முத்தான முத்துகுமார முருகையா பாடல்
இன்றைய பதிவில் முருக பெருமானின் பக்தி பாடல் பற்றி பார்க்க போகிறோம். இந்துக்களின் தமிழ் கடவுளான முருகனை மனம் உருகி பக்தியுடன் வணங்கிட நிறைய முருகன் பக்தி பாடல்கள் வரிகள் நிறைய இருக்கின்றன. அவற்றில் அந்த பக்தி பாடல் வரிகளில் ஒன்று தான் முத்தான முத்துக்குமரா முருகா வா பாடல் வரிகள் இந்த பாடல் முருகப்பெருமானை பற்றிய பிரபலமான பக்தி பாடல். இந்த பாடலை பெங்களூர் ஏ. ஆர் ரமணி அம்மாள் பாடியுள்ளார். தமிழ் கடவுள் முருகன் சுப்ரமணியர் குமாரர், கார்த்திகேயர், ஸ்கந்தன் மற்றும் வேலவன் போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். அவர் பார்வதி மற்றும் சிவனின் இளைய மகன். விநாயக பெருமானின் தம்பி என்று அழைக்கப்படுகிறார்.
மேலும் , சங்க இலக்கியங்களில் முருகனை பற்றி நிறைய குறிப்பிடப்பட்டுள்ளது. முருகனின் அறுபடை வீடுகள் அனைத்தும் தமிழ்நாட்டில் உள்ளன. அவர் தமிழ் மொழியின் கடவுளாக கருதப்படுகிறார். தமிழ்நாட்டில் முருகனுக்கு விஷேசமான சில முக்கிய நிகழ்வுகள் தைப்பூசம், வைகாசி விசாகம் மற்றும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கந்த சஷ்டி ஆறு நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது. முருகனை வழிபடும் போதும் நாம் அவருக்கான பாடல்களை பாடி வழிபடுவது மிகவும் நல்லது. இந்த பதிவில் முத்தான முத்துகுமராமுருகையா பாடல் வரிகள் பற்றி பார்க்கலாம் வாங்க…
Muththana Muthukumara Murugaiya Lyrics In Tamil :
முத்தான முத்துகுமரா
முருகையா வா
சீத்தாடும் செல்வகுமரா
சிந்தை மகிழ வா
முத்தான முத்துகுமரா
முருகையா வா
சீத்தாடும் செல்வகுமரா
சிந்தை மகிழ வா
நீ ஆடும் அழகை கண்டு
வேலாடி வருகுதையா
நீ ஆடும் அழகை கண்டு
வேலாடி வருகுதையா
வேலாடும் அழகை கண்டு
மயிலாடி மகிழுதையா
வேலாடும் அழகை கண்டு
மயிலாடி மகிழுதையா
மனமாடும் அழகை கண்டு
மக்கள் கூட்டம் ஆடுதையா
முத்தான முத்துகுமரா
முருகையா வா
சீத்தாடும் செல்வகுமரா
சிந்தை மகிழ வா
பன்னீரில் குளிக்க வைத்து
பட்டாடை உடுத்தி வைத்து
பன்னீரில் குளிக்க வைத்து
பட்டாடை உடுத்தி வைத்து
சந்தனத்தில் சாய்ந்தெடுத்து
அங்கமெல்லாம் பூசி வைத்து
சந்தனத்தில் சாய்ந்தெடுத்து
அங்கமெல்லாம் பூசி வைத்து
நீர் பூசி திலகம் வைத்து
நெஞ்சத்தில் உன்னை வைத்து
நீர் பூசி திலகம் வைத்து
நெஞ்சத்தில் உன்னை வைத்து
அன்று பூத்த மலராய் உன்னை
அற்பிப்போம் வருவாயப்பா
அன்று பூத்த மலராய் உன்னை
அற்பிப்போம் வருவாயப்பா
முத்தான முத்துகுமரா
முருகையா வா
சீத்தாடும் செல்வகுமரா
சிந்தை மகிழ வா
முத்தைத்தரு பத்தித் திருநகை திருப்புகழ் பாடல் | Muthai Tharu Lyrics in Tamil
| இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |













