நவகிரகத்தை எத்தனை முறை சுற்ற வேண்டும் தெரியுமா.?

Advertisement

Navagraha Sutrum Murai

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் நவகிரகத்தை சுற்றும் முறை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க. பொதுவாக நம் அனைவருக்குமே நவக்கிரத்தை வழிபடும் முறை பற்றி தெரிவதில்லை. அதாவது, மற்ற தெய்வங்களை விட நவகிரகங்களை எப்படி வழிபட வேண்டும் என்று நம்மில் பலருக்கும் தெரிந்திருக்காது. ஆகையால் அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவில் நவகிரங்களை எப்படி வழிபட வேண்டும் என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம்.

நவகிரகம் என்பது நம் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இவற்றின் பெயர்ச்சி நிலையை வைத்தே நம் வாழ்க்கை முறை கணிக்கப்படுகிறது. நமக்கு ஏற்பட்டுள்ள அனைத்து நன்மைகள் மற்றும் தீமைகள் அனைத்திற்கும் காரணமாக இருப்பது நவகிரகங்கள் தான். அப்படி இருக்கும் பட்சத்தில் நாம் நவகிரகங்களை வழிப்படுவது மிகவும் முக்கியம். நவகிரகங்களை முறையாக வழிப்படுவதன் மூலம் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும்.

நவகிரகங்களின் குணங்கள் பற்றி தெரியுமா.?

நவ கிரகத்தை எத்தனை முறை சுற்றி வழிபட வேண்டும்..?

நவ கிரகத்தை எத்தனை முறை சுற்றி வழிபட வேண்டும்

கோவிலில் நவக்கிரகத்தை 9 முறை சுற்றி வழிபட வேண்டும். கோவிலுக்கு சென்று முதலில் விநாயகரை வணங்கிவிட்டு அதன் பிறகு மற்ற கடவுள்களை வணங்கிவிட்டு இறுதியாக நவகிரகங்களை வழிபட வேண்டும். நவகிரகங்களை முதலில் 9 முறை சுற்ற வேண்டும். அதன் பிறகு, ஒவ்வொரு கிரகத்திற்கும் ஏற்ற எண்ணிக்கையில் சுற்ற வேண்டும். அதனை பற்றி பின்வருமாறு பார்க்கலாம்.

முதலில் நவகிரகத்தை 9 முறை பொதுவாக சுற்றி வணங்கிவிட்டு, அதன் பிறகு நீங்கள் குறிப்பிட்ட நவகிரகத்தை வணங்க வேண்டுமானால், அந்த கிரகத்திற்கு ஏற்ற எண்ணிக்கையில் சுற்ற வேண்டும்.

நவகிரகம்  சுற்றும் முறை 
சூரியன் சூரிய பகவானை 10 முறை சுற்ற வேண்டும். 
சுக்கிரன் சுக்கிர பகவானை 6 முறை சுற்ற வேண்டும். 
சந்திரன் சந்திர பகவானை 11 முறை சுற்ற வேண்டும். 
சனி சனி பகவானை 8 முறை சுற்ற வேண்டும். 
செவ்வாய் செவ்வாய்  பகவானை 9 முறை சுற்ற வேண்டும். 
ராகு ராகு பகவானை 4 முறை அடிப்பிரதட்சிணமாக சுற்ற வேண்டும். 
புதன் புதன் பகவானை 5 அல்லது 12 அல்லது  23 முறை சுற்ற வேண்டும். 
கேது கேது பகவானை 09 முறை சுற்ற வேண்டும். 
வியாழன் வியாழன் பகவானை 3, 12 அல்லது 21முறை சுற்ற வேண்டும். 

கிரகங்கள் தரும் யோகங்கள்:

நவகிரகம்  யோகம் 
சூரியன் ஆரோக்கியம்
சுக்கிரன் வசீகரத் தன்மை
சந்திரன் புகழ்
சனி மகிழ்வான வாழ்க்கை
செவ்வாய் செல்வச் செழிப்பு
ராகு தைரியம்
புதன் அறிவு வளர்ச்சி
கேது பாரம்பரியப் பெருமை
வியாழன் மதிப்பு

சிவன் கோவிலை எத்தனை முறை சுற்ற வேண்டும் தெரியுமா..?

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்  
Advertisement