வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

108 நந்தி போற்றி | Nandi 108 Potri in Tamil

Updated On: November 3, 2025 4:50 PM
Follow Us:
Nandi 108 Potri in Tamil
---Advertisement---
Advertisement

108 நந்தி போற்றி | Nandi 108 Potri in Tamil | Pradosha Nandi Padal Lyrics in Tamil

Nandi 108 Potri in Tamil:- பொதுவாக சிவபக்தர்கள் பிரதோஷம் நேரங்களிலில் சிவபெருமானையும், நந்தி பகவானையும் வழிபடுவது வழக்கம். இந்த பிரதோஷ நேரத்தில் பக்தர்கள் விரமிருந்து சிவபெருமானுக்குரிய மந்திரங்களை ஜெபித்து மனமகிழ்வார்கள். அதேபோல் சிவபெருமானின் முழுமையான அருள் கிடைக்க வேண்டுமென்று பக்தர்கள் அனைவரும் பிரதோஷ நாட்களில் நந்தி பகவானை முதலில் வணங்குவார்கள்.

விஷேச நாட்களில் கோவில்களுக்கு சென்று விரதம் இருந்து வழிபடுவது வழக்கம். அப்படி வரும் நாட்களில் பிரதோஷமும் ஓன்று. பொதுவாக நம்மில் பலரும் பிரதோஷத்தன்று நந்தி பகவானை வழிபடுவது வழக்கம். அந்த வகையில் இப்பதிவில் பிரதோஷ நேரங்களில் நந்தி பகவானை மனதில் நினைத்து வழிபடுவதற்கான நந்தி போற்றி இதோ.. இப்பதிவில் நாம் படித்தறியலாம் வாங்க..

நந்தி 108 போற்றி | Nandi 108 Potri in Tamil | Nandi Mantra in Tamil

சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் அதிசய நந்தி சிலை | The Bangalore shiva  temple has a mysterious thing - Tamil BoldSky

01. ஓம் அம்மையப்பன் வாகனனே போற்றி.
02. ஓம் அன்பர்க்குதவுபவனே போற்றி.
03. ஓம் அனுகூலனே போற்றி.
04. ஓம் அருந்துணையே போற்றி.
05. ஓம் அண்ணலே போற்றி.
06. ஓம் அருள்வடிவே போற்றி.
07. ஓம் அனுமன் ஆனவனே போற்றி.
08. ஓம் அரக்கரை அழித்தவனே போற்றி.
09. ஓம் அடியார்க்கு அடியவனே போற்றி.
10. ஓம் அபிஷேகப்பிரியனே போற்றி.
11. ஓம் ஆலயம் முன் இருப்பவனே போற்றி.
12. ஓம் ஆணவமழிப்பவனே போற்றி.
13. ஓம் ஆதரிப்பவனே போற்றி.
14. ஓம் ஆரூரில் நிற்பவனே போற்றி.
15. ஓம் இனியவனே போற்றி.
16. ஓம் இணையிலானே போற்றி.
17. ஓம் இடப உருவனே போற்றி.
18. ஓம் இமயத்திருப்பவனே போற்றி.
19. ஓம் இன்னல் தீர்ப்பவனே போற்றி.
20. ஓம் இசையில் மகிழ்பவனே போற்றி.
21. ஓம் ஈர்ப்பவனே போற்றி.
22. ஓம் ஈடில்லாதவனே போற்றி.
23. ஓம் உத்தமனே போற்றி.
24. ஓம் உபகாரனே போற்றி.
25. ஓம் உள்ளம் கவர்வோனே போற்றி.

Nandi 108 Potri in Tamil

26. ஓம் உட்கார்ந்திருப்போனே போற்றி.
27. ஓம் எளியவனே போற்றி.
28. ஓம் ஏற்றமளிப்பவனே போற்றி.
29. ஓம் ஐயனே போற்றி.
30. ஓம் ஐயம் தீர்ப்பவனே போற்றி.
31. ஓம் கனிவுருவே போற்றி.
32. ஓம் களிப்புருவே போற்றி.
33. ஓம் களங்கமிலானே போற்றி.
34. ஓம் கர்வம் குலைப்போனே போற்றி.
35. ஓம் கலைக்களஞ்சியமே போற்றி.
36. ஓம் கயிலைக் காவலனே போற்றி.
37. ஓம் கம்பீர உருவனே போற்றி.
38. ஓம் குணநிதியே போற்றி.
39. ஓம் குருபரனே போற்றி.
40. ஓம் குறை களைவோனே போற்றி.
41. ஓம் கூத்தனோடு உறைபவனே போற்றி.
42. ஓம் கோயில் நாயகனே போற்றி.
43. ஓம் சிவபுரத்தனே போற்றி.
44. ஓம் சிவதூதனே போற்றி.
45. ஓம் சிவனடியானே போற்றி.
46. ஓம் சிவகணத்தலைவனே போற்றி.
47. ஓம் சிவஸ்வரூபனே போற்றி.
48. ஓம் சிவஞான போதகனே போற்றி.
49. ஓம் சிலாதர் மைந்தனே போற்றி.
50. ஓம் சிரஞ்சீவியே போற்றி.

Pradosha Nandi Padal Lyrics in Tamil

51. ஓம் சுருதிகளைக் காத்தவனே போற்றி.
52. ஓம் சைவம் வளர்ப்பவனே போற்றி.
53. ஓம் சொக்கன் சேவகனே போற்றி.
54. ஒம் சோகம் தீர்ப்பவனே போற்றி.
55. ஓம் ஞானியே போற்றி.
56. ஓம் ஞானோபதேசிகனே போற்றி.
57. ஓம் தருமவிடையே போற்றி.
58. ஓம் தயாபரனே போற்றி.
59. ஓம் தளையறுப்பவனே போற்றி.
60. ஓம் தட்சனை தண்டித்தவனே போற்றி.
61. ஓம் தவசீலனே போற்றி.
62. ஓம் தஞ்சம் அளிப்பவனே போற்றி.
63. ஓம் தீதையழிப்பவனே போற்றி.
64. ஓம் துயர் துடைப்பவனே போற்றி.
65. ஓம் தூயோர் மனத்தமர்ந்தாய் போற்றி.
66. ஓம் நந்தியே போற்றி.
67. ஓம் நலமளிப்பவனே போற்றி.
68. ஓம் நமனை வென்றவனே போற்றி.
69. ஓம் நந்தனுக்கு அருளியவனே போற்றி.
70. ஓம் நாடப்படுபவனே போற்றி.
71. ஓம் நாட்டியப்பிரியனே போற்றி.
72. ஓம் நாதனே போற்றி.
73. ஓம் நிமலனே போற்றி.
74. ஓம் நீறணிந்தவனே போற்றி.
75. ஓம் நீதி காப்பவனே போற்றி.

Nandi Potri in Tamil

76. ஓம் பராக்கிரமனே போற்றி.
77. ஓம் பக்தியில் ஆழ்ந்தவனே போற்றி.
78. ஓம் பசவேசன் ஆனவனே போற்றி.
79. ஓம் பகை அழிப்பவனே போற்றி.
80. ஓம் பதமளிப்பவனே போற்றி.
81. ஓம் பர்வதமானவனே போற்றி.
82. ஓம் பிரம்பேந்தியவனே போற்றி.
83. ஓம் புண்ணியனே போற்றி.
84. ஓம் புருஷோத்தமனே போற்றி.
85. ஓம் பெரியவனே போற்றி.
86. ஓம் பெருமையனே போற்றி.
87. ஓம் மஞ்சனே போற்றி.
88. ஓம் மலநாசகனே போற்றி.
89. ஓம் மகிழ்வளிப்பவனே போற்றி.
90. ஓம் மறையே கால்களானவனே போற்றி.
91. ஓம் மால்விடையே போற்றி.
92. ஓம் மகாதேவனே போற்றி.
93. ஓம் முனியவனே போற்றி.
94. ஓம் முற்றும் உணர்ந்தவனே போற்றி.
95. ஓம் யோகியே போற்றி.
96. ஓம் ருத்திரப்பிரியனே போற்றி.
97. ஓம் வள்ளலே போற்றி.
98. ஓம் வல்லாளா போற்றி.
99. ஓம் வித்தகனே போற்றி.
100. ஓம் விண்ணோர் திலகமே போற்றி.

Nandi Potri in Tamil

101. ஓம் வீர உருவமே போற்றி.
102. ஓம் வீரபத்திரனே போற்றி.
103. ஓம் வெண்ணிற மேனியனே போற்றி.
104. ஓம் வெற்றியளிப்பவனே போற்றி.
105. ஓம் வீரசைவ நாயகனே போற்றி.
106. ஓம் ஸ்ரீ சைல நாதனே போற்றி.
107. ஓம் நம்பினோர் வாழ்வே போற்றி.
108. ஓம் நந்திகேசுவரனே போற்றி போற்றி.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now