உங்கள் நட்சத்திரம் சொல்லும் குணங்கள் | Natchathira Gunangal

Natchathira Gunangal

நட்சத்திர குணங்கள் | Natchathira Kunam in Tamil

ஒவ்வொருவர் நட்சத்திரங்கள் அடிப்படையில் அவரவர் குண நலன்கள் அமைந்துள்ளது. நட்சத்திரங்களில் மொத்தம் 27 வகையான நட்சத்திரங்கள் உள்ளது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு குணமும், சிறப்பம்சமும் உள்ளன. ஜோதிட அறிவியலில் நட்சத்திரங்கள், திதி, கால நேரம் ஆகியவை முக்கியமான அடிப்படை. இதோ 27 நட்சத்திரக்காரர்களின் குண நலன்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

27 நட்சத்திரக் கோயில்கள் பட்டியல்

அஸ்வினி நட்சத்திரம் குணங்கள்:

அஸ்வினி நட்சத்திர கூட்டமானது குதிரை முக வடிவில் இருக்கும். ஆறு நக்ஷத்திரங்களைக் குறிக்கும் இது மேஷ ராசியில் அமையும். இந்த நக்ஷத்திரத்தை ஆளும் கிரகம் கேது. ராசிக்குரிய கிரகம் செவ்வாய். இவர்கள் மன உறுதியும், உடல் வலிமையையும் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் கூர்மையான அறிவாற்றலும், சிந்தனை திறன் அதிகமாக இருக்கும். நெருக்கமான நண்பர்கள் என்று ஒரு சிலர்தான் இருப்பார்கள். ஆன்மீக வழிபாட்டில் அதிக நாட்டம் கொண்டவர். போலீஸ், ராணுவம் போன்ற துறைகளில் சேர்ந்து சிறப்பான சாதனைகள் புரிய வாய்ப்புகள் அதிகம் உண்டு. அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய அஸ்வினி தேவர்கள் தேவலோக மருத்துவர்கள் என்பதால் ஒரு சிலர் மருத்துவத் துறையிலும் சிறந்து விளங்குவார்கள். மற்றவர்களிடம் நேர்மை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

பரணி நட்சத்திர குணங்கள்:

பரணி நட்சத்திரம் விஷ்ணுவின் திருநாமத்தைப் போல அமைந்த 3 நட்சத்திர கூட்டம். பரணியில் பிறந்தவர் தரணி ஆழ்வார் என்ற பழமொழி உண்டு. பரணி நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் வசீகரமான தோற்றம், உயர்வாக வாழத் துடிப்பு, சுகபோகத்தை அனுபவிக்க விருப்பம், சுயநலம், தோல்வியைத் தாங்க முடியாத பயம், பாசமும் நேசமும் உள்ள பண்பு ஆகியவை இந்த நக்ஷத்திரத்துக்குரிய பொதுவான குணங்கள். மற்றவர்களுக்கு தானம் செய்வதில் ஆர்வம் அதிகம் உள்ளவர்கள். எந்த ஒரு செயலையும் விடாமுயற்சியுடன் முடிக்கக்கூடியவர்கள். இவர்கள் சிறந்த ஆளுமை மற்றும் நிர்வாகத்திறன் படைத்தவர்களாக இருப்பார்கள். வாழ்க்கையில் எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் சாதாரணமாக எடுத்துக்கொள்வார்கள்.

கிருத்திகை நட்சத்திர குணங்கள்:

கிருத்திகை நட்சத்திரமானது முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரம். இது கத்தி போன்று அமைந்துள்ள 6 நட்சத்திரங்களை கொண்டுள்ள கூட்டமாகும். இந்த நட்சத்திரத்தின் அதிபதி சூரியன் ஆகும். இவர்கள் நல்ல தோற்றத்தினை உடையவர்கள், பெரும்பாலும் மகிழ்ச்சியை விரும்பக்கூடியவர்கள், சட்டென கோபம் வந்தாலும் அந்த கோபம் உடனே மறையும் இயல்பினை உடையவர்கள். இவர்களிடம் பிடிவாத குணம் காணப்படும். கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் அனைத்து விஷயங்களிலும் இருக்கும் நன்மை மற்றும் தீமைகளை அலசி ஆராய்ந்து, எந்த ஒரு பிரச்சனைக்கும் நல்ல தீர்ப்பினை வழங்கக்கூடியவர். மிகவும் சுறுசுறுப்பாக இருக்கக்கூடியவர்கள்.

27 நட்சத்திர அதிர்ஷ்ட தெய்வங்கள்

மிருகசீரிடம் நட்சத்திர குணங்கள்:

ம்ருக என்றால் மான்; சீர்ஷம் என்றால் சிரசு அல்லது தலை. தமிழின் ஆயுத எழுத்தான ஃ போல மூன்று நட்சத்திரங்கள் இதில் அடங்கும். மானின் தலைபோலத் தோற்றமளிப்பதால் மிருகசீர்ஷம் எனப் பெயர் பெற்றது. இவர்கள் எப்போதும் இளமை தோற்றத்துடன் இருக்கக்கூடியவர்கள். இவர்களிடம் பேச்சுத்திறமை வெளிப்படும். தனக்கென்று ஒரு தனிவழியை தேர்வு செய்து நடப்பார்கள். எந்த ஒரு செயலுக்கும் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த ஒரு செயலிலும் துணிச்சலுடன் செயல்பட்டு வெற்றியை அடைவார்கள். எந்த இடத்தில் தவறுகள் நடந்தாலும் முதலில் தட்டி கேட்பவர்களாக இருப்பார்கள். எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் வரை பின்வாங்கமாட்டார்கள். எதிர்கால வாழ்க்கைக்கு மிகவும் போராடி பொருள்களை சேர்ப்பார்கள். மற்றவர்களுக்காக எந்த ஒரு செயலிலும் விட்டுக்கொடுத்து செல்லும் மனப்பான்மை இவர்களிடம் இருக்கும்.

ரோகிணி நட்சத்திர குணங்கள்:

தேர் வடிவில் அமைந்த 5 நட்சத்திரங்களின் கூட்டம் இது. இந்த நட்சத்திரமானது ரிஷப ராசியில் சேரும். ஸ்ரீ கிருஷ்ணன் இந்த நட்சத்திரத்தில் தான் அவதரித்தார். இந்த நட்சத்திரத்தின் அதிபதியாக இருப்பது சந்திரன். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சுதந்திரமாக இருக்கக்கூடியவர்கள். எந்த ஒரு விஷயத்தையும் தானாக சிந்தித்து முடிவு எடுப்பார்கள். இவர்கள் வார்த்தையை விட செய்கைகளின் மூலம் பல விஷயங்களை தெரியப்படுத்துபவர்களாக இருப்பார்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிகமாக உழைக்கக்கூடியவர்களாக இருப்பார்கள். அமைதியான வாழ்க்கையை வாழ்வதையே பெரிதும் விரும்புவார்கள். மற்றவர்களிடம் கொடுத்த வாக்கினை காப்பாற்றுபவர்களாகவும், அளவற்ற செல்வம் கொண்ட வாழ்க்கையையும் வாழ்வார்கள்.

மேலும் மீதமுள்ள நட்சத்திர குணங்களின் தொடர்ச்சியை அடுத்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்..

27 நட்சத்திரத்திற்குரிய மரங்கள்

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்