முதலை கனவில் வந்தால் என்ன பலன்..! | Muthalai Kanavu Palangal In Tamil..!

Advertisement

முதலை கனவில் வந்தால் என்ன பலன்..! | Muthalai Kanavu Palangal In Tamil..!

இன்றைய பதிவில் முதலையை கனவில் கண்டால் என்ன பலன் என்பதை தான் பார்க்கப்போகிறோம். நாம் தூங்கும் போது நிறைய கனவு காண்போம். அந்த கனவு நல்ல கனவாக இருந்தால் மகிழ்வோம் அதுவே கெட்ட கனவாக இருந்தால் அதை பற்றியே யோசித்து கொண்டு அதற்கான பலன்களை தேட ஆரம்பிப்போம். இன்று நீங்கள் முதலையை கனவில் கண்டிருந்தால் உங்களுக்கான பதிவு தான் இது. இந்த பதிவை பார்த்து என்ன பலன் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

நாம் கனவு கண்டாலே அது நல்லதாகவும் இருக்கும் கெட்டதாகவும் இருக்கும். குழந்தை கூட கனவு காணும் பொழுது தூக்கத்தில் சிரித்து கொண்டே தூங்கும் இதுவே கெட்ட கனவு கண்டிருந்தால் பயந்து அழுகும். நீங்கள் முதலையை கனவில் கண்டிருந்தால் நீங்கள் இந்த பதிவை முழுமையாக பார்த்து என்ன பலன் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

பறவைகள் மற்றும் விலங்குகளின் ஒலிகள் 

முதலை கனவில் வந்தால் என்ன பலன்:

  • முதலை கனவில் வந்தால் வாழ்வில் புதிய தொடக்கம் வரும் என்பதையும் அல்லது வாழ்வில் ஏற்படும் மாற்றத்தையும் உணர்த்துகிறது.
  • முதலை துரத்துகிறது – முதலை துரத்துவது போல கனவி வந்தால் கனவு காண்பவரின் வாழ்க்கையில் ஏற்படும் பயம் பற்றி உணர்த்துகிறது.
  • முதலை வாய் திறந்து இருந்தால் – முதலை வாயை திறந்து வைத்திருப்பது போல கனவில் வந்தால் கனவு காண்பவரின் வாழ்க்கையில் செய்யபோகும் செயல்களின் தடையை பற்றி உணர்த்துகிறது.
  • முதலையை கொள்வது – முதலையை கனவு காண்பவர் கொலை செய்வது போல் கனவு வந்தால் கனவு காண்பவற்கு வரவிற்கும் அதிர்ஷ்டம் மற்றும் கவலைகள் அனைத்தும் மனதை விட்டு நீங்குவதை உணர்த்துகிறது.
  • முதலையை கொள்ள முடியாமல் பற்களுடன் இருந்தால் – முதலையை கொள்ள முடியாமல் பற்களுடன் இருப்பது போல கனவு வந்தால் கனவு காண்பவற்கு காரணமே இல்லாமல் பயம் ஏற்படும் என்பதை உணர்த்துகிறது.
  • முதலை காயம் – முதலையை கொள்ள முயற்சிப்பது அதனை காயப்படுத்தியது போல் கனவில் வந்தால் கனவு காண்பவர் நல்ல அறிவு திறமையுடன் இருப்பதை உணர்த்துகிறது.
  • முதலையை சுடுவது – முதலையை துப்பாக்கியால் சுடுவது போல கனவு கண்டால் கனவு காண்பவர் தனக்கு தானே தன் அறிவை பரிசோதித்து பார்க்கிறார் என்பதை உணர்த்துகிறது.
  • நிறைய முதலைகள் – நிறைய முதலைகளை கனவில் பார்த்தால் கனவு காண்பவற்கு நிறைய மிரட்டல்கள் வர இருப்பதை உணர்த்துகிறது. மேலும் தற்போது பணியாற்றும் வேலையை கைவிடுவது போல் உணர்த்துகிறது.
  • முதலை சுற்றுவது – கனவு காண்பவர் தண்ணீரில் இருக்கும் பொழுது முதலை தன்னை சுற்றி வருவது போல கனவு வந்தால் கனவு காண்பவர் மகிழ்ச்சியாக இருப்பதை உணர்த்துகிறது.
  • முதலை நீந்துவது – முதலையுடன் சேர்ந்து நீந்துவது போல கனவு வந்தால் தனக்கு தேவையானது வேண்டும் என்று உணர்ச்சிவசப்படுவதை உணர்த்துகிறது.
  • சிறிய முதலை – சிறிய முதலை கனவில் வந்தால் கனவு காண்பவர்க்கு சிறிய பிரச்சனைகள் வாழ்வில் வர இருப்பதையும் பிறர் துரோகம் செய்து விட்டாரோ என்பதையும் அதனால் வரவிற்கும் கவலையை உணர்த்துகிறது.
  • முதலை கடிக்க முயற்சிப்பது – முதலை கடிக்க முயற்சிப்பது போல கனவு வந்தால் கனவு காண்பவர் யாரோ ஒருவரை சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தால் அவர் இவரை நன்கு கவனித்து உபசரிப்பார் என்று உணர்த்துகிறது.
  • முதலை கடிப்பது – முதலை கனவில் கையை கடிப்பது போல கனவு வந்தால் யாரோ தன தேவைகளுக்காக கனவு காண்பவரை பயன் படுத்திக்கொள்வதையும் மன சந்தோசம் இல்லாமல் இருப்பதையும் உணர்துகிறது. மேலும் சக பணியாளர்கள் நேர்மை இல்லாமல் நடந்து கொள்வார்கள் என்பதையும் உணர்த்துகிறது.
  • காட்டில் முதலை – காட்டில் உள்ள முதலையை கனவில் வந்தால் கனவு காண்பவர்க்கு வாழ்வில் ஒரு புதிய தொடக்கம் வர இருப்பதை உணர்த்துகிறது.
  • முதலை பழகுவது – முதலையை கனவு காண்பவர் நன்கு பழகுவது போல கனவில் வந்தால் கனவு காண்பவர் பிறர் ஆதரவை பெறுவார் என்பதையும், நல்ல பலம் மற்றும் நல்ல செல்வாக்கு இருப்பதையும் உணர்த்துகிறது.
  • ஏரியில் உள்ள முதலை – முதலை ஏரியில் இருப்பது போல கனவில் வந்தால் கனவு காணபவர் தன் வாழ்வில் அன்பு நிறைந்த வாழ்க்கையை வாழ்கிறார் என்று உணர்த்துகிறது.
  • முதலை குட்டி – பிற்ந்த முதலை குட்டி கனவில் வந்தால் கனவு காண்பவர் தன் இளமையை தக்க வைத்து கொள்ள நினைப்பதை உணர்த்துகிறது.
  • முதலை கடிப்பது – முதலை காலில் கடிப்பது போல கனவில் வந்தால் கனவு காண்பவர் தன் தொழிலில் ஏற்பட்ட முடக்கத்திற்கான காரணத்தை ஆராய்ந்து அறிய வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
  • முதலையை பார்த்து ஓடுதல் – முதலையை பார்த்து ஓடுவது போல கனவில் வந்தால் வாழ்வில் புதிய திருப்பம் வர இருப்பதையும் தாய் கவனமாக எதிர் நோக்கி சரியான பாதையில் செல்ல வேண்டும் இதனால் வெற்றி காண்பீர்கள் என்பதையும் உணர்த்துகிறது.

விலங்குகளின் அறிவியல் பெயர்கள் தமிழில்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement