Narasimha Runa Vimochana Stotram
இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே தனது வாழ்க்கையை குறித்த பயம் இருக்கும். அப்படி நமது பயங்கள் அனைத்தையும் போக்கி நமது வாழ்க்கையை காப்பதற்காக பல கடவுள்கள் இருக்கின்றன. அப்படி நம்மை பாதுகாப்பதற்காக உள்ள பல கடவுள்களை ஒருவர் தான் இந்த நரசிம்ஹர். இவர் மிகவும் சாந்தமான ஒரு கடவுள் ஆனால் தன்னை நம்பி வந்தவருக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் பாதுகாப்பதற்கு முதலில் வரும் தெய்வம் இவராகத்தான் இருப்பார். அப்படிப்பட்ட இவரின் அருளை பெறுவதற்கு அவருடைய போற்றிகள், மந்திரங்கள் மற்றும் அஷ்டோத்திரம் போன்றவற்றை கூறி பூஜை செய்ய வேண்டும். எனவே தான் உங்களுக்கு உதவுவதற்காக ஸ்ரீ நரசிம்ஹர் ருண விமோசன ஸ்தோத்திர வரிகளை இன்றைய பதிவில் பதிவிட்டுள்ளோம். அதனால் இதனை முழுதாக படித்து நரசிம்ஹரின் அருளும் ஆசிர்வாதத்தையும் பெற்று கொள்ளுங்கள்.
அனைத்து கஷ்டங்களையும் போக்கும் ஐயப்பனின் ஸ்லோகம்
Runa Vimochana Narasimha Stotram in Tamil
ஸ்ரீலக்ஷ்மிநரசிம்மப்பெருமாள் திருவடிகள் சரணம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹ விமோசன ஸ்தோத்திரம்
தேவதாகார்ய ஸத்யர்த்தம் ஸபாஸ்தம்பம் ஸமுத்பம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.
லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வரதாயகம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.
ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ராப்ஜாயுத தாரிணம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.
லீமரணாத் ஸர்வ பாபக்நம் கத்ருஜ விஷநாசநம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.
ஸிம்ஹநாதேந மஹதா திகதந்தி பயநாசநம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.
ப்ரஹலாத வரதம் ஸ்ரீசம் தைத்யேச்வர விதாரிணம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.
தமிழ் கடவுளான முருக பெருமானின் பஜனை பாடல்கள்
க்ருரக்ரஹை பீடிதாநாம் பக்தாநாம் மபயப்ரதம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.
வேதவேதாந்த யஜ்ஞேசம் ப்ரஹ்மருத்ராதிவந்திதம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.
யஇதம் படே நித்யம் ருணமோசந ஸம்ஜ்ஞ்தம்
அந்ருணீ ஜாயதே ஸத்யோ தநம் சீக்ரமவாப்நுயாத்
ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மப்பெருமாள் திருவடிகள் சரணம்…
கடன் தொல்லையால் அவதிபடுவோர் அந்த கடன் தொல்லையில் இருந்துவிடுபடவும், வாழ்வில் மனநிம்மதி பெறவும், இந்த சுலோகத்தை காலை மாலை இருவேளையும் பகவான் மீது நம்பிக்கையுடன் நரசிம்ம பகவான் படத்தின் முன் அகல்விளக்கில் நெய்தீபம் ஏற்றி பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்து பின் பாலில் கல்கண்டு சேர்த்து பகவானுக்கு நைவேத்தியம் செய்து தீபாரதனை செய்து வரவும். இப்படி செய்து வந்தால் கடன் தொல்லையில் இருந்து விடுதலை பெறலாம்.
ஸ்ரீ நரசிம்ஹர் ருண விமோசன ஸ்தோத்திரம் |
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |