Murugan Abishega Porutkal and Their Benefits in Tamil
ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் முருகருக்கு எந்த பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்தால் என்ன பலன் என்பதை பின்வருமாறு பின்வருமாறு கொடுத்துள்ளோம். அனைவருக்கும் பிடித்த கடவுளாக இருக்கும் முருகப்பெருமானின் அருளையும், பெருமையும் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. பக்தர்களை காப்பதில் முதலிடத்தில் இருப்பவர் முருகப்பெருமான். இவரை பக்கதர்களை என்று கைவிட்டதில்லை. முருகா என்று ஒரு நிமிடம் கண்மூடி மனதார வேண்டினால் போது யார் மூலமாகவே நமக்கு உதவி செய்வார்.
முருகரை கும்பிடுபவர்கள் என்றும் கெடுவதில்லை. பல சோதனைகளை தந்து எது நமக்கு நல்லதோ அதனை தான் முருகன் நமக்கு தருவார். முருகருக்கு சஷ்டி விரதம், கார்த்திகை விரதம், செவ்வாய்க்கிழமை விரதம் மற்றும் தைப்பூசம் விரதம் இருந்து வழிபட்டு வந்தால் நினைத்ததை அருளுவார் முருகர். அதேபோல், முருகருக்கு அபிஷேகம் செய்யும் போது இந்த பொருட்களை வாங்கி கொடுத்தால் உங்கள் வேண்டுதல் நிறைவேறும். ஆகையால், உங்கள் வேண்டுதல் இதுவே அதற்கேற்ற அபிஷேக பொருட்களை வாங்கி கொடுங்கள்.
முருகருக்கு பிடித்த திருப்பாகம் செய்வது எப்படி.?
முருகன் அபிஷேக பொருட்கள் பலன்கள்:
- திருமஞ்சனம் – தோல் நோய்கள் நீங்கும்.
- பஞ்சாமிர்தம் – நோய்கள் விலகி, ஆரோக்கியம் பெருகும். பஞ்சாமிர்தத்தை பிரசாதமாக படைத்தால் செல்வம். பெருகும்.
- பால் – குடும்ப விருத்தி, குல விருத்தி ஏற்படும். சகல செளபாக்கியங்களும் உண்டாகும்.
- தயிர் – குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
- எலுமிச்சை – எம பயம் நீங்கும்.
- இளநீர் – மனதில் அமைதி, குடும்பத்தில் நிம்மதியை தரும்.
- பழ வகைகள் – பிரபலமடைய செய்யும்.
- கரும்புச்சாறு – உடல் நோய்களை நீக்கும்.
- சந்தனம் – பெயர், புகழ், அந்தஸ்து கிடைக்கும்.
- பன்னீர் – தொழில், வாழ்க்கையில் வளர்ச்சியை தரும்.
- விபூதி – சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
- மஞ்சள் – தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும்.
- குங்குமம் – குல விருத்தி, குடும்பத்தில் சந்தோஷம்.
- மஞ்சள் தூள் – நல்நட்பு வாய்ப்பிக்கும் அரசுவசியம்
- சர்க்கரை – எதிரியை ஜெயிக்கும்
- நார்த்தம்பழம் – சந்ததி வாய்க்கும்
- சாத்துக்குடி – துயர் துடைக்கும்
- எலுமிச்சை – யமபய நாசம், நட்புடை சுற்றம்
- வாழைப்பழம் – பயிர் செழிக்கும்
- பலாப்பழம் – மங்களம் தரும் யோக சித்தி
- மாதுளை – பகை நீக்கும், கோபம் தவிர்க்கும்
- தேங்காய் துருவல் – அரசுரிமை
தைப்பூசம் அன்று முருகருக்கு படைக்க வேண்டிய பொருட்கள்.!
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |