நவராத்திரி 9 நாட்களும் சொல்ல வேண்டிய எளிய மந்திரங்கள்.!

Advertisement

Navarathri Slogam in Tamil | நவராத்திரி மந்திரம்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் நவராத்திரி நாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்/மந்திரம் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். நவராத்திரி ஆனது, புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் கொண்டாடப்படும் விழா ஆகும். புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய நவராத்திரியை மகா நவராத்திரி என்று அழைப்பார்கள். இப்பண்டிகை ஆனது, 9 நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படும் இந்து பண்டிகை ஆகும்.

நவராத்திரியின் 9 நாட்களும் அம்பாளின் வெவ்வேறு உருவ சிலைகளை வைத்து வழிபடுவார்கள். இதனை கொலு வைத்தல் என்று கூறுவார்கள். எனவே, நவராத்திரியின் 9 நாட்களின் வழிபாட்டின்போது அம்பாளின் அருளை பெற சொல்ல வேண்டிய எளிய ஸ்லோகங்கள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம்.

நவராத்திரி எப்போது 2024.?

நவராத்திரி ஸ்லோகம்:

நவராத்திரி முதல் நாள் ஸ்லோகம்:

சைலபுத்திரி – ஓம் ஷம் ஷைலபுத்ரி தேவ்யாய நமஹ

நவராத்திரி இரண்டாம் நாள் ஸ்லோகம்:

பிரம்மச்சாரினி – ஹ்ரீம் ஸ்ரீம் அம்பிகையே நமஹ

நவராத்திரி மூன்றாம் நாள் ஸ்லோகம்:

சந்திரகாந்தா – ஐன் ஸ்ரீம் ஷக்தயே நமஹ

நவராத்திரி நான்காம் நாள் ஸ்லோகம்:

கூஷ்மாண்டா – ஐம் ஹ்ரீம் தேவ்யே நமஹ

நவராத்திரி ஐந்தாம் நாள் ஸ்லோகம்:

ஸ்கந்தமாதா – ஹ்ரீம் க்லீம் ஸ்வாமினியே நமஹ

நவராத்திரி ஆறாம் நாள் ஸ்லோகம்:

காத்யாயனி – க்லீம் ஸ்ரீ த்ரினித்ரயே நமஹ

நவராத்திரி ஏழாம் நாள் ஸ்லோகம்:

காலாத்ரி – க்லீம் ஐம் ஸ்ரீ காளிகாயே நமஹ

நவராத்திரி எட்டாம் நாள் ஸ்லோகம்:

மகாகெளரி – ஸ்ரீம் க்லீம் ஹ்ரீம் வரதாயே நமஹ

நவராத்திரி ஒன்பதாம் நாள் ஸ்லோகம்:

சித்திதாத்ரி – ஹ்ரீம் க்லீம் ஐம் சித்தாயே நமஹ

மேலே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகங்களை நவராத்திரியின் 9 நாட்களும் உச்சரிக்க வேண்டும்.

நவராத்திரியின் கடைசிநாளான விஜயதசமி அன்று வன்னி மரத்தை வழிபடுவதால் ஏற்படும் பலன்கள்.

நவராத்திரி நாளில் நினைத்து நடக்க சொல்ல வேண்டிய மந்திரம்:

ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ!
ஓம் ஸ்ரீ அன்னதாயை நமஹ!
ஓம் ஸ்ரீ வசுதாயை நமஹ!
ஓம் ஸ்ரீ ஸசாமர ரமாவாணி ஸவ்ய தக்ஷிண ஸேவிதாயை நமஹ!
ஓம் ஸ்ரீ கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி சேவிதாயை நமஹ!
ஓம் ஸ்ரீ சிவ சக்த்யைக்ய ரூபிண்யை நமஹ!
ஓம் ஸ்ரீ லலிதாம்பிகாயை நமஹ!

இந்த நாமாவளியை நவராத்திரி நாளில் காலையிலும் மாலையிலும் பதினோரு முறை உச்சரியுங்கள்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement