நாக தோஷம் நீங்க பரிகாரம் மற்றும் காரணங்கள்..!

நாக தோஷம் நீங்க பரிகாரம்

ஆன்மிக தகவல்கள் – நாக தோஷம் நீங்க..!

நாக தோஷம் பரிகாரம்: ஜாதகத்தில் சில கிரகங்களின் நிலை சரியில்லாமல் இருப்பதாலும், நாம் செய்யும் சில செயல்களின் வினைகளாலும் நமக்கு தோஷங்கள் ஏற்படுகின்றது. அப்படியான ஒரு தோஷம் தான் நாக தோஷம். ஒருவருக்கு மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தும் நாக தோஷத்திற்கான காரணங்களையும், அதற்கான பரிகாரங்களையும் இங்கு நாம் தெரிந்து கொள்வோம் வாங்க.

நாக தோஷம் நீங்க..!

நாக  தோஷத்திற்க்கான காரணங்கள்:

ஒருவரின் ஜாதகத்தில் ராகு அல்லது கேது கிரகம் லக்னம் 2, 5, 7, 8 ஆகிய இடங்களில் இருக்கும் பட்சத்தில் அந்த நபருக்கு சர்ப்ப தோஷம் அல்லது நாக தோஷம் உண்டாகிறது.

மேலும் பாம்பு புற்றுகளை இடிப்பதாலும், நாக பாம்புகளை கொல்வதாலும் நாக தோஷம் உண்டாகிறது.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE" சேனல SUBSCRIBE" பண்ணுங்க: Pothunalam Youtube

இந்த தோஷத்தால் திருமண தாமதம், கணவன் மனைவி பிரிதல், குழந்தை பாக்கியம் இல்லாதிருத்தல், வேலைவாய்ப்பின்மை மற்றும் தொழில் வியாபாரங்களில் நஷ்டம், திடீர் விபத்துகள் போன்ற துர்பலன்கள் ஏற்படக்கூடும்.

சுக்கிர தோஷம் நீங்க பரிகாரங்கள்!!!

நாக தோஷம் நீங்க பரிகாரம் 1:

இந்த நாக தோஷம் கொண்ட நபர்கள். தினந்தோறும் காலையில் முருகப்பெருமானின் கோவிலுக்கு சென்று அவரை வழிபட்டு வருவது நல்லது.

கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் வள்ளி, தெய்வானை உடன் இருக்கும் முருகப்பெருமானின் படத்திற்கு முன்பு விளக்கேற்றி வழிபட்டு வருவது நாக தோஷத்தின் கடுமைத்தன்மையை குறைக்கும்.

நாக தோஷம் நீங்க பரிகாரம் 2:

செவ்வாய்க்கிழமைகளில் நரசிம்மரை வழிபட்டு வருவதும் சிறந்தது. பாம்பு புற்றுள்ள கோவிலுக்கு சென்று புற்றில் பாலூற்றி வழிபட்டு, அக்கோவிலிலிருக்கும் ராகு-கேது விக்கிரகங்களுக்கு விளக்கேற்றி வழிபட்டு வருவதும் நாக தோஷத்திற்கு சிறந்த பரிகாரமாகும்.

நாக தோஷம் நீங்க பரிகாரம் 3:

வெள்ளியால் செய்யப்பட்ட மோதிரத்தில் கோமேதக ரத்தினத்தை பதித்து வலது கையின் நடுவிரலில் அணிந்து கொள்வதால் நாக தோஷம் கொண்டவர்களுக்கு தீய தோஷம் ஏற்படாமல் தடுக்கும்.

அன்றாட உணவிற்கு கஷ்டப்படும் ஏழைகளுக்கு ஏதேனும் ஒரு பருப்பு வகையை தானமாக கொடுப்பது நாக தோஷத்திற்கு சிறந்த பரிகாரம் ஆகும்.

நாக தோஷம் நீங்க பரிகாரம் 4:

இந்த துன்பங்களிருந்து மீளவும், நல்ல பலன்களை பெறவும் நாக தேவதைகளை மனம் உருகி வழிபட வேண்டும். நாக தேவதைகளின் அருளால் தோஷங்கள் விலகி நல்ல பலன்கள் பெறலாம் என்பது ஐதீகம்.

நாக தோஷம் நீங்க பரிகாரம் 5:

இந்த நாக வழிபாடு அந்தந்த இடங்களில் அவரவர் வழிபாட்டு முறையில் நடக்கிறது. புற்றுக்கு பால் தெளித்து, விநாயகருக்கு எண்ணெய் அபிஷேகம் செய்து, செம்பருத்தி மலர்கள் சூட்டி, விளாம்பழம், கரும்பு நைவேத்யம் செய்து 12 முறை வலம் வந்து வணங்க வேண்டும் என்று ஆன்மிக அன்பர்கள் சொல்கின்றனர்.

குழந்தை பாக்கியம் கிடைக்க பரிகாரம் …!

நாக தோஷம் நீங்க பரிகாரம் 6:

பிரதோஷ நாட்களில் மவுன விரதம் இருந்து உமாமகேஸ்வரி, நாகவல்லி அம்மனையும் மனம் உருகி, வேண்டி பிரார்த்தனை செய்து வந்தால் நாக தோஷம் படிப்படியாக குறைந்து நல்ல பலன்கள் ஏற்படும்.

நாக தோஷம் நீங்க பரிகாரம் 7:

ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமியில் சுமங்கலிகள் விரதம் இருந்து ஆதிசேஷனை வழிபட்டால் வேண்டியது கிடைக்கும். உடல், மனம் நலம் பெறும். சகலவிதமான செல்வங்களையும் பெறலாம்.

நாக தோஷம் நீங்க பரிகாரம் 8:

நாக சதுர்த்தி, நாகபஞ்சமி, கருட பஞ்சமி ஆகிய விரதங்களை அவரவர்கள் தங்களது விருப்பம் போல மேற்கொள்ளலாம்.

வழிபாடு வேறுபட்டாலும் நோக்கம் ஒன்றாக இருப்பதால் பலன்கள் பெறுவதில் குறை இருக்காது. வீடுகளில் விரதம் இருந்து வழிபட்டாலும் அருகில் உள்ள கோயில்களுக்கு சென்று வழிபடுவது மிகவும் நல்லது.

செவ்வாய் தோஷம் நீங்க பரிகாரம்..!

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>ஆன்மிக தகவல்கள்