முருகன் திருக்கல்யாணம் 2024 | Murugan Thirukalyanam 2024 Date in Tamil
ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் முருகன் திருக்கல்யாணம் எப்போது நடைபெறுகிறது என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். கந்த சஷ்டியின் நிறைவு நாளான சூரசம்ஹாரம் முடிந்து மறுநாள் முருகன் திருக்கல்யாணம் நடைபெற்றது. தேவர்கள் உட்பட அனைத்து உயிரினங்களை துன்புறுத்தி வந்த அரக்கனான சூரபத்மனை முருகன் அளித்து வெற்றி பெற்றதால், இந்திரன் தனது, மகளான தெய்வானையை முருகருக்கு திருமணம் செய்து வைக்கிறார்.
இவர்களது திருமணம் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றதாக புராணங்கள் கூறுகிறது. சூரனை ஆட்கொண்ட தளம் என்பதால், திருச்செந்தூரிலும் முருகன் திருக்கல்யாணம் மிக விமர்சியாக நடைபெறுகிறது. எனவே, திருச்செந்தூரில் முருகன் திருக்கல்யாணம் எப்போது நடைபெறுகிறது என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
Murugan Thirukalyanam 2024 Date and Time in Tamil:
இந்த ஆண்டு2024, நவம்பர் 08 ஆம் தேதி (ஐப்பசி 22 ஆம் தேதி) வெள்ளிக்கிழமை அன்று கந்த சஷ்டியின் 7 ஆம் திருநாள் முருகன் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. அதிகாலை 05.00 AM மணிக்கு தெய்வானை அம்பாள் சேர்க்கையில் இருந்து தபசுக்கு புறப்படுதல் நிகழ்வு நடைபெறும். அடுத்து, மாலை 06.30 PM மணிக்கு அம்பாளுக்கு சுவாமி காட்சி அருளித் தோள்மாலை மாற்றுதல். அதனை தொடர்ந்து இரவு 11.00 PM மணிக்கு மேல் அருள்மிகு தெய்வானை அம்பாளுக்கும் சுவாமிக்கும் திருக்கல்யாணம் வைபவம். திருக்கோவில் வளாகம் மேல்கோபுரம் முன்பு அமைத்துள்ள மண்டபத்தில் நடைபெறும்.சூரசம்ஹாரத்திற்கு மறுநாள், அனைத்து முருகன் கோவில்களிலும் முருகன் திருக்கல்யாணம் நடைபெறும். எனவே, முருகன் கோவில்களில் நடக்கும் திருக்கல்யாணத்தை பார்த்து தரிசித்து விட்டு வீட்டிற்கு வந்து முருகனுக்கு பூஜை செய்து வழிபட வேண்டும். முருகப்பெருமான் அரக்கனை அளித்து, திருக்கல்யாணத்தை முடித்து மகிழ்ச்சியில் இருப்பார். எனவே, அவருக்கு விருந்து வைப்பது அவசியம். வீட்டில் முருகனுக்கு சாம்பார், கூட்டு, பாயாசம் போன்றவற்றை வைத்து வழிபட வேண்டும்.
மேலும், முருகனுக்கு உரிய பாடல்களை உச்சரித்து முருகனை வீட்டிற்கு அழைக்க வேண்டும். கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள், முருகனின் திருக்கல்யாணத்தை பார்த்து விட்டு, வீட்டில் பூஜை செய்து படையல் வைத்து வழிபட்ட பிறகு, விரதத்தை நிறைவு செய்யலாம்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |