வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

முருகனுக்கு மாலை அணிய உகந்த நாள் 2025

Updated On: April 19, 2025 12:56 PM
Follow Us:
muruganukku malai podum naal
---Advertisement---
Advertisement

முருகனுக்கு மாலை அணிய உகந்த நாள்

பொதுவாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடவுளை பிடிக்கும். கடவுளிடம் வேண்டுதலை வைத்த நிறைவேற்றினால் நான் உனக்கு பால் குடம் எடுக்கிறேன், காவடி எடுக்கிறேன் என்று வேண்டி கொள்வார்கள். இதுமட்டுமில்லை இந்த வேண்டுதல் ஆனது எப்படி வேண்டுமானாலும் வேண்டி கொள்வார்கள். இப்படி வேண்டுதல் வைக்கும் போது சில நபர்கள் மாலை அணிந்து விரதம் இருப்பார்கள். ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு மாதத்தில் மாலை அணியும் வழக்கம் இருக்கிறது. அதில் முருக பெருமானுக்கு எந்த நாட்களில் மாலை அணியலாம் என்ற குழப்பம் பலரிடம் இருக்கிறது. அதற்கு பதில் சொல்லும் பதிவாக இருக்கும். சரி வாங்க முருகனுக்கு மாலை அணிவதற்கு உரிய நாட்களை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

2025-ம் ஆண்டில் முருகனுக்கு மாலை அணிய உகந்த நாட்கள்:

இந்த வருடத்தில் தைப்பூசம் விரதத்திற்கு மாலை அணிந்து விரதம் இருக்கலாம். பிப்ரவரி 11-ம் தேதி தைப்பூசம்

பங்குனி உத்திரம் விரதத்திற்கு மாலை அணிந்து விரதம் இருக்கலாம்.

ஆறுநாள்கள் விரதம் முடிவில் சூரசம்ஹாரம்விரதத்திற்கு மாலை அணிந்து விரதம் இருக்கலாம்.

மாதந்தோறும் வரும் சஷ்டி தினத்திலும் மாலை அணிந்து விரதம் இருக்கலாம்.

மாதத்தில் வரும் கார்த்திகை அன்றும் மாலை அணிந்து விரதம் இருக்கலாம்.

விசாகம் நடச்த்திரம் அன்று மாலை அணிந்து விரதம் இருக்கலாம்.

முருகனுக்கு உரிய கிழமையான செவ்வாய் கிழமையிலும் முருகனுக்கு மாலை அணிந்து கொள்ளலாம்.

சஷ்டி விரதம் 2025 ஆம் ஆண்டிற்கான முழு லிஸ்ட்

மாலை அணியும் போது கவனிக்க வேண்டியவை:

muruganukku malai poduvathu eppadi

முருகன் பெருமானுக்கு மாலை அணிவதில் பலருக்கும் பல சந்தேகங்கள் வருகின்றது. அதற்கான விளக்கத்தை கீழே பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

மாலை அணியும் போது 108 ருத்ராட்ச மாலையை அணிய வேண்டும். மொத்தம் இரண்டு மாலைகள் அணிய வேண்டும். அதில் ஒன்று முருகப்பெருமான் டாலர் கொண்டதாக இருக்க வேண்டும், மற்றொன்று துணை மாலையாக அணிய வேண்டும்.

மாலை அணிவதற்கு முதல் நாளே விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். பாய், தலையணையில் உறங்க கூடாது. செருப்பு அணிய கூடாது. முடி வெட்ட கூடாது. மது மற்றும் புகை, தாம்பத்தியம் பற்றிய சிந்தனை இருக்க கூடாது. உங்களின் உடைய நீங்களே துவைக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் மாலை அணிந்த பிறகு பச்சை நிறம் மற்றும் நீல நிறத்தில் தான் உடைகள் அணிய வேண்டும். மேலும் முக்கியமாக கழுத்தில் பச்சை நிற துண்டை அணிந்து கொள்ள வேண்டும்.

மாலை அணிந்த நேரத்தில் உணவு முறைகள்:

நீங்கள் மாலை அணிந்து விரதம் இருக்கும் நாட்களில் சைவ உணவுகளை மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும். விரதம் இருக்கும் நாட்களில் ஒருவேளை உணவாக எடுத்து கொள்ள வேண்டும். என்னால் ஒருவேளை சாப்பிட்டு விட்டு இருக்க முடியாது என்கிறவர்கள் மூன்று வேளையும் சாப்பிட்டு கொள்ளலாம். இந்த விரத நாட்களில் இலைகளில் சாப்பிடுவது சிறந்தது. ஆனால் இலை கிடைக்காது என்கிறவர்கள் உங்களுக்கென்று தட்டு மற்றும் டம்ளர் வைத்து கொள்ள வேண்டும். இந்த பாத்திரங்கள் ஆனது அசைவம் சாப்பிடாமல் உள்ள பாத்திரங்களாக இருக்க வேண்டும்.

சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து குளிக்க வேண்டும். அதன் பிறகு முருக பெருமானை மனமுருகி வேண்டிய பிறகு தான் உணவை சாப்பிட வேண்டும்.

நீங்கள் மாலை அணிந்து நவிரதம் இருக்கும் நாட்களானது சில எண்ணிக்கையின் படி தான் அணிய வேண்டும். அதாவது 6, 12 ,15 ,18 ,21, 27, 36 ,42 ,45 ,48  போன்ற நாட்களின் கணக்கு படி தான் மாலை அணிய வேண்டும். இந்த எண்ணிக்கையில் நீங்கள் எத்தனை நாட்கள் விரதம் இருக்க போகிறீர்களோ அதனை முருக பெருமானிடம் வேண்டுதல் வைத்து விட்டு மாலை அணிந்து கொள்ளுங்கள்.

2025 ஆண்டிற்கான கார்த்திகை நாட்கள் மற்றும் நேரம்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்

 

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now