நவராத்திரி வரலாறு | Navarathri Story in Tamil
இந்திய மக்களால் சிறப்பாக கொண்டாடப்படும் விழாகளில் ஒன்று நவராத்திரி. மக்களை கொடுமை செய்து வந்த மகிசாசுரனை அன்னை ஆதிபராசக்தி வதம் செய்து வெற்றியடைந்த விழாவினை தான் நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரி விழாவானது 9 நாள் தொடர்ச்சியாக அம்மனுடைய உருவங்களை வைத்து வழிபாடு செய்வதாகும்.
புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய நவராத்திரியை மகா நவராத்திரி என்று அழைக்கின்றனர். அன்னை சக்தி தேவியின் சிறப்பையும், வீரத்தையும் பாராட்டும் வகையில் இந்த நவராத்திரி விழா இந்திய மக்களால் சிறப்பாக 9 நாள் கொண்டாடப்படுகிறது. அன்னையின் சிறப்பை விளக்கும் புராண கதையையும் நவராத்திரி கொண்டாடுவதற்கான காரணங்களையும் இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்..
நவராத்திரி பண்டிகை உருவான கதை:
நவராத்திரி பண்டிகை 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. அதில் முதல் 3 நாட்கள் அம்பாளுக்கு உரித்தானது. அதாவது முதல் 3 நாட்கள் மாஹேஸ்வரி, கெளமாரி,வாராஹி என்ற பெயர்களில் அம்பாளுக்கு சிறப்புப் பூஜைகள் நடத்தப்படும்.
அடுத்த 3 நாட்கள் மகாலட்சுமிக்கு உரித்தான நாட்கள். அன்றைய நாட்களில் மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி பெயர்களில் மகாலட்சுமிக்கு பூஜைகள் நடத்தப்படும்.
புராண கதை:
- முன் ஒரு காலத்தில் வரமுனி என்ற முனிவர் ஒருவர் இருந்தார். அனைத்திலும் சிறந்து விளங்கினார் வரமுனி முனிவர். அவருக்கு நிகர் அவர்தான் என்னும் தலைக்கனம் அவருக்கு ஏற்பட்டது.
- அவரின் தலைக்கனம் மற்ற முனிவர்களை துச்சமாக மதிக்க செய்தது. அதன் விளைவாக ஒரு முறை அகத்தியரிடம் எருமை உருவத்துடன் அவ மரியாதையுடன் நடந்துகொண்டார். இதனால் கோபம் கொண்ட முனிவர் அவரை எருமையாக இருப்பாய் என்று சாபமிட்டனர்.
- ரம்பன் என்ற அசுரன் தவத்தில் ஈடுபட்டிருந்தான். அவன் தவத்தை போற்றி முன் தோன்றினார் அக்னி பகவான். ரம்பன், அக்னி பகவானிடம், தனக்கு சர்வ வல்லமை பெற்ற மகன் வேண்டும் என வேண்டினான்.
- ரம்பன் வேண்டியதை அருளிய அக்னி தேவன், ரம்பன்!, நீ கேட்ட வரத்தை அளித்தேன். நீ விரும்பும் பெண்ணின் மூலம் உனக்கு மகன் பிறப்பான் என்று கூறி மறைந்தார்.
- எருமை உருவம் கொண்ட அரக்கிக்கும் ரம்பன் என்பவனுக்கும் பிறந்தவன் தான் மகிசாசூரன் ஆவான். அதாவது வரமுனி அரக்கிக்கும் ரம்பன் என்பவனுக்கும் மகனாக பிறந்தான். அதனால் தான் மனித உடலுடனும் எருமைத் தலையுடனும் பிறந்தான்.
- இவன் பிரம்மனை குறித்து பல ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்து தனக்கு யாராலும் மரணம் நேரக் கூடாது, என்றும் அப்படி நேர்ந்தால் அது ஒரு பெண்ணால் தான் இருக்க வேண்டும் என்ற வரத்தைப் பெற்றான்.
- இதன்பின் அவன் தேவர்களைத் துன்புறுத்தத் துவங்கினான். அன்னை சக்தி பெண்ணுருவம் பூண்டு தேவர்களை காக்க பூமியில் பிறந்தார். சக்தி தேவி மகிசாசூரனுடன் போர் புரிந்து மகிசாசூரனின் எருமைத் தலையைத் தனது சக்கரத்தால் வெட்டி வீழ்த்தினார்.
- தேவர்கள் மகிழ்ந்தனர். மகிசாசூரனிடம் போராடிப் போர் செய்து தேவலோகத்தையும், பூலோகத்தையும் காப்பாற்றியதால் “மகிசாசுரவர்த்தினி” என்று சக்தியைப் போற்றினார்கள். ஒன்பது நாள் போர் செய்து பத்தாவது நாள் தேவி வெற்றி பெற்றதால் பத்தாம் நாள் விஜயதசமி என்று கொண்டாடப்படுகிறது.
- அம்பாள் மகிஷாசுரனை சம்ஹாரம் செய்தது அஷ்டமி தினத்தன்று. தேவர்கள் அம்பாளை வணங்கி வழிபட்டது அஷ்டமிக்கு அடுத்த நாளான நவமி தினத்தன்று. தேவிமணித்வீபம் (மூலஸ்தானம்) சென்றது அதற்கு அடுத்த நாளான தசமி தினத்தன்று. இந்த நாட்கள்தான் நவராத்திரியின் கடைசி 3 நாட்களாகக் கொண்டாடப்படுகிறது.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |