நமது கஷ்டங்களை நீக்குவதற்க்கு நரசிம்மர் மந்திரம்

Advertisement

நரசிம்மர் மந்திரம் 

மனிதனாக பிறந்த அனைவருக்கும் ஏதோ ஒரு சூழ்நிலையில் கஷ்டங்கள் ஏற்படுகிறது. அந்த கஷ்டத்தை எல்லாம் கஷ்டம் என்று எண்ணாமல் வாழ்வின் வெற்றிக்கான வழிகள் என்று நினைத்து வாழ்வில் முன்னேற வேண்டும். மேலும் கஷ்டம் ஏற்படும் போதெல்லாம் கடவுளை நினைத்து தான் வழிபடுவோம். அந்த வகையில் நாம் கடவுளை வணங்கும் போது அவர்களுக்கு உரிய மந்திரம், ஸ்லோகங்கள் போன்றவற்றை சொல்லி வழிபட வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் நரசிம்மர் மந்திரத்தை தெறித்து கொள்வோம் வாங்க..

நரசிம்மர் மந்திரம்:

ஓம் நமோ நாரஸிம்ஹாய
வஜ்ர தம்ஷ்ராய வஜ்ரிணே
வஜ்ர தேஹாய வஜ்ராய
நமோ வஜ்ர நகாய ச

மேல் கூறப்பட்டுள்ள மந்திரத்தை நரசிம்மர் சன்னதியில் அமர்ந்து 18 தடவை உச்சரிக்க வேண்டும்.

மேலும் சுவாதி நட்சித்திரம் அன்று மாலை நேரத்தில் பழங்கள், புஷ்பங்கள், தேங்காய், பழம், பூ போன்றவற்றை வாங்கி கடவுளுக்கு அர்ச்சனை செய்து மனமுருகி உங்களது கஷ்டத்தை கூறி வணங்குவதால் தீராது என்ற கஷ்டம் கூட நீங்கி விடும். மேலும் இதனை தொடர்ந்து செய்து வர வேண்டும்.

உங்களால் கோவிலுக்கி செல்ல முடியவில்லை என்றால் வீட்டில் நரசிம்மர் படத்தை வாங்கி வைத்து இது பூஜை செய்யலாம். நெய் தீபம் ஏற்றி, மந்திரத்தை 18 முறை உச்சரிக்க வேண்டும்.

தடைகளை நீக்க கூடிய நரசிம்மர் மந்திரம்:

யஸ்ப அபவத் பக்தஜன ஆர்த்திஹந்து

பித்ருத்வம் அந்யேஷு அவிசார்ய தூர்ணம்

ஸ்தம்பே அவதார தம் அநந்ய லப்யம்

லக்ஷ்மி ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே

மந்திரத்தின் பொருள்:

பக்தியற்றவர்களால் அடைய முடியாதவனே !! தாயின் கர்ப்பத்தில் அவதரித்தால் தாமதமாகுமென்று தூணில் அவதரித்தவனே ! நினைத்த மாத்திரத்தில் பக்தர்களின் துன்பத்தைப் போக்குபவனே ! லட்சுமி நரசிம்மனே ! உனது திருவடியைச் சரணடைகிறேன்

கஷ்டம் மட்டுமில்லை நீங்கள் ஏதோ ஒரு செயல் செய்யும் போது அதில் முடிக்க முடியாமல் தடை வந்து கொண்டிருந்தால் அதற்கும் இந்த மந்திரத்தை கூறி வழிபடலாம்.

நரசிம்மர் மூல மந்திரம்:

உக்ரம் வீரம் மஹா விஷ்ணும்,
ஜ்வலந்தம் சர்வதோ முகம் நரசிம்மம்,
பீஷணாம் பத்ரம் ம்ருத்யம் ம்ருத்யம் நமாம் யஹம்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 

 

Advertisement