முருகன் படத்தை வீட்டில் இந்த திசையில் வைத்தால் வீட்டில் அதிர்ஷ்டம் உண்டாகும்.!

Advertisement

Murugan Photo Vaikum Thisai

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் முருகன் படத்தை வீட்டில் எந்த இடத்தில் எந்த திசையில் வைத்தால் அதிர்ஷ்டம் உண்டாகும் என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். இந்துக்கள் கடவுள்களில் அதிகமாக அனைவராலும் விரும்பப்படும் கடவுளாக முருக பெருமான் இருக்கிறார். முருகனை வணங்காதவர்கள் என்றுமே யாருமே இருக்க முடியாது. முருகனிடம் ஒரு வேண்டுதலை வைத்து மனதாரா முருகப்பெருமானை வணங்கினோம் என்றால் நம் கஷ்டங்கள் அனைத்தையும் தீர்த்து வைப்பார்.

பெரும்பாலானவர்களின் இஷ்ட தெய்வகமாகவும் குலதெய்வமாகவும் இருந்து வருகிறார். அதனால் முருக பெருமானின் திரு உருவ படத்தையும், வேலையும் வீட்டில் வைத்து வழிப்பாடு செய்து வருவார்கள். அப்படி வழிபாடு செய்யும்போதும் நாம் சில விசயங்களை முறையாக செய்ய வேண்டும். முக்கியமாக முருகனின் படத்தை வீட்டில் எந்த திசையில் வைத்து வழிபட வேண்டும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும்.

வீட்டில் முருகன் படம் வைக்க சரியான திசை:

வீட்டில் முருகன் படம் வைக்க சரியான திசை

  • ராஜ அலங்காரத்தில் இருக்கும் முருகப்பெருமானின் படத்தை வாங்கி வந்து வீட்டின் மேற்கு திசையில் வைக்க வேண்டும். அதாவது, முருக பெருமான் கிழக்கு நோக்கி இருக்குமாறும், நம்முடைய தலைக்கு மேல், முருகனின் உருவம் இருக்கும்படியும் வைக்க வேண்டும்.
  • ராஜ அலங்காரத்துடன் இருக்கும் பழனி தண்டாயுதபாணி தான் தொழில், வளர்ச்சி மற்றும் வாழ்க்கை முன்னேற்றத்தை தரக்கூடிய முருகப் பெருமானின் திருக்கோலமாக கருதப்படுகிறார்.
  • ராஜ அலங்காரத்தில் இருக்கும் முருகன் தான், தொழில் நுணுக்கங்கள், பேச்சுத்திறன், நம்பிக்கை, தைரியம் ஆகியவற்றை வழங்கக்கூடியவர். எனவே, இவரை வீட்டில் வைத்து வழிபட்டு வந்தால், வீட்டில் இருக்கும் பணப்பிரச்சனை தீரும்கடன் . கடன் எளிதில் அடையும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும் வளர்ச்சியும் பெருகிக்கொண்டே போகும்.

முருகன் பெயரில் உள்ள அழகிய பெண் குழந்தை பெயர்கள்.!

  • முருகன் படத்தை வாங்கி வீட்டில் வைத்தால் மட்டும் போதாது. தினந்தோறும் முருகப்பெருமானை மனதார நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். முருகன் படத்திற்கு ஒவ்வொரு செவ்வாய் கிழமை அன்றும், ராகு காலத்தில் செவ்வரளி மாலை அல்லது செவ்வரளி பூ போட்டு, விளக்கேற்றி வழிபாடு செய்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
  • அதேபோல், ராஜ அலங்கார முருகனுக்கு பன்னீர் ரோஜாப்பூ அணிவித்து வழிபட்டு வந்தால் செல்வ செழிப்பு உண்டாகும். ஞாயிற்று கிழமைகளில் மல்லிகைப்பூ சாற்றி வழிபாடு செய்து வந்தால்  வாழ்க்கையில் முன்னேற்றம், உயர் பதவிகள், வருமானம் கிடைக்கும். திங்கட்கிழமையில் சம்பங்கி மாலை சாற்றி வழிபாடு செய்து வந்தால், பல விதமான நண்மைகளை பெறலாம்.
  • புதன்கிழமை மரிக்கொழுந்து மாலை சாற்றி வழிபாடு செய்ய வேண்டும். வியாழன்கிழமை அன்று மாலை சந்தன மாலை அணிவித்து வழிபட வேண்டும். இப்படி எந்த மாலை அணிவித்து முருகனை வழிபாடு செய்தாலும், முருகன் கழுத்தில் வெற்றிவேர் மாலை இருக்கும்படி வைத்து வழிபடுங்கள். வெற்றிவேர் மாலையை மாதத்திற்கு ஒரு முறையாவது, பன்னீரில் கழுவி முருகனுக்கு அணிவித்து வழிபட்டால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும்.

முருகனை எப்போது ஆன்டி கோலத்திலும் ராஜ அலங்காரத்திலும் தரிசிக்க வேண்டும் என்று தெரியுமா.?

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement