முருகனுக்கு வெற்றிலை தீபம் ஏற்றுவது எப்படி.?

Advertisement

Muruganukku Vetrilai Deepam Etruvathu Eppadi 

ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் முருகனுக்கு வெற்றிலை தீபம் ஏற்றுவது எப்படி.? என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். முருக பெருமானை வெளிப்படுவதற்கு மூன்று முறைகள் உள்ளது. வார வழிபாடு என்றால் செவ்வாய்க்கிழமை உகந்தது. நட்சத்திர வழிபாடு என்றால் கிருத்திகை நட்சத்திர நாள் உகந்தது. திதி வழிபாடு என்றால் சஷ்டி திதி வழிபாடு உகந்தது. அந்த வகையில் முருகப்பெருமானுக்கு உகந்த நாளாக செவ்வாய்க்கிழமை இருக்கிறது. செவ்வாய் கிரகத்திற்கு உரிய கடவுள் முருகப்பெருமான்.

ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை அன்றும் முருகப்பெருமானுக்கு வெற்றிலை தீபம் ஏற்றி வழிபாடு செய்து வந்தால் ஏராளமான நன்மைகளை பெறலாம். நினைத்த காரியம் கைகூடும். வீட்டில் உள்ள பண பிரச்சனை ஆரோக்கிய பிரச்சனை அனைத்தும் தீரும். முருகனுக்கு வெற்றிலை தீபம் ஏற்றுவதற்கு என்று ஒரு முறை இருக்கிறது. அதனை பற்றி பின்வருமாறு படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க.

12 ராசிகளுக்கும் அதிர்ஷ்டம் தரும் முருகன் கோவில்கள்

முருகனுக்கு வெற்றிலை தீபம் ஏற்றுவது எப்படி.?

முருகனுக்கு வெற்றிலை தீபம் ஏற்றுவது எப்படி

  • முதலில், முருகப்பெருமானின் திருவுருவ படம் அல்லது உருவச்சிலையை எடுத்து சுத்தமாக துடைத்து, மஞ்சள் குங்குமம் இட்டு பூக்கள் அல்லது மாலையினால் அலங்கரித்து கொள்ள வேண்டும். அடுத்ததாக காம்புடன் இருக்கக்கூடிய 6 வெற்றிலைகளை எடுத்து, தண்ணீர் விட்டு கழுவி துடைத்து கொள்ளுங்கள். (வெற்றிலை கிழிந்தோ அழுக்காகவோ இருக்க கூடாது)
  • வெற்றிலையின் நுனியில் மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும். பிறகு, ஒரு தாம்பூல தட்டை எடுத்து, விசிறி வடிவத்தில் வெற்றிலையை நிரப்பி வைக்க வேண்டும். வெற்றிலையின் மேல் பூ வைத்து, 6 வெற்றிலையின் மேல் 6 மஞ்சள் குங்குமம் வைத்த அகல் விளக்கினை வைத்து, எடுத்து வைத்துள்ள வெற்றிலை காம்புகளை போட்டு, நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி திரி போட்டு, தீபம் ஏற்ற வேண்டும்.
  • இவ்வாறு ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை அன்றும் முருகப்பெருமானுக்கு வெற்றிலை தீபம் ஏற்றி, உங்கள் வேண்டுதலை முருகப்பெருமானிடம் வேண்டி வழிபடுங்கள். இந்த வழிபாட்டை நீங்கள் தொடர்ந்து 9 வாரங்கள் செய்து வந்தால் உங்கள் வேண்டுதல் நிறைவேறும்.

முருக பெருமானை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா..?

செவ்வாய் கிழமை வெற்றிலை தீபம் ஏற்றும் நேரம்:

செவ்வாய்கிழமையில் காலை 6.00 AM முதல் 7.00 AM வரையிலும், பகல் 01.00 PM முதல் 02.00 PM வரையிலும், இரவு 08.00 PM முதல் 09.00 PM வரையிலும் வெற்றிலை தீபம் ஏற்றலாம். இந்த மூன்று நேரங்களில் உங்களுக்கு உகந்த நேரத்தில் வெற்றிலை தீபம் ஏற்றி முருகபெருமானின் அருளை பெறுங்கள்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்

 

Advertisement