வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்த மாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு முருகனின் அருள் 100% இருக்குமாம்..

Updated On: March 11, 2025 12:57 PM
Follow Us:
murugan arul petra kulanthai pirakkum matham
---Advertisement---
Advertisement

Murugan Arul Petra Kulanthai Pirakkum Matham

பொதுவாக இந்த உலகில் பிறந்த அனைவரும் வருடத்தில் இருக்கும் 12 மாதங்களில் ஏதோ ஒரு மாதத்தில் ஒரு நாளில் பிறந்திருப்போம். நாம் பிறப்பதற்கு முன்னால் நம்முடைய பெற்றோர்கள் என்னுடைய குழந்தை நல்லபடியாக இந்த உலகிற்கு வர வேண்டும் என்று வேண்டி கொள்வார்கள். அது போல சில பேருக்கு திருமணம் ஆகி நீண்ட நாள் குழந்தை இல்லாமல் இருந்தால் முருகனுக்கு விரதம் இருந்து குழந்தை வரத்தை பெற்று கொள்வார்கள். அப்படி முருகனிட குழந்தை வரம் வேண்டி பிறக்கும் குழந்தைகளுக்கு முருகனின் அருள் கட்டாயம் இருக்கும் என்று அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் சில மாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கும் முருகனின் அருள் முழுமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதனை பற்றி இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..

12 ராசிகளுக்கும் அதிர்ஷ்டம் தரும் முருகன் கோவில்கள்.!

முருகனின் அருள் கிடைக்க காரணம் என்ன.?

முருகனின் அருள் கிடைக்க காரணம் என்ன

ஒரு வருடத்தில் இருக்கும் 12 மாதங்களில் குறிப்பிட்ட மாதத்தில் மட்டும் தான் முருகப்பெருமானின் அருள் இருக்குமாம். அப்படி முருகனின் அருள் முழுமையாக கிடைக்கும் மாதங்களில் பிறந்த குழந்தைகளுக்கு முருகனின் அருளும், அனுக்கிரகமும், அம்சமும் முழுமையாக கிடைக்கும் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. உங்களுக்கு ஒரு சந்தேகம் வரும், இந்த மாதத்துல பிறந்த குழந்தைகளுக்கு மட்டும் தான் முருகனின் அருள் இருக்குமா அப்போ மற்ற மாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு முருகனின் அருள் இருக்காதா என்று நினைக்கிறீர்கள். உங்களுடைய சந்தேகத்தை நான் தீர்த்து வைக்கிறேன். முருகனை வழிபடும் அனைவருக்கும் முருகனின் அருளும், ஆசியும் கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் முருகன் அவர்களுடைய பக்தர்களுக்கு எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் சமமாக அருள்புரிவார். அப்போ ஏன் இந்த மாசத்துல பொறந்தவங்களுக்கு மட்டும் முருகன் அருள் கிடைக்கும் என்று சொல்றீங்க என்று கேட்பீங்க. இதற்கான காரணத்தை ஆன்மிகத்தில் கூறியுள்ளார்கள்.  சில கோள்களின் சேர்க்கையினாலும், நட்சத்திரங்களில் ஏற்படகூடிய மாற்றங்களாலும் 12 மாதங்களில் குறிப்பிட்ட மாதங்களில் மட்டும் செவ்வாய் கிரகத்தின் பார்வையும், முருகனின் நேரிடையான தாக்கம் ஏற்படுவதால் அந்த மாதங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு முருகனின் அருள் இயற்கையாகவே கிடைக்கும். இந்த மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் முருகனின் பக்தர்களாக இல்லையென்றாலும் முருகனின் அருள் கிடைக்கும் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. 

எந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு முருகனின் அருள் கிடைக்கும்:

முருகனின் அருள் பெற்ற குழந்தைகள் 

12 மாதங்களில் ஒன்றான வைகாசி மாதத்தில் பிறக்க கூடிய குழந்தைகளுக்கு இயற்கையாகவே முருகனின் அருள் கிடைக்குமாம். இது எதனால் என்றால் முருகன் அவதரித்த மாதம் தான் வைகாசி. இவர் வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் தான் பிறந்துருப்பாரு. அதனால் இந்த மாதம் முழுவதும் பிறக்க கூடிய குழந்தைகளுக்கு முருகனின் அருள் முழுவதும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதிலும் விசாக நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இந்த வைகாசி மாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு இயற்கையாகவே முருகன் மீது பக்தியும், அன்பும் அளவுக்கு அதிகமாக இருக்கும். மேலும் இவர்கள் ஆன்மிகத்தில் அதிக நாட்டம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள். மேலும் இன்னொரு மாதத்தில் பிறந்தவர்களுக்கும் முருகனின் அருள் இருக்குமாம். அதாவது கார்த்திகை மாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு முருகனின் அருள் முழுமையாக கிடைக்கும். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் முருகனுக்கு வழிபாடு செய்வதன் மூலம் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

முருகன் பெயரில் உள்ள அழகிய பெண் குழந்தை பெயர்கள்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now