Narasimha Slokas in Tamil
இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே தனது வாழ்க்கையை குறித்த பயம் இருக்கும். அப்படி நமது பயங்கள் அனைத்தையும் போக்கி நமது வாழ்க்கையை காப்பதற்காக பல கடவுள்கள் இருக்கின்றன. அப்படி நம்மை பாதுகாப்பதற்காக உள்ள பல கடவுள்களை ஒருவர் தான் இந்த நரசிம்ஹர். இவர் மிகவும் சாந்தமான ஒரு கடவுள் ஆனால் தன்னை நம்பி வந்தவருக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் பாதுகாப்பதற்கு முதலில் வரும் தெய்வம் இவராகத்தான் இருப்பார். அப்படிப்பட்ட இவரின் அருளை பெறுவதற்கு அவருடைய போற்றிகள், மந்திரங்கள் மற்றும் அஷ்டோத்திரம் போன்றவற்றை கூறி பூஜை செய்ய வேண்டும். எனவே தான் உங்களுக்கு உதவுவதற்காக தீராத கஷ்டங்கள் தீர்க்கும் நரசிம்ஹர் மந்திர வரிகளை இன்றைய பதிவில் பதிவிட்டுள்ளோம். அதனால் இதனை முழுதாக படித்து நரசிம்ஹரின் அருளும் ஆசிர்வாதத்தையும் பெற்று கொள்ளுங்கள்.
ஐயப்பனின் இருமுடி கட்டு சபரிமலைக்கு பாடல் வரிகள்
Narasimha Mantra in Tamil:
ஓம் நமோ நாரஸிம்ஹாய
வஜ்ர தம்ஷ்ராய வஜ்ரிணே
வஜ்ர தேஹாய வஜ்ராய
நமோ வஜ்ர நகாய ச
முதலில் ஒரு லட்சுமி நரசிம்ம சுவாமியின் சன்னதியில் மாலை வேளையில் இம்மந்திரத்தை 18 தடவைகள் உச்சாடனம் செய்து ஆரம்பிக்க வேண்டும். அதன் பிறகு இந்த லட்சுமி நரசிம்மர் மந்திரத்தை தினமும் தொடர்ந்து சொல்லி வழிபாடு செய்து வந்தால் தீராத கஷ்டங்கள் தீரும்.
நம்மை காத்து அருளும் ஐயப்பனின் பள்ளிக்கட்டு சபரிமலைக்கு பாடல் வரிகள்
நடக்காததை நடத்தி காட்டும் நரசிம்ம மந்திரம்:
நீங்கள் எடுக்குமா அனைத்து முயற்சிகளும் தடைபடுகிறது என்றால் இந்த மந்திரத்தை குறி நரசிம்ஹரை வழிபடுங்கள்.
யஸ்ப அபவத் பக்தஜன ஆர்த்திஹந்து
பித்ருத்வம் அந்யேஷு அவிசார்ய தூர்ணம்
ஸ்தம்பே அவதார தம் அநந்ய லப்யம்
லக்ஷ்மி ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே
இந்த ஸ்லோகத்தை சொல்ல முடியாதவர்கள் பொருளை சொல்லுங்கள்.
மந்திரத்தின் பொருள்:
“பக்தியற்றவர்களால் அடைய முடியாதவனே !! தாயின் கர்ப்பத்தில் அவதரித்தால் தாமதமாகுமென்று தூணில் அவதரித்தவனே ! நினைத்த மாத்திரத்தில் பக்தர்களின் துன்பத்தைப் போக்குபவனே ! லட்சுமி நரசிம்மனே ! உனது திருவடியைச் சரணடைகிறேன் .
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |