முருகன் கோவில் கனவில் வந்தால் இப்படி நடக்குமா..? என்ன பலன் தெரியுமா..?

Advertisement

Murugan Kovil Kanavil Vanthal Enna Palan

ஆன்மீக அன்பர்களுக்கு அன்பான வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக நாம் முருகன் கோவில் கனவில் வந்தால் என்ன பலன், முருக பெருமானை கனவில் கண்டால் என்ன பலன் என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக நம் அனைவருக்குமே ஒவ்வொரு கடவுளின் மீது அதிக பக்தி இருக்கும். அப்படி கடவுள்களில் தமிழ் கடவுளாக இருப்பவர் தான்  முருகப்பெருமான். முருகப்பெருமானுக்கு கோடிக்கணக்கான பக்தர்கள் இருக்கிறார்கள். நமக்கு ஏதாவது கஷ்டம் வரும் வேளையில் நாம் முருகனை நினைக்காமல் இருக்கமாட்டோம்.

சிலர் எந்நேரமும் முருக பெருமானை நினைத்து கொண்டிருப்பார்கள். சரி அதுபோல நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவுகள் வருவது சகஜம் தான். ஆனால் அப்படி வரும் கனவுகள் நமக்கு  நடக்கும் ஏதோ ஒரு விஷயத்தை முன் கூட்டியே தெரிவிக்கிறது என்பதை குறிக்கிறது. சரி இப்போது நம் கனவில் முருகன் கோவில் அல்லது முருக பெருமான் வந்தால் என்ன பலன் என்று தெரியுமா..? தெரியவில்லை என்றால் அதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்கள் கனவில் கடவுள் வந்தால் என்ன பலன் தெரியுமா

முருகன் கோவில் கனவில் வந்தால் என்ன பலன்: 

முருகன் கோவில் கனவில் வந்தால் என்ன

  • நம்முடைய கனவில் முருகன் கோவில் வந்தால் நாம் நினைத்த காரியம் நிச்சயமாக வெற்றி அடையும் என்பதை குறிக்கிறது.
  • முருகன் கோவிலை நீங்கள் கனவில் கண்டால் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் லாபமும் வியாபாரத்தில் வளர்ச்சியும் காணப்படும்.
  • மொத்தத்தில் உங்கள் வாழ்க்கையில் இருந்து வந்த கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி மன அமைதியும், மனதிற்கு சந்தோஷமும் உண்டாகப்போகிறது என்று அர்த்தம்.

கனவில் முருகன் வந்தால் என்ன பலன்: 

  • நம் கனவில் முருக பெருமான் வந்தால் நம் வாழ்க்கையில் நன்மை மட்டுமே உண்டாகும். வாழ்க்கையில் சந்தோசங்கள் பெருகும்.
  • முருகப் பெருமானை கனவில் பார்த்தால், வாழ்வில் ஏற்பட்டுள்ள கஷ்ட நஷ்டங்கள் அனைத்தும் விலகப் போகிறது என்று அர்த்தம்.
  • நாம் மனதில் எண்ணிய காரியங்கள் அனைத்தும் நிச்சயம் வெற்றி அடையும் என்பதை இந்த கனவு உணர்த்துகிறது.

முருகன் வேல் கனவில் வந்தால் என்ன பலன்:

முருகன் கோவில் கனவில் வந்தால் என்ன

  • நம் கனவில் முருக பெருமானின் வேலை கண்டால் அது நமக்கு நன்மையே தான். நாம் இதுவரை நினைத்து வந்த காரியம் நினைத்தபடியே நடந்து முடியும். இதுவரை வாழ்க்கையில் இருந்து வந்த கஷ்டமான தருணங்களில் இருந்து விலகி நல்ல ஒரு மாற்றங்கள் நம் வாழ்க்கையில் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.

சிவலிங்கம் கனவில் வந்தால் என்ன பலன்

முருகன் சிலை கனவில் வந்தால் என்ன பலன்:

  • நம் கனவில் முருக பெருமானின் சிலையை கண்டால் நாம் நினைத்த காரியம் நிச்சயமாக நடந்தே தீரும் என்பதை குறிக்கிறது.
  • மேலும் முருகனின் அனுகிரகனை அனைத்தும் நமக்கு கிடைக்கப்போகிறது. முருக பெருமானின் முழு அருளும் நமக்கு கிடைத்து செல்வ செழிப்பாக இருக்கப் போகிறோம் என்பதை அக்கனவு குறிக்கிறது.

முருகன் வள்ளி தெய்வானை கனவில் வந்தால்: 

முருகன் கோவில் கனவில் வந்தால் என்ன

  • நம்முடைய கனவில் முருகன் வள்ளி தெய்வானை மூவரும் சேர்ந்து வந்தால் நமக்கு பல நன்மைகள் நடக்கப்போகிறது என்பதை குறிக்கிறது. இவர்களை போல் வாழ்க்கையில் சிறப்பாக வாழப்போகிறீர்கள் என்பதை அக்கனவு உணர்த்துகிறது.

குழந்தை முருகன் கனவில் வந்தால் என்ன பலன்:

  • குழந்தை முருகன் நம் கனவில் வந்தால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கப்போகிறது என்பதை உணர்த்துகிறது.

12 ராசிகளுக்கும் அதிர்ஷ்டம் தரும் முருகன் கோவில்கள்

திருச்செந்தூர் முருகன் கனவில் வந்தால்: Palani முருகன் கோவில் கனவில் வந்தால்:

  • நம் கனவில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்வது போலவோ அல்லது திருச்செந்தூர் முருகனை கனவில் கண்டாலோ நம் வாழ்க்கையில் அனைத்தும் நன்மையாகவே இருக்கும். அதுபோலவே பழனி முருகனை நாம் கனவில் கண்டாலும் நமக்கு நன்மை தான்.
  • நாம் மனதில் எண்ணிய காரியங்கள் எப்பொழுதும் வெற்றி அடையும். நம் வாழ்க்கையில் இதுவரை இருந்து வந்த கஷ்டமான தருணங்கள் விலகி நல்ல ஒரு மாற்றங்கள் நம் வாழ்க்கையில் ஏற்பட போகிறது என்பதை குறிக்கிறது.
  • அதுபோல நமக்கு முருகன் மீது வைத்துள்ள அதிகளவு பற்று காரணமாக தான் இதுபோன்ற கனவுகள் வருகின்றன. மேலும் திடீரென்று முருகன் நம் கனவில் தோன்றுவது என்பது அனைவருக்கும் ஏற்படாது. மீறி அவ்வாறு ஏற்படும் போது நிச்சயமாக ஒரு மாற்றத்தை நீங்கள் சந்திக்க போகிறீர்கள் என்று அர்த்தம். மேலும் வாழ்க்கையில் அது ஒரு நல்ல மாற்றமாக இருக்கும்.
  • ஆகவே உங்கள் கனவில் முருகன் சம்பந்தமான கனவுகள் வந்தால், அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று உங்களுக்கு அர்ச்சனை செய்து வந்தால் வாழ்க்கையில் மேலும் பல நன்மைகள் உண்டாகும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement