நவமி அன்று இதை மட்டும் செய்து விடாதீர்கள்..!

Advertisement

Navami Andru Seiya Koodathavai

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இன்று நம் பதிவின் வாயிலாக நவமி அன்று என்ன செய்ய கூடாது என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக இந்து சமயத்தில் ஒவ்வொரு விஷயங்களையும் நல்ல நாள், நல்ல நேரம் என்று பார்த்து பார்த்து தான் செய்வார்கள். அப்படி பார்க்கும் விஷயங்களில் இதுவும் ஓன்று. அதாவது, அஷ்டமி, நவமி மற்றும் பஞ்சமி என்ற திதிகளும் ஒன்று. இந்த மாதிரி அஷ்டமி நவமியில் சில எந்த விஷயங்களையும் செய்ய மாட்டார்கள். ஆகவே நாம் இன்று நம் பதிவின் வாயிலாக நவமி திதி என்றால் என்ன..? நவமி திதியில் என்ன செய்யக்கூடாது என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.

எந்த திதியில் என்ன செய்யலாம்

நவமி திதி என்றால் என்ன..? 

பொதுவாக ஆன்மீகத்தில் நவமி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கிறது.

இந்த நாட்கள் பொதுவாகத் “திதி” என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன. அதாவது நவமி திதி என்று சொல்லப்படுகிறது. இன்னும் தெளிவாக சொல்லவேண்டும் என்றால், அமாவாசை நாளையும், பௌர்ணமி நாளையும் அடுத்து வரும் ஒன்பதாவது திதி தான் நவமி ஆகும்.

அதாவது நவ என்றால் ஒன்பது என்று அர்த்தமாகும். இது ஒரு வடமொழி சொல்லாகும்.  அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் ஒன்பதாவது நாள் நவமி திதியாகும். அதுபோல அமாவாசைக்கு அடுத்து வரும் நவமியை சுக்கில பட்ச நவமி என்றும், பௌர்ணமிக்கு அடுத்து வரும் நவமி தினத்தை கிருஷ்ண பட்ச நவமி என்றும் அழைக்கபடுகிறது.

அஷ்டமி, நவமி, அமாவாசை போன்றவை நல்ல நாட்களா.. கெட்ட நாட்களா..

நவமியின் சிறப்புகள்:

பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் மகாவிஷ்ணு பல அவதாரங்களை எடுத்துள்ளார். அதில் ராம அவதாரம் மிக சிறப்பான அவதாரமாக கருதப்படுகிறது. அப்படி இராமபிரான் நவமி திதியில் பிறந்ததால் அவருடைய பிறந்த நாள் ‘இராம நவமி’ என்ற பெயரில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

நவமி அன்று செய்ய கூடாதவை:

பொதுவாக இராமபிரான் நவமி அன்று தான் அவதரித்தார். அப்படி சீதையை பிரிந்து அவர் பட்ட துயரங்கள் எல்லாம் நவமி திதியில் அவர் பிறந்த காரணத்தால் தான் நடந்தது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அந்த காரணத்தினால் தான் நவமி, திதிகளில் சுப காரியங்கள், திருமணம், கிரஹப் பிரவேசம், சொத்து வாங்குதல் போன்ற நல்ல செயல்கள் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று நம்  முன்னோர்கள் கூறியுள்ளனர்.

அதுபோல நவமி திதியில் மனதில் எதிர்மறையான எண்ணங்கள் தோன்றும்.

உதாரணமாக அடுத்தவரை தாக்குவது, பழி வாங்குவது, பதிலடி கொடுப்பது போன்ற எண்ணங்கள் மனதில் எழும் வாய்ப்புகள் அதிகம். எனவே அன்றைய தினங்களில் இறை வழிபாடு செய்ய வேண்டும். மேலும், வெள்ளிக்கிழமை வரும் நவமி திதியில் நல்ல காரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்.

அஷ்டமி அன்று இந்த தவறை செய்து விடாதீர்கள்.. அதேபோல் இதை செய்தால் நன்மை உண்டாகும்..

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள Pothunalam.com தளத்தை பார்வையிடவும்.

Advertisement