Veetukul Nalla Pambu Varuvadhu Nalladha Kettadha Meaning
நல்ல பாம்பு வீட்டிற்குள் வந்தால் நல்லதா ? கெட்டதா ? என்ற சந்தேகம் எல்லோருடைய மனதிலும் இருக்கும். பாம்புகள் என்றால் பலரும் பயப்படுவோம். ஆனால் சிலர் நல்ல பாம்பை பயத்தோடு மட்டுமில்லாமல் தெய்வீக ரீதியிலும் மரியாதை கொடுக்கின்றனர். உண்மையில் நல்ல பாம்பு வீட்டிற்குள் வருவதற்கு என்ன பலன் மற்றும் அது நல்லதா கெட்டதா என இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்வோம்.
வீட்டிற்க்குள் நல்ல பாம்பு வருவது நன்மையா தீமையா :
நல்ல பாம்பு வீட்டிற்குள் வருவது தெய்வீக ரீதியாக மிகவும் நல்லது. உங்கள் வீட்டில் தெய்வ சக்தி இருக்கிறது என்பதால் தான் நல்ல பாம்பு உங்கள் வீட்டிற்குள் வருகிறது. சிலர் நல்ல பாம்பு வீட்டிற்குள் வந்தால் தோஷம் வரும் என நினைத்து பயப்படுகிறார்கள். உண்மையில் சாஸ்திரங்கள் நல்ல பாம்பு வீட்டிற்குள் வருவது நல்லது என்பதையே குறிப்பிடுகிறது. நாம் வணங்கும் தெய்வங்களும் பாம்புகளை தன்னுடன் வைத்திருப்பதை பார்த்திருப்போம். அதனால் பாம்பு வீட்டிற்குள் வருவது தெய்வத்தின் அனுகிரகமாக கூட இருக்கலாம்.
ஜாதக பிரச்சனை :
நல்ல பாம்பு வீட்டிற்கு வருவது ஜாதக ரீதியாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை வர இருந்தால் அதை முன்கூட்டியே உங்களுக்கு தெரியப்படுத்தும் வகையிலும் வரலாம். நாளைக்கு உங்களுக்கு நடக்க போகும் கெடுதலை தெரியப்படுத்தவும் நல்ல பாம்பு வீட்டிற்கு வருவது உண்டு. அப்படி நல்ல பாம்பு உங்கள் வீட்டிற்குள் வந்துவிட்டால் நமக்கு ஏதும் ஜாதக ரீதியாக பிரச்சனை இருக்குமோ என பயப்பட வேண்டாம். உங்கள் ஊரிலே நவகிரக கோவில் ஏதும் இருந்தால் அங்கு சென்று நீங்கள் விளக்கு ஏற்றி கும்பிட்டு வரலாம்.
வீட்டிற்கு வந்த நல்ல பாம்பை அடிக்கலாமா :
வீட்டிற்கு நல்ல பாம்பு வந்தால் முடிந்தவரை அடிக்காமல் விரட்ட பாருங்கள். அதனை ஏதும் செய்யாவிட்டால் தானாகவே அது போய்விடும். வீட்டிற்கு வந்த நல்ல பாம்பை அடித்தால் அது பெரிய பாவத்தை சேர்த்து விடும். அடுத்தவர்களுக்கு அவர்கள் குடும்பத்திற்கும் தோஷம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. வீட்டிற்குள் வந்த நல்ல பாம்பை அடித்து விட்டால் அது உங்கள் குடும்பத்திற்கே பெரிய பாவத்தை சேர்த்து விடும் என்பது உண்மை தான் அதனால் நல்ல வீட்டிற்குள் வந்த பாம்பாக இருந்தாலும் சரி அல்லது நீங்கள் வெளியில் பார்த்த நல்ல பாம்பாக இருந்தாலும் சரி அடிக்காமல் விட்டு விட்டால் அது தானாகவே ஏதும் தீங்கு செய்யாமல் போய் விடும். அதனால் முடிந்த வரை நல்ல பாம்பு வீட்டிற்கு வந்தால் அடிக்காமல் விரட்டி விடுவது நல்லது.
வீட்டிற்குள் பாம்பு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன் தெரியுமா.?
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |