Navratri Date 2024 in Tamil | நவராத்திரி தேதி 2024
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் இந்த ஆண்டு நவராத்திரி எப்போது வருகிறது.? என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். நவராத்திரி என்பது, துர்கா தேவியின் நினைவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். நவராத்திரி ஆனது, புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் கொண்டாடப்படும் விழா ஆகும். புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய நவராத்திரியை மகா நவராத்திரி என்று அழைப்பார்கள். இப்பண்டிகை ஆனது, 9 நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படும் இந்து பண்டிகை ஆகும்.
நவராத்திரி காலத்தில் கொலு வைத்து தேவியை வழிபடுவார்கள். கோவில்களிலும் வீடுகளிலும் கொலு பொம்மைகள் வைத்து 9 நாட்கள் வழிபடுவார்கள். எனவே, இந்த ஆண்டு 2024 நவராத்திரி எப்போது தொடங்கி எப்போது முடிவடைகிறது என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்துகொள்ளலாம்.
நவராத்திரி என்றால் என்ன.?
நவராத்திரி என்பது, இந்துக்கள் கொண்டாடும் விரத பண்டிகளில் ஒன்றாகும். பெண் தெய்வத்தின் சக்தியை போற்றும் விதமாக, குறிப்பாக ஆதி பராசக்தியின் அம்சமான துர்கா தேவியின் நினைவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும்.
நவராத்திரி பண்டிகை வருடத்திற்கு நான்கு முறை வருகிறது. ஆனால், புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி ஆனது, மகா நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் பல இடங்களில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. 9 நாட்கள் தொடர்ச்சியாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. 9 நாட்களும் அம்பாளின் வெவ்வேறு வடிவங்களை வைத்து வழிபாடு செய்வார்கள்.
நவராத்திரி என்ற சொல் ஆனது, இரண்டு சம்ஸ்கிருத வார்த்தைகளில் இருந்து பெறப்பட்டது ஆகும். நவ என்றால் ஒன்பது என்று பொருள்படும். ராத்திரி என்றால் இரவுகள் என்று பொருள்படும்.நவராத்திரியின் கடைசிநாளான விஜயதசமி அன்று வன்னி மரத்தை வழிபடுவதால் ஏற்படும் பலன்கள்.
நவராத்திரி தொடங்கும் மற்றும் முடிவு தேதி 2024:
இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை ஆனது, அக்டோபர் 03 ஆம் தேதி வியாழன் கிழமை அன்று தொடங்கி அக்டோபர் 12, சனிக்கிழமை அன்றுடன் முடிவடைகிறது. அதாவது, விஜயதசமி தினத்துடன் முடிவடைகிறது. இவ்விழா தொடர்ந்து 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது.நவராத்திரி நாட்கள் 2024:
தேதி | நவராத்திரி பண்டிகை | திதி |
அக்டோபர் 03, வியாழன் | கதஸ்தாபனா | பிரதமை |
அக்டோபர் 04, வெள்ளிக்கிழமை | மா பிரம்மச்சாரிணி பூஜை | துவிதியை |
அக்டோபர் 05, சனிக்கிழமை | மா சந்திரகாண்டா பூஜை | திருதியை |
அக்டோபர் 06, ஞாயிற்றுக்கிழமை | மா கூஷ்மாண்ட பூஜை | சதுர்த்தி |
அக்டோபர் 07, திங்கட்கிழமை | மா ஸ்கந்தமாதா பூஜை | பஞ்சமி |
அக்டோபர் 08,செவ்வாய் | மா காத்யாயினி பூஜை | சஷ்டி |
அக்டோபர் 09, புதன்கிழமை | மா காலராத்திரி பூஜை | சப்தமி |
அக்டோபர் 10, வியாழன் | மா மஹா கௌரி பூஜை | அஷ்டமி |
அக்டோபர் 11, வெள்ளிக்கிழமை | மா சித்திதாத்திரி பூஜை, மஹா நவமி | நவமி |
அக்டோபர் 12, சனிக்கிழமை | விஜய தசமி | தசமி |
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |