென்றால் இந்த நாட்களில் முடி எடுத்தால் வீட்டில் உள்ள மாடு, மனிதர்கள் இறந்து விடுவார்கள் என்பதை குறிக்கிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
குழந்தைக்கு மொட்டை அடிக்க சிறந்த நாள் 2025..!
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |