Naval Palam Kanavu Palangal In Tamil
வாசிப்பாளர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் நாவல் பழம் மரத்தை கனவில் வந்தால் என்ன பலன் என்பதை பற்றி தான் பார்க்கப்போகிறோம். நாவல் பழத்தை ஆங்கிலத்தில் Jamun Fruit அல்லது Java Plum என்று அழைப்பார்கள். நாவல் பழத்தில் வைட்டமின் சி, இரும்பு, கால்சியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. நாவல் பழம் சீசன் ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை இருக்கும். நாவல் பழம் சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. இரத்த சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் இதனை அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும்.
நாவல் பழம், அருகதம், நவ்வல், நம்பு, சாட்டுவலம், சாம்பல் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. மேலும், நாவல்பழத்தில் கருநாவல், கொடி நாவல் மற்றும் சம்பு நாவல் என மூன்று வகைகள் உள்ளன. எனவே இந்த பதிவில் நாவல் பழ மரத்தை கனவில் கண்டால் என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.
நாவல் பழத்தின் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?
நாவல் பழ மரத்தை கனவில் கண்டால் என்ன பலன்:
- நாவல் பழ மரத்தை நீங்கள் கனவில் கண்டால் உங்களுக்கு நல்ல காலம் வந்துவிட்டது என்று அர்த்தம்.
- நாவல் மரத்தில் பூக்கள் பூத்திருப்பது போல் கனவு கண்டால் நீங்கள் எதிர்பார்க்கும் நல்ல செய்தி வரப்போகிறது என்று அர்த்தம்.
- நாவல் மரத்தில் காய்கள் மட்டும் இருப்பதை போல் நீங்கள் கனவு கண்டால் நீங்கள் வெற்றி பெற சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும்.
- நாவல் மரத்தில் பழம் பழுக்க இருப்பது போல் கனவு கண்டால் நீங்கள் நீண்டகாலமாக காத்திருந்த நற்பலன்கள் கிடைக்கும்.
- நாவல் பழத்தை பறிப்பது போல் கனவு கண்டால் நல்ல வேலை, நல்ல வருமானம், வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும் என்று அர்த்தம். மேலும் பணியில் வெற்றி பெறுவீர்கள். தடைபட்ட காரியம் விரைவில் நடக்கும்.
- நாவல் பழத்தை சாப்பிடுவது போல் கனவு கண்டால் குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
- நாவல் பழத்தை பிறருக்கு கொடுப்பது போல் கனவு கண்டால் வறுமை ஏற்படும்.
- நாவல் பழ மரம் பட்டுபோவது போல் அல்லது வெட்டுவது போல் கனவு கண்டால் கெட்ட காரியம் நடக்க போகிறது என்று அர்த்தம். இதற்கு இறை வழிபாடு மேற்கொள்வது நல்லது.
- நாவல் பழம் கனவில் வந்தால் நீங்கள் நினைத்த காரியங்கள் நடைபெறும். மேலும் செல்வம் அதிகரிக்கும்.
நாவல்பழத்தை யார் சாப்பிட கூடாது தெரியுமா.?
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |