ஐயப்பனின் நல் முத்து மணியோடு பாடல் வரிகள்..!

Advertisement

Nalmuthu Maniyodu Song Lyrics in Tamil

இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே கடவுள் நம்பிக்கை என்பது சிறிதளவேனும் காணப்படும். கடவுள் இல்லை என்பவர் கூட ஒரு சில நேரங்களில் கடவுளை பற்றி சிந்தனை செய்வார்கள். அதிலும் குறிப்பாக ஒரு சிலர் ஒரு சில கடவுள்களின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பார்கள். அப்படி இந்து மாதத்தை நம்பும் பலரால் மிக மிக அதிகமாக வணங்கப்படும் பல கடவுள்களில் ஒருவர் தான் இந்த ஐயப்பன் இவர் இவரை நம்பி வருபவரை என்றும் கைவிட மாட்டார் என்பது நம்பிக்கை.

அதனால் இவரின் அருளை பெறுவதற்காக பலரும் கார்த்திகை மாதத்தில் மாலையிட்டு சபரிமலைக்கு செல்வார்கள். அப்படி செல்லும் பக்தர்கள் 48 நாட்கள் விரதம் மேற்கொள்வார்கள். அவ்வாறு விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள்  ஐயப்பனை பஜனை பாடல்கள், சரணகோசங்கள் போன்றவற்றை கூறி வணங்குவார்கள். அப்படி ஐயப்பன் பக்தர்கள் பலரால் விரும்பி பாடப்படும் பஜனை பாடல்களில் ஒன்று தான் இந்த நல் முத்து மணியோடு பாடல். அதனால் இன்றைய பதிவில் இந்த நல் முத்து மணியோடு பாடல் வரிகளை பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

முழுமுதற் கடவுளான விநாயகரின் பஞ்சரத்னம் ஸ்லோக வரிகள்

Nalmuthu Maniyodu Lyrics in Tamil

Nalmuthu Maniyodu Lyrics in Tamil

நல் முத்து மணியோடு

ஒளி சிந்தும் மாலை
நவரத்ன‌ ஒளியோடு
சுடர்விடும் மாலை

கற்பூர‌ ஜோதியில் கலந்திடும் மாலை
கனகமணி கண்டனின் துளசி மாலை
கனகமணி கண்டனின் துளசி மாலை

ஆயிரம் சரணங்கள் சொல்லிடும் மாலை
அய்யனின் கடைக்கண்ணில்
அன்பெனும் மாலை
அழுதையில் குளித்திடும்
அழகுமணி மாலை…
பம்பையில் பாலனின்
பவள‌மணி மாலை…

ஐந்து மலை வாசனின்
அழகுமணி மாலை ஐயப்ப‌ சுவாமியின்
அருள் கொஞ்சும் மாலை
ஆனந்த‌ ரூபனின் அன்பென்னும் மாலை

கன்னியின் கழுத்தினில்
அரங்கேறும் மாலை
முத்தோடும் மணியோடும்
முழங்கிடும் மாலை
முக்கண்ணன் மகனான‌
மணிகண்டன் மாலை — கழுத்தோடு உறவாடும்
காந்தமலை மாலை ..
காண‌வரும் பக்தர்க்கு
காட்சிதரும் மாலை…

 

சபரிமலை ஐயப்பனின் கட்டோட கட்டுமுடி பாடல் வரிகள்

நல் முத்து மணியோடு பாடல் வரிகள் Pdf 

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal
Advertisement