நவகிரகங்களின் வாகனங்கள் – Navagraha Colour in Tamil
ஜோதிடத்தில் பெரும்பாலும் இடம் பெறக்கூடியது அந்த ஒன்பது கோள்கள் தான். இந்த ஒன்பது கோள்கள் குறித்த ஒரு வித்தியாசமான தகவலை பற்றி நாம் இப்பொழுது அறியலாம். பொதுவாக இந்து மதத்தில் அனைவரது வீட்டிலும் விளக்கு ஏற்றும் பழக்கம் இருக்கும். அப்படி விளக்கு ஏற்றும் போது அந்த திரியை பெற்ற வைக்கும் போது கருப்பாக மாறும் பின்பு விளக்கு எரிய ஆரம்பிக்கும். அதாவது அந்த தீபத்தின் நுனி பகுதியில் ஒரு படலம் போல் வரும் அதில் தான் ஜோதி எரியும் அதனுடைய தத்துவம் என்னவென்றால் நம் கண்கள் தான் அது. ஏன் இப்படி சொல்றோம்னா.. கண் அப்படி இருந்தால் தான் நம்மால் நிறங்களை பார்க்க முடியும் என்ற அடிப்படையில் அமைந்துள்ளது.
வெண்மையாக இருக்கக்கூடிய அந்த திரியில் ஜோதி ஏற்றியவுடன் அந்த திரி கருப்பாக மாறிவிடும். இந்த தத்துவம் தான் நம் வெண்விழி படலம் திரியாகவும், திரியில் உள்ள கருப்பு நிறம் நம் கருவிழியாகவும், ஜோதி நமது பார்வையாகவும் அமைந்துள்ளது. இது பலருக்கு தெரியாத ஒரு உண்மை. மேலும் நாம் வானில் தோன்றும் அழகான வானவில்லை பார்த்திருப்போம். அந்த வானவில்லில் மொத்தம் 7 நிறங்கள் இருக்கும். அந்த ஏழு நிறங்களுடன் சேர்த்து நம் கண்ணில் உள்ள வெண்மை மற்றும் கருமையை சேர்த்து மொத்தம் ஒன்பது நிறங்கள் வரும். இந்த ஒன்பது நிறங்களும் ஒன்பது கோள்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நவக்கிரகம் இல்லாத சிவன் கோயில் எது தெரியுமா?
இதனை ஆரம்பகாலத்தில் நம் ஞானிகளாகட்டும், சித்தர்களாகட்டும், முனிவர்களாகட்டும் ஒப்பிட்டு பார்த்துள்ளனர். இதை தான் அண்டத்தில் உள்ளது பிண்டம், பிண்டத்தில் உள்ளது அண்டம் என்று சொன்னாங்க. இந்த தத்துவங்களை வைத்து தான் ஜோதிட சாஸ்திரத்தில் நிறங்களை கோள்களுடன் ஒப்பிட்டுள்ளனர். சரி இந்த பதிவில் ஒன்பது கோள்கள் அன்று அழைக்கப்படும் ஒன்பது நவகிரங்கங்களுக்குறிய நிறங்களை பார்க்கலாம் வாங்க.
நவகிரகங்கள் நிறம் – Navagraha Colour in Tamil:
- சூரியன் – சிகப்பு
- சந்திரன் – வெண்மை
- செவ்வாய் – செஞ்சிவப்பு
- புதன் – பச்சை
- குரு – மஞ்சள்
- சுக்கிரன் – வெண்மை மற்றும் சாம்பல் நிறம் கலந்து
- சனி – கருப்பு
- ராகு – நீலம்
- கேது – கருஞ்சிவப்பு
இந்த நிறங்களை வைதே ஜோதிடத்தில் கோள்களின் நிறங்களையும், அதனுடைய குணங்களையும் பிரித்துள்ளனர். ஆக ஜோதிடத்தில் கோள்களுடைய பங்கு என்னவென்றால் ஒரு கோள் அதனுடைய நிறம் நிறம் சார்ந்த தன்மை அதனை கொண்டே அதனுடைய வலிமையை காட்டும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
9 நவகிரகங்கள் பற்றிய தகவல்கள்..!
இதுபோன்று ஆன்மீக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |