நந்தி கனவில் வந்தால் என்ன பலன் | Kanavil Nandi Vanthal Enna Palan in Tamil

Advertisement

நந்தி கனவில் வந்தால் என்ன பலன் | Kanavil Nandi Vanthal Enna Palan in Tamil..!

கனவு என்பது ஒருவர் தூங்கும் போது தோன்றும் நிகழ்வு, உருவம், ஒளி மற்றும் உணர்ச்சி பூர்வமான ஒரு செயல் இந்த அனைத்தும் தான் கனவு எனப்படுகிறது. இத்தகைய கனவு ஆனது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக வருகிறது. சிலருக்கு நிஜத்தில் என்ன நடக்கிறதோ அது அப்படியே கூட கனவாக வரும். ஏனென்றால் கனவில் நிறைய வகைகள் உள்ளது. அந்த கனவுகள் அனைத்திற்கும் ஒவ்வொரு பலன் இருப்பதாக ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. ஒருசிலருக்கு கனவில் வரும் நிகழ்விற்கான பலன் என்னவென்று தெரியும். ஆனால் மற்ற சிலருக்கு அத்தகைய பலன்கள் என்னவென்று தெரியாமலும் இருக்கும். அந்த வகையில் இன்றைய பதிவில் கனவில் நந்தி வந்தால் என்ன பலன் என்று தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

Nandi Kanavil Vanthal Enna Palan:

நந்தி கனவில் வந்தால் என்ன பலன்

நாம் அனைவரும் பெரும்பாலும் சிவபெருமான் கோவிலுக்கு சென்று வருவோம். அப்படி நாம் செல்லும் போது சிவபெருமானை வணங்குவதற்கு முன்பாக முதலில் நந்தியை தான் பாப்போம். அதன் பிறகு தான் சிவபெருமானை பார்ப்போம்.

அதுமட்டும் இல்லாமல் யார் யார் கோவிலுக்கு வந்து இருக்கிறார்கள் என்பதையும் நந்தி தான் மூல ஸ்தானத்தில் உள்ள தெய்வத்திடம் சென்று கூறும் என்பதாக ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.

இப்படிப்பட்ட நந்தி பகவானின் பெயரிலேயே நிறைய அம்சங்கள் நிறைந்து உள்ளது. அதாவது நந்தி என்ற சொல்லுக்கு ஆனந்தம், உற்சாகம் மற்றும் மகிழ்ச்சி என்று வெவ்வேறு பெயர்கள் கூறப்படுகிறது.

நந்தி பகவானிடம் மற்றொரு சிறப்பும் உள்ளது. அது என்னவென்றால் சிவபெருமானுக்கு இருக்கின்ற 3 கண்களை நேருக்கு நேர் பார்க்கும் அம்சம் நந்தியிடம் மட்டுமே உள்ளது.

 இவ்வளவு சிறப்புகளை கொண்டுள்ள நந்தி உங்களுடைய கனவில் வந்தால் உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி வாழ்க்கையில் மகிழ்ச்சி பிறக்க போகிறது என்று அர்த்தம். மேலும் தொழில் ரீதியாகவும் இதுநாள் வரையிலும் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் கூடிய விரைவில் நீங்க போகிறது என்பதனையும் கனவில் நந்தி வந்தால் அதற்கான பலனாக சொல்லப்படுகிறது. 

ஆகவே கனவில் நந்தி வந்தால் இனி மகிழ்ச்சியான நேரமாக இருக்கும் என்பதே இதற்கான பலன் ஆகும்.

இதையும் படியுங்கள் 👉👉

குலதெய்வத்தை கனவில் கண்டால் என்ன பலன்

கோவில் கனவில் வந்தால் என்ன பலன்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement