Murungai Maram Kanavil Vanthal
வாசகர்களுக்கு வணக்கம்..! இவ்வுலகில் பிறந்த அனைவருக்குமே தூக்கம் என்பது எவ்வளவு முக்கியம் என்று நம் அனைவருக்குமே தெரியும். நம் மனதில் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் அதை மறக்க செய்வது இந்த தூக்கம் தான். அப்படிப்பட்ட ஆழ்ந்த தூக்கத்தில் இடையில் வருவது தான் கனவுகள். பொதுவாக கனவுகள் என்பது நம் அனைவருக்குமே வரும். அவ்வளவு ஏன் கனவுகள் பிறந்த குழந்தைகளுக்கு கூட வரும்.
அப்படி வரும் கனவுகளில் சில கனவுகள், நல்ல கனவாக இருக்கும். சில கனவுகள் கெட்ட கனவாக இருக்கும். நாம் நமக்கு வரும் கனவுகளை அந்த அளவுக்கு பெரிதாக எடுத்துகொள்ள மாட்டோம். ஆனால் ஆன்மீக சாஸ்திரத்தில், ஒவ்வொரு கனவுகளுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கின்றன. அந்த பலன்களை நம் பதிவின் வாயிலாக தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று முருங்கை மரம் கனவில் வந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம் வாங்க..!
வேப்ப மரம் கனவில் வந்தால் என்ன பலன்
முருங்கை மரம் கனவில் வந்தால் என்ன பலன்..?
முருங்கை மரம் நம் கனவில் வந்தால் உங்கள் வீட்டில் சுப காரியங்கள் விரைவில் நடப்பதற்கான அறிகுறியாகும்.
அதுவே முருங்கைக்காய் மரத்தில் காய்கள் அதிகம் காய்த்து இருப்பது போல் கனவு கண்டால் வீட்டில் செல்வங்கள் சேரும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகமாகும்.
அதுபோல முருங்கை மரத்தில் பூக்கள் அதிகமாக பூத்திருப்பது போல கனவு கண்டால், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.
முருங்கைக் கீரை கனவில் வந்தால்:
முருங்கைக் கீரையை கனவில் கண்டால், உங்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல வாய்ப்பு தேடி வரப்போகிறது என்று அர்த்தம். அந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சூழ்நிலைகளை புரிந்து நடக்க வேண்டும் என்று அர்த்தம். முருங்கைக்கீரை கனவில் வந்தால் எதிர்காலத்தில் வெற்றி உங்களை தேடி வரும்.
சிவப்பு பூ கனவில் வந்தால் நல்லதா.. கெட்டதா..
முருங்கை மரம் காய்ந்தது போல் கனவு கண்டால்:
முருங்கை மரம் காய்ந்தது போல் கனவு கண்டால் கணவன் மனைவி இடையே பிரச்சனைகள் ஏற்படும் என்று அர்த்தம். அதுபோல பிள்ளைகளுக்கு துன்பங்கள் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.
முருங்கைக்காய் கனவில் வந்தால் என்ன பலன்:
முருங்கைக் காயை கனவில் கண்டால், நீங்கள் ஏதோ ஒரு திட்டத்தை செயல்படுத்தி, அதன் மூலம் வாழ்வில் வெற்றி பெற நினைக்கிறீர்கள் என்று அர்த்தம். அதுபோல நீங்கள் அடைய வேண்டிய வெற்றியை தைரியமாக போராடி அதில் வெற்றி பெறுவீர்கள். உங்களின் ஆசைகள் நிறைவேறும்.
கனவில் வெள்ளம் வந்தால் இதுதான் பலனா.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |