முருகன் பஜனை பாடல் வரிகள்

Advertisement

Murugan Bajanai Padalgal

பொதுநலம் பதிவின் ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம்..! பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்குமே கடவுள் நம்பிக்கை என்பது கண்டிப்பாக இருக்கும். அதனால் அனைவரும் ஏதாவது ஒரு கடவுளின் மீது அதீத பக்தி வைத்திருப்பார்கள். அதனால் அந்த கடவுளின் அருளையும் ஆசீர்வாதத்தையும் நாம் முழுமையாக பெற்று கொள்ள வேண்டும் என்பதால் அந்த கடவுளுக்கான மந்திரங்கள் போற்றிகள், பஜனை பாடல்கள் போன்றவற்றை கூறி மனதார பூஜை செய்வார்கள்.

அதேபோல் தான் நம்மில் பலரின் மனதில் இடம்பிடித்துள்ள தமிழ் கடவுளான முருக பெருமானின் பஜனை பாடல்களை தான் இன்றைய பதிவில் பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து முருக பெருமானின் அருளையும் ஆசீர்வாதத்தையும் பெற்று கொள்ளுங்கள். சரி வாங்க நண்பர்களே முருகன் பஜனை பாடல் வரிகளை படித்தறிவோம்.

ரோக நிவாரண அஷ்டகம் பாடல் வரிகள்

முருகன் பஜனை பாடல்கள் வரிகள்

Murugan Bajanai Padalgal Tamil Lyrics

சுப்ரமண்யம் சுப்ரமண்யம்
சண்முக நாதா சுப்ரமண்யம்
சுப்ரமண்யம் சுப்ரமண்யம்
சரவண பவனே சுப்ரமண்யம்

சிவ சிவ சிவ சிவ சுப்ரமண்யம்
ஹர ஹர ஹர ஹர சுப்ரமண்யம்
ஹர ஹர ஹர ஹர சுப்ரமண்யம்
சிவ சிவ சிவ சிவ சுப்ரமமண்யம்

சரவணபவ என்று சொன்னால் ஆறு எழுத்து மந்திரம்
ஆறுமுகம் என்று சொன்னால் ஐந்து எழுத்து மந்திரம்
கந்தன் என்று சொன்னால் நாலு எழுத்து மந்திரம்
முருகா என்று சொன்னால் மூன்று எழுத்து மந்திரம்
வேல் என்று சொன்னால் இரேழுத்து மந்திரம்
ஓம் என்று சொன்னால் ஓரேழுத்து மந்திரம்

ஓம் வேல் முருகா கந்தா
ஆறுமுகா சரவணபவ ஓம்
ஆறுமுகா சரவணபவ ஓம்

சுப்ரமணியம் சுப்ரமணியம்
சண்முக நாத சுப்ரமணியம்

சிவசிவசிவசிவ சுப்ரமணியம்
ஹர ஹர ஹர ஹர சுப்ரமணியம்
சிவசிவ ஹர ஹர சுப்ரமணியம்
ஹர ஹர சிவசிவ சுப்ரமணியம்

சிவ சரவணபவ சுப்ரமணியம்
குரு சரவணபவ சுப்ரமணியம்
சிவசிவ ஹர ஹர சுப்ரமணியம்
ஹர ஹர சிவசிவ சுப்ரமணியம்

வேல் வேல் வேல் வேல் வேல் முருக வேல்
வேல் முருக மால் மறுக வேல் முருக வேல்
வள்ளி மணவாளனே நி வேல் முருக வேல்
புள்ளிமாயில் வாஹனனே வேல் முருக வேல்
பழனிமலை பாலனே னி வேல் முருக வேல்
பாவங்களை போக்குகின்ற வேல் முருக வேல்

Murugan Bajanai Padalgal Tamil Lyrics:

ஏறுமயில் ஏறி விளையாடு முகம் ஒன்றே
ஈசருடன் ஞானமொழி பேசு முகம் ஒன்றே
ஏறுமயில் ஏறி விளையாடு முகம் ஒன்றே
ஈசருடன் ஞானமொழி பேசு முகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்க்கு முகம் ஒன்றே
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுக மான பொருள் நீ அருளல் வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே. –

ஏறுமயில் ஏறி விளை யாடு முகம் ஒன்றே
ஈசருடன் ஞானமொழி பேசு முகம் ஒன்றே

சரணம் சரணம் – சண்முகா சரணம்
சரணம் சரணம் – சண்முகா சரணம்

முருக பெருமானின் பஜனை பாடல் வரிகள்  Pdf 

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement