புகழ்பெற்ற நரசிம்மர் கோவில் வரலாறு..! Narasimhar History In Tamil..!
நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் சென்னையில் உள்ள புகழ்மிக்க சிறந்து விளங்கும் லட்சுமி நரசிம்மர்(Narasimha Temple) கோவிலின் சிறப்பம்சங்கள், கோவில் தல வரலாறு, பற்றிய முழு விவரங்களையும் இன்று படித்து அனைவரும் தெரிந்து கொள்ளுவோம் வாங்க..!
![]() |
லட்சுமி நரசிம்மர் கோவில் வரலாறு:
தமிழ்நாட்டில் சென்னை மாவட்டத்தில் உள்ள நங்கநல்லூர் என்னும் ஊரில் அருள்பாலித்து கொண்டிருப்பவர் லட்சுமி நரசிம்மர். அந்த காலத்தில் இருந்த பரசுராமனின் தந்தை ஜமதக்னி என்ற முனிவருக்கு ஒரு ஆசை இருந்தது என்று கூறுகிறார்கள். அந்த ஆசை என்னவென்றால் பிரகலாதனுக்காக அங்குள்ள தூண்களை பிளந்து கொண்டு வந்த நரசிம்மரை தரிசனம் செய்யவேண்டும் என்பதுதான் ஜமதக்னி முனிவரின் ஆசையாக இருந்தது.
ஆசை நிறைவேற வேண்டும் என்பதற்காக பல யாகங்களையும் நடத்தி வந்தார் முனிவர். முனிவர் நடத்திய அந்த யாகத்தீயில் நடுவில் உக்கிர கோலத்தோடு நரசிம்மர் தோன்றி அருளினார்.
முனிவரின் ஆசைப்படி உக்கிர கோலத்தில் தோன்றிய நரசிம்மரை பார்த்ததும் முனிவர் பரவசம் அடைந்தார். பரவசப்பட்ட ஜமதக்னி அவர் உடல் சாந்தமாகவும், தான் பெற்ற நரசிம்ம தரிசனத்தை அனைவரும் பெற வேண்டும் என்று நரசிம்மரிடம் வரமாக முனிவர் இதை கேட்டார்.
அந்த இடத்தில் பெருமாளும் லட்சுமியை தாங்கி லக்ஷ்மி நரசிம்மராக புன்னைகைத்தபடி அத்தலத்தில் நரசிம்மர் தோன்றி அருள் புரிந்தார். சென்னை மாவட்டத்தில் உள்ள நங்கநல்லூர் எப்படி தோன்றியது என்றால் நங்கையாகிய லட்சுமி தோன்றிய இடம் நங்கைநல்லூர் என்பதால் இந்த கோவிலுக்கு நங்கநல்லூர் என்று பெயர் வர காரணம் ஆகியது.
புகழ்பெற்ற நரசிம்மர் கோவில் (narasimha temple) சிறப்பம்சம்:
நங்கநல்லூரில் அமைந்திருக்கும் லட்சுமி நரசிம்மர் கோவிலின் சிறப்பம்சம் என்னவென்றால் ஐந்து தலை நாகத்தின் மேல் நரசிம்மர் அமர்ந்தபடியே பக்தர்களுக்கு அருள் கொடுப்பது தான் இந்த கோவிலின் சிறப்பு.
நரசிம்மர் கோவில் திருவிழா:
இந்த நரசிம்மர் கோவிலில் வருடாந்திரம் இரண்டு திருவிழாக்கள் நடைபெறும். முதலாவதாக நடைபெறும் திருவிழா நரசிம்ம ஜெயந்தி, அடுத்ததாக கிருஷ்ண ஜெயந்தி என்னும் திருவிழாக்கள் கோலாகலமாக நடைபெறும்.
சென்னை லட்சுமி நரசிம்மர் கோவில் தலபெருமை:
கோவிலின் ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்ட மண்டபத்தின் தெற்கு பகுதியில் ரங்கநாதன் என்பவர் பள்ளி கொண்டுள்ளார். வடக்கு பகுதியில் நர்த்தன கிருஷ்ணர் ஆடும் நிலையில் இருக்கிறார். கிழக்கு திசையில் லட்சுமி நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகின்றார்.
நான்கு கரத்தினை கொண்டு காட்சி தரும் நரசிம்மரின் மேல் இருக்கும் இரு கரங்களில் சங்கு, சக்கரம் தோன்றியிருக்கும். நரசிம்மர் சிலையின் வலது கீழ்கரத்தில் அபயமுத்திரையும், இடது கீழ்கரம், மடியில் மஹாலக்ஷ்மியை அணைத்தபடி நரசிம்மர் காட்சி தருகின்றார்.
இந்த நரசிம்மர் கோவிலில் சீனிவாச பெருமாள் சன்னதி, சஞ்சீவி ஆஞ்சநேயர் சன்னதி, பதினொரு ஆழ்வார்கள், ஆண்டாள், சக்கரத்தாழ்வார் போன்ற சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
![]() |
நேர்த்திக்கடன்:
இந்த கோவிலில் அமைந்திருக்கும் நரசிம்மர் மற்றும் கிருஷ்ணர் கடவுளுக்கு பக்தர்கள் அனைவரும் வெண்ணெய், புது வஸ்திரம், போன்ற பொருள்களை வைத்து நரசிம்மர், கிருஷ்ணர் தெய்வத்திற்கு பக்தர்கள் வேண்டிய நேர்த்திக்கடனை செய்து வருகிறார்கள்.
நரசிம்ம கோவில் பிரார்த்தனை:
இந்த நரசிம்ம கோவிலில் பிரார்த்தனை எதுவாக இருந்தாலும் அங்குள்ள சக்கரத்தின் மீது பக்தர்கள் அனைவரும் இரு கைகளையும் வைத்து வேண்டினால் மனதுக்குள் வேண்டிய அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
நரசிம்ம கோவில் தரிசன நேரம் / Nanganallur Temple Timings:
இந்த கோவில் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை நடை திறந்து இருக்கும்.
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில் நடை திறந்து இருக்கும்.
நங்கநல்லூர் நரசிம்ம கோவில் முகவரி / Nanganallur Lakshmi Narasimha Temple Address:
அருள்மிகு லட்சுமி நரசிம்ம நவநீதகிருஷ்ணன் திருக்கோவில், நங்கநல்லூர், சென்னை.
தொலைபேசி: 044-22249881
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Aanmeega Thagaval in Tamil |