நாய் சகுனம்
வணக்கம் நண்பர்களே இன்று நம் ஆன்மிகம் பதிவில் ஒரு அருமையான பயனுள்ள பதிவை பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். அதாவது நாய் பற்றிய சில சகுன பலன்கள். பொதுவாக இப்பொழுது இருக்கும் பெரும்பாலும் வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்த்து வருகிறோம். அதில் ஒன்றுதான் நாய்கள், இந்த நாய் ஆனது கால பைரவரின் வாகனம் என்றும் கருதப்படுகிறது. இவ்வாறு ஒவ்வொரு வீட்டிலும் வளரும் நாய்க்குட்டிகள் நமக்கு பல நல்ல விஷயங்களையும் செய்து வருகிறது. அது வாய் இல்லாத ஜீவனாக இருப்பதால் அது செயல்களின் மூலம் பல சகுனங்களை காண முடியும். மேலும் அவை என்ன சகுனங்கள் என்று தெரிந்துகொள்ளலம் வாங்க.
நாய் ஊளையிடுவது நல்லதா? கெட்டதா? இதுதான் உண்மை காரணம்..! |
நாய் சகுன பலன்கள்:
சகுன பலன்கள் என்பது பொதுவாக நாம் ஒரு முக்கியமான நல்ல காரியங்களுக்கு செல்லும் பொழுதோ அல்லது வேலைக்கு செல்லும் பொழுதோ ஒரு பூனை குறுக்கே சென்று விட்டால் அதை கெட்ட சகுனம் என்று நினைத்து நாம் போகும் காரியங்களை தள்ளி வைத்துவிடுவோம் , இது போல தான் நாய் செய்யும் சில விஷயங்களுக்கும் சகுன பலன்களாக இருக்கிறது.
நாம் ஒரு நல்ல காரியங்களுக்காக வெளியில் செல்லும் பொழுது எதிர் திசையில் இருந்து நாய் வரும் பொழுது நீங்கள் போகும் காரியம் நல்லபடியாகவும் நீங்கள் நினைத்தது போல வெற்றி அடையும் என்று சொல்லப்படுகிறது. மேலும் நாய் வட பக்கத்தில் இருந்து இடப்பக்கத்திற்கு செல்வது நல்லது என்றும் சொல்லப்படுகிறது.
அதேபோல் நாம் வெளியில் செல்லும் பொழுது ஒரு நாய் செருப்பையோ அல்லது மாமிச உணவு துண்டுகளை தூக்கி கொண்டு எதிரில் வந்தால் நாம் நினைத்த காரியம் நல்லபடியாக முடியும் என்றும் அர்த்தம்.
உங்கள் வீட்டில் இருக்கும் நாய் சாப்பிடாமலும், கண்ணீர் விட்டுக்கொண்டும் இருப்பதற்கு காரணம் உங்கள் வீட்டில் உள்ள யாருக்காவது உடல் நிலை சரியில்லாமல் போவதற்கு காரணமாக உள்ளது என்றும் அவர்களுக்கு நேரம் சரியில்லை என்று உணர்த்துவதற்காக இந்த சகுனத்தை காண்பிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
நீங்கள் வெளியில் செல்லும் நேரத்தில் ஒரு நாய் மாடுயுடன் விளையாடி கொண்டிருக்கும் காட்சியை பார்த்தால் உங்களுக்கு தன லாபம் உண்டாகும் என்றும் சுக வாழ்க்கை உண்டாகும் என்றும் சொல்லப்படுகிறது.
நாம் வீட்டில் இருந்து வெளியில் செல்லும் பொழுது உங்கள் வீட்டு நாய் உங்களை போகவிடாமல் தடுப்பதற்கு காரணம் என்ன தெரியுமா.? உங்களுக்கு ஏதும் திருடர்களால் பிரச்சனைகள் ஆக போகிறது என்றும் அர்த்தம். அதேபோல் வெளியில் செல்லும் பொழுது உங்களுடைய நாய் உங்களுடைய பாதங்களை மிதித்தால் உங்களுக்கு விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் சொல்லப்படுகிறது.
ரோட்டில் நடமாடும் நாய் திடீரென்று வீட்டு வாசல் பகுதியில் நின்றுகொண்டு குறைத்தால் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்று தெரிந்துகொள்ளலாம். எனவே நீங்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லும் பொழுது, உங்களை நாய் தடுத்தால் சற்று யோசித்து முடிவெடுப்பது மிகவும் அவசியம்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |