வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

எந்த மாதத்தில் வரும் பெளர்ணமியில் முருகனை வணங்குவது

Updated On: July 9, 2025 4:03 PM
Follow Us:
muruganukuriya pournami
---Advertisement---
Advertisement

பௌர்ணமி முருகனுக்கு உகந்தது

முருகனின்  பக்தர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. முருகனுக்கு உரிய நாட்கள் நிறைய இருக்கிறது. அதாவது சஷ்டி, கிருத்திகை, தைப்பூசம், செவ்வாய்க்கிழமை போன்ற நாட்கள் முருகனுக்கு உரியதாக இருக்கிறது.சமீப பௌர்ணமியும் முருகனுக்கு உகந்த நாட்களாக இருக்கிறது. ஆனால் 12 மாதத்திலும் பௌர்ணமவருகிறது. அதில் எந்த மாதத்தில் வரும் பௌர்ணமி முருகனுக்கு உகந்தது என்று பலருக்கும் தெரிவதில்லை. அதனால் இந்த பதிவில் ஒவ்வொரு மாதத்திலும் வருகின்ற பௌர்ணமி ஆனது எந்த கடவுளுக்கு உரியது என்று அறிந்து கொள்ளலாம்.

சித்திரை பௌர்ணமி:

சித்திரை மாதம் வருகின்ற பௌர்ணமி ஆனது சித்ரா பௌர்ணமி என்று அழைக்கப்படுகிறது. மனிதனின் பாவ மற்றும் புண்ணிய கணக்குகளை தெரிந்து வைத்திருப்பவர் சித்ர குப்தர்.  சித்திரை மாதம் வரும் சித்ரா பெளர்ணமியன்று சித்ரகுபதனை வணங்கும் நாள். சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள், சித்ரா பவுர்ணமியன்று சித்ரகுப்தனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவார்கள்.

வைகாசி பௌர்ணமி:

வைகாசி பௌர்ணமி ஆனது வைகாசி விசாகம் என்று அழைக்கப்படுகிறது. வைகாசி மாத பெளர்ணமி நாளில் தான் சிவனின் மகன் முருகன் அவதரித்தார். வைகாசி விசாக நாளான இன்று முருகன் கோவில்களில் கோலாகலமாக பூஜைகள் நடைபெறும். இன்று தான் புத்த பெளர்ணமியாகவும் அனுசரிக்கப்படுகிறது.

ஆனி பௌர்ணமி:

ஆனி மாத பௌர்ணமி மூலம் நட்சத்திரத்தன்று வருவதால் ஆனி மூலம் என்று அழைக்கப்படுகிறது. ஆனி பெளர்ணமி திருவையாற்றில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். சிவனுக்கு பூஜைகள் செய்வது விசேஷமானது.

ஐப்பசி பௌர்ணமி:

ஐப்பசி மாதத்தில் வருகின்ற பௌர்ணமி ஆனது சிவபெருமானுக்கு உகந்ததாக இருக்கிறது.

கார்த்திகை பௌர்ணமி:

கார்த்திகை பௌர்ணமி ஆனது தீப திருநாளாக கொண்டாப்படுகிறது. இந்த நாளில் திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஆனது விஷேசமான ஒன்றாக இருக்கிறது.

மார்கழி பௌர்ணமி:

மார்கழி மாதத்தில் வருகின்ற பௌர்ணமி ஆனது சிவனுக்கு உகந்தது. சிதம்பரத்தில் மார்கழி மாதத்தில் வருகின்ற பௌர்ணமியை சிறப்பாக கொண்டாடுவார்கள்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now