Mrityunjaya Mantra in Tamil
பொதுவாக இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே கடவுள் நம்பிக்கை என்பது அதிக அளவு இருக்கும். அதாவது ஒவ்வொரு மதத்தை சேர்ந்தவர்கள் ஒவ்வொரு கடவுளை வணங்குவார்கள். அதாவது இஸ்லாமியர்கள் அல்லாவை வணங்குவார்கள். அதேபோல் கிறித்துவ மதத்தினர் இயேசு மற்றும் மேரி ஆகியோரை வணங்குவார்கள். அதேபோல் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் ஒரு சிலர் சிவனையும் மற்றும் சிலர் விஸ்ணுவையும் வணங்குவார்கள். அதிலும் ஒரு சிலர் மிக மிக பக்தியுடன் கடவுள்களை வணங்குவார்கள். அப்படிப்பட்ட சிவபெருமானின் தீவிரமான பக்தர்களாக இருப்பார்கள்.
அப்படிப்பட்டவர்கள் தங்கள் மனதிற்கு மிகவும் பிடித்த கடவுளை பலவகையான போற்றிகள் , மந்திரங்கள், பாடல்களை பாடி போற்றுவார்கள். அப்படிபட்ட சிபெருமானின் பக்தர்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் மஹா மிருத்யுஞ்சய மந்திர வரிகளை பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த மஹா மிருத்யுஞ்சய மந்திர வரிகளை நாம் மனமார படித்தால் நமக்கு சிவபெருமானின் முழு அருளும் ஆசியும் கிட்டும். சரி வாங்க அந்த பாடல் வரிகளை பார்க்கலாம்.
தமிழ் கடவுளின் கந்தர் அலங்காரம் பாடல் வரிகள்
Mrityunjaya Mantra Lyrics in Tamil
இந்த மஹா மிருத்யுஞ்ஜய மந்திரமானது பிரம்மிருஷி வஷிஷ்ட மைத்ரவரூணி வழங்கிய ரிக் வேதத்தின் 7 வது மண்டலத்திலிருந்து வந்தது. பொதுவாக நோய் தாக்கியவர்கள் மற்றும் உடல் நலன் குறைபாடுகளில் உள்ளவர்கள் இந்த மந்திரத்தை தொடர்ந்து தினமும் சொல்லி வந்தால் விரைவில் நோய் குணமாகும் என்பது நம்பிக்கை.
அதாவது ரிக் வேதத்திலும், யஜூர் வேதத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இந்த மகா மிருத்யுஞ்ஜய மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிப்பதன் மூலம் மரண பயம் நீங்கும், ஆயுள் அதிகரிக்கும், இறை வழிபாட்டில் நாட்டம் ஏற்படும், தீராத நோய் தீரும் என்ற நம்பிக்கை உள்ளது.
நல்ல நினைவாற்றலை அளிக்கும் மேதா ஸூக்தம் பாடல் வரிகள்
மந்திரம்:
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்..
விளக்கம்:
இயக்கையாகவே நறுமணம் கொண்டவரும், அடியவர்களுக்கு கருணையை ஊட்டி வளர்பவருமான முக்கண் கொண்ட எம் பெருமானே உங்களை பூஜித்து வழிபடுகிறோம்.
காம்பில் இருந்து வெள்ளரிப்பழம் எப்படி விடுபடுகிறதோ அது போல மரணத்தின் பிடியில் இருந்து என்னை விடுவித்து சன்மார்க்க நெறியில் இருந்து பிறழாமல் வாழ்ந்திட அருள்பாலிக்க வேண்டுகிறேன்.
கடுகு டப்பாவில் இதை மட்டும் மறைத்து வையுங்க வீட்டில் வைக்க இடமில்லாத அளவிற்கு பணம் சேரும்
மஹா மிருத்யுஞ்சய மந்திரம் |
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |