Natha Vinthu Lyrics in Tamil
பொதுவாக ஆன்மிகத்தில் விருப்பம் இருப்பவர்கள் காலை மற்றும் மாலை நேரத்தில் ஆன்மிக பாடல்களை கேட்பார்கள். ஆன்மிக பாடல்கள் கேட்பதன் மூலம் அவர்களின் மனது அமைதியாகின்றது, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கின்றது என்று நினைக்கிறார்கள். சில நபர்கள் பூஜை செய்யும் அந்தந்த கடவுளுக்கு உரிய பாடல்களை பாடி கொண்டே பூஜை செய்வார்கள். பாடல்களை தெரியா விட்டாலும் புத்தகம் வாங்கி வைத்து அதனை பார்த்து பாடல்களை பாடி கொண்டே பூஜை செய்தார்கள். ஆனால் இன்றைய காலத்தில் யாரும் புத்தகம் வாங்கி படிப்பதில்லை. அதான் கையிலே போன் உள்ளது. அதில் பாடல் வரிகளை போட்டால் வந்து விடுகிறது. அதனால் உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் நாத விந்து பாடல் வரிகளை அறிந்து கொள்வோம் வாங்க..
நாத விந்து பாடல் வரிகள்:
நாதவிந்துக லாதீ நமோநம
வேதமந்த்ரசொ ரூபா நமோநம
ஞான பண்டித ஸ்வாமீ நமோநம
வெகுகோடி
நாம சம்புகு மாரா நமோநம
போக அந்தரி பாலா நமோநம
நாக பந்தம யூரா நமோநம
பரசூரர்
சேத தண்டவி நோதா நமோநம
கீதகிங்கிணி பாதா நமோநம
தீர சம்ப்ரம வீரா நமோநம
கிரிராஜ
தீபமங்கள ஜோதீ நமோநம
தூய அம்பல லீலா நமோநம
தேவ குஞ்சரி பாகா நமோநம
அருள்தாராய்
ஈத லும்பல கோலாலபூஜையும்
ஓதலுங்குண ஆசார நீதியும்
ஈரமுங்குரு சீர்பாத சேவையும்
மறவாத
ஏழ்தலம் புகழ் காவேரியால் விளை
சோழமண்டல மீதே மநோகர
ராஜ கம்பீர நாடாளுநாயக
வயலூரா
ஆத ரம்பயி லாரூரர் தோழமை
சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
ஆடல் வெம்பரி மீதே றிமாகயி
லையிலேகி
ஆதி யந்தவு லாவா சுபாபாடிய
சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள்
பெருமாளே
காரிய சித்தி மாலை பாடல் வரிகள்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |