நமஸ்தேஸ்து மஹாமாயே
ஆன்மிகத்தில் நம்பிக்கை இருப்பவர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் விளக்கேற்றி பூஜை செய்வார்கள். அப்படி பூஜை செய்யும் போது கடவுளுக்கு உரிய நெய்வெத்தியம் மற்றும் பூஜை பொருட்களை வாங்கி வணங்குவார்கள். அதோடு மட்டுமில்லமால் பக்தி பாடல்களை ரேடியோ அல்லது டீவியில் ஓட்டு ஒலிக்க விடுவார்கள். அப்படி இல்லையென்றால் தாமே பக்தி பாடல்களின் புத்தகத்தை வாங்கி வைத்து பாடுவார்கள். பக்தி பாடல்களை தெரிந்தவர்கள் எந்த புத்தகமும் இல்லாமல் பாடி விடுவார்கள். அதுவே தெரியாதவர்கள் புத்தகத்தை வாங்கி வைத்து படிப்பார்கள். ஆனால் இன்றைய காலத்தில் யாரும் புத்தகம் வாங்கி படிப்பதில்லை. ஏனென்றால் கையிலே ஸ்மார்ட் போன் உள்ளது. இதில் தேவையான பாடல் வரிகளை போட்டால் அதுவே முழு பாடலின் வரிகளும் வந்துவிடும். அது போல் இப்படி பாடல் பாடி பூஜை செய்வதன் மூலம் கடவுளின் அருள் முழுமையாக கிடைப்பதாக நம்பப்படுகிறது. அந்த வகையில் இன்றைய பதிவில் நமஸ்தேஸ்து மஹாமாயே பாடல் வரிகளை அறிந்து கொள்வோம் வாங்க..
Namastestu Mahamaye Lyrics in Tamil:
நமஸ்தேஸ்து மஹாமாயே
ஶ்ரீபீடே ஸுரபூஜிதே
ஸங்க சக்ர கதாஹஸ்தே
மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
நமஸ்தே கருடாரூடே
கோலாஸுர பயங்கரி
ஸர்வபாபஹரே தேவி
மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
முருகனின் புகழ் கூறும் அருணகிரிநாதரின் சேவல் விருத்தம்.
ஸர்வஜ்ஞே ஸர்வவரதே
ஸர்வ துஷ்ட பயங்கரி
ஸர்வதுஃக ஹரே தேவி
மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸித்தி புத்தி ப்ரதே தேவி
புக்தி முக்தி ப்ரதாயினி
மன்த்ர மூர்தே ஸதா தேவி
மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஆத்யன்த ரஹிதே தேவி
ஆதி சக்தி மகேஸ்வரி
யோகஜ்ஞே யோக ஸம்பூதே
மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸ்தூல ஸூக்ஷ்ம மஹாரௌத்ரே
மஹாசக்தி மஹோதரே
மஹா பாப ஹரே தேவி
மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
பத்மாஸன ஸ்திதே தேவி
பரப்ரஹ்ம ஸ்வரூபிணி
பரமேஸி ஜகன்மாத
மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸ்வேதாம்பரதரே தேவி
நானாலங்கார பூஷிதே
ஜகஸ்திதே ஜகன்மாத
மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
மஹாலக்ஷ்மஷ்டகம் ஸ்தோத்ரம்
யஃபடேத் பக்திமான் நர
ஸர்வ ஸித்தி மவாப்னோதி
ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா
ஏககாலே படேன்னித்யம்
மஹாபாப வினாஸனம்
த்விகால்ம் யஃ படேன்னித்யம்
தன தான்ய ஸமன்வித
த்ரிகாலம் யஃபடேன்னித்யம்
மஹாஸத்ரு வினாஸனம்
மஹாலக்ஷ்மீ ர்பவே நித்யம்
ப்ரஸன்னா வரதா ஸூபா
மஞ்சளிலே நீராடி அம்மன் பாடல் வரிகள்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |