முருகன் பக்தி பாடல்கள் வரிகள்
பொதுவாக விநாயகர் என்ற சொன்னவுடன் மறுபுறம் அனைவருக்கும் நினைவிற்கு வருவது முருகன் மட்டுமே. ஏனென்றால் விநாயகரும், முருகப் பெருமானும் அண்ணன் தம்பி ஆவார்கள். அந்த வகையில் முருகனுக்கு சுப்ரமணியன், சரவணன், மணிகண்டன், ஆறுமுகன், வேலன், சண்முகன் என பல வகையான பெயர்கள் இருக்கிறது. இவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்களை கூறி அழைக்கும் முருகனுக்கு மொத்தமாக 6 வீடுகள் உள்ளது. அதாவது பழனி, திருச்செந்தூர், திருத்தணி, பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம் மற்றும் சுவாமி மலை என அறுபடை வீடுகள் இருக்கிறது.
அந்த வகையில் இவ்வாறு எல்லாம் பல சிறப்புகளை கொண்டுள்ள முருகனுக்கு உகந்த நாளாக கார்த்திகை நாளானது இருக்கிறது. இவ்வாறு மாதந்தோறும் வரும் கார்த்திகை மட்டும் இல்லாமல் இதர நாட்களிலும் முருகனை வழிபடும் போதும் நாம் அவருக்கான பாடல்களை பாடி வழிபடுவது மிகவும் நல்லது. ஆகவே இன்று முருகனுக்கு உரிய பக்தி பாடல்களில் ஒன்றான அழகு என்ற சொல்லுக்கு முருகா பாடலை வரிகளை படிக்கலாம் வாங்க..!
அழகு என்ற சொல்லுக்கு முருகா பாடல் வரிகள்:
முருகா..! முருகா..!
அழகென்ற சொல்லுக்கு முருகா
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா
அழகென்ற சொல்லுக்கு முருகா
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா
அழகென்ற சொல்லுக்கு முருகா
சுடராக வந்த வேல் முருகா கொடும்
சூரரை போரிலே வென்ற வேல் முருகா..!
சுடராக வந்த வேல் முருகா கொடும்
சூரரை போரிலே வென்ற வேல் முருகா
கனிக்காக மனம் நொந்த முருகா
கனிக்காக மனம் நொந்த முருகா
முக்கனியான தமிழ் தந்த செல்வமே முருகா
அழகென்ற சொல்லுக்கு முருகா
ஆண்டியாய் நின்ற வேல் முருகா
உன்னை அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா…
ஆண்டியாய் நின்ற வேல் முருகா
உன்னை அண்டினோர் இன்பமே முருகா
பழம் நீ அப்பனே முருகா
பழம் நீ அப்பனே முருகா
ஞானப்பழம் நீ அல்லாது பழமேது முருகா
அழகென்ற சொல்லுக்கு முருகா
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா
அழகென்ற சொல்லுக்கு முருகா
குன்றாறும் குடிகொண்ட முருகா
பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா
குன்றாறும் குடிகொண்ட முருகா
பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா
சக்தி உமை பாலனே முருகா
சக்தி உமை பாலனே முருகா
மனித சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா
அழகென்ற சொல்லுக்கு முருகா
அன்பிற்கு எல்லையோ முருகா
உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா
அன்பிற்கு எல்லையோ முருகா
உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா
கண்கண்ட தெய்வமே முருகா
கண்கண்ட தெய்வமே முருகா
எந்தன் கலியுக வரதனே அருள் தாரும் முருகா
அழகென்ற சொல்லுக்கு முருகா
ப்ரணவப்பொருள் கண்ட திரு முருகா
பரம்பொருளுக்கு குருவான தேசிகா முருகா
ப்ரணவப்பொருள் கண்ட திரு முருகா
பரம்பொருளுக்கு குருவான தேசிகா முருகா
அரகரா சண்முகா முருகா
அரகரா சண்முகா முருகா
என்று பாடுவோர் என்னத்தில் ஆடுவாய் முருகா
அழகென்ற சொல்லுக்கு முருகா
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா
அழகென்ற சொல்லுக்கு முருகா
முருகா முருகா முருகா..!!
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |