முருகனுக்கு மாலை அணிந்து விரதம் இருப்பவர்கள் இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்.!

Advertisement

Murugan Malai Rules in Tamil 

ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் முருகருக்கு மாலை அணிந்து விரதம் இருப்பவர்களும், மாலை அணியாமல் விரதம் இருப்பவர்களும் செய்யக்கூடாத விஷயங்கள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். முருகனுக்கு தைப்பூசம், சஷ்டி விழா, கார்த்திகை, பங்குனி உத்திரம் போன்ற நாட்களில் மாலை அணிந்து விரதம் இருப்பது வழக்கம். ஏராளமான முருக பக்தர்கள் முருகனுக்கு மாலை அணிந்து விரதம் இருப்பார்கள். மலை அணிந்தால் விரத முறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். ஆனால், ஒரு சிலருக்கு மாலை அணிந்து கொண்டு என்ன செய்ய வேண்டும்.? என்ன செய்யக்கூடாது என்பது தெரிவதில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.

முருகருக்கு மாலை போடுபவர்கள், தங்களது தாய், தந்தை, குரு போன்றவர்கள் மூலம் மாலை அணிந்து கொள்ளலாம். அல்லது கோவிலுக்கு சென்று அர்ச்சகர் மூலம் மாலை அணிந்து கொள்ளலாம். மாலை அணியும் முந்தைய நாளில் இருந்தே விரதம் இருக்க தொடங்க வேண்டும்.

முருகனுக்கு தைப்பூசம் 48 நாள் விரதம் இருப்பது எப்படி.?

முருகனுக்கு மாலை அணிந்து செய்ய கூடாதவை:

முருகனுக்கு மாலை அணிந்து செய்ய கூடாதவை

  • முருகனுக்கு மாலை அணிந்தவர்கள், யாரிடமும் கோபம் கொள்ள கூடாது.
  • கெட்ட வார்த்தைகளை/கடும் சொற்களை பேசக் கூடாது.
  • காலில் செருப்பு அணிய கூடாது.
  • பாய், தலையணை போன்றவை பயன்படுத்தக்கூடாது.
  • மது, புகை போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
  • தாம்பத்ய சிந்தனை அறவே கூடாது.
  • சதா சர்வ காலமும் முருகப்பெருமான் சிந்தனையிலேயே இருக்க வேண்டும்.
  • முடித்திருந்தம், முகச்சவரம் செய்துகொள்ளக் கூடாது.
  • விரத காலத்தில் தனக்கென்று தனி தட்டு, டம்ளர் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.
  • தினமும் சூரிய உதயத்திற்கு முன்பே விழித்து குளிக்க வேண்டும்.
  • காலை மாலை என இருவேளையும் குளிக்க வேண்டும்.
  • காலையில் உடுத்திய உடையை மாலை உடுத்தக் கூடாது. வேறு உடை தான் அணிய வேண்டும்.
  • காலை மாலை இரண்டு வேலையும் முருகருக்கு நெய்வேத்தியம் படைத்து பூஜை செய்து, முருகருக்கு உகந்த மந்திரங்களை உச்சரிக்க வேண்டும்.
  • முருகப்பெருமானுக்கு மாலை அணிந்து விரதம் இருப்பவர்கள் குறைந்தது ஆறு நாட்களும், அதிகபட்சம் 48 நாட்களும் விரதம் இருக்கலாம்.
  • மேலும், 12, 15, 18, 21, 27, 36, 42, 45 என்ற எண்களின் அடிப்படையில் மாலை அணிந்து விரதம் இருக்கலாம்.
  • மாலை கழட்டும்போது, எங்கு மாலை அணிந்தீர்களோ அங்கே வந்து மலை போட்டுவிட்டவர்களின் கையால் தான் கழட்ட வேண்டும்.
  • உதாரணமாக, நீங்கள் மாலை அணிந்து பழனி அல்லது திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்த பின்னர், வீட்டிற்கு வந்து பூஜை செய்து, எங்கு மாலை அணிந்தீர்களோ அங்குதான் மாலையை கழட்ட வேண்டும்.

தைப்பூசம் வழிபடும் முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement